கட்டுமான திட்ட அனுமதி - ஊராட்சி தலைவர்கள் வழங்க முடியுமா?

22 ஜனவரி 2024   05:30 AM 06 பிப்ரவரி 2020   03:47 PM


இவர்களில் பெரும்பாலனோர், அரசியல் கட்சிகளின் பின்னணியில் வந்துள்ளனர். முதல் முறையாக, 50 சதவீத இடங்களில், பெண்கள் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள், பொதுவாக அந்தந்த பகுதிகளில், அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவே கவனம் செலுத்துவர். தற்போது அமலுக்கு வந்துள்ள, பொது கட்டட விதிகளின்படி, ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், 7,000 சதுர அடி பரப்பளவு வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கலாம். இதற்கான அதிகார பகிர்வை, உள்ளாட்சிகளுக்கு வழங்கி, டி.டி.சி.பி., எனப்படும், நகர், ஊரமைப்பு துறை, 2019 செப்டம்பர், 24ல் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் செயல்பட, புதிய ஊராட்சி தலைவர்கள், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், தொழில் நுட்ப ரீதியான சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு வருபவர்கள் அனைவரும், தொழில்நுட்ப ரீதியாக, கட்டுமானத் திட்ட அனுமதிக்கான ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடியவர்களாக இருப்பர் என்று, எதிர்பார்க்க முடியாது.

எனவே, இவர்களுக்கு உதவ ஊராட்சிகளில் பொறியாளர்கள், நகரமைப்பு வல்லுனர்களை நியமிக்கும்படி, மத்திய அரசு, 2012ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொறியாளர்கள் இருப்பர். ஆனால் ஊராட்சிகளில் எழுத்தர் நிலையிலேயே அலுவலர்கள் உள்ளனர். இந்த பின்னணியில், புதிய ஊராட்சி தலைவர்கள், இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்ள போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் ஊரக பகுதிகளில் பதவிக்கு வந்துள்ள, புதிய ஊராட்சி தலைவர்களால், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க, டி.டி.சி.பி., முன்வருமா? 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066747