இடிக்கப்பட்ட கொச்சி அடுக்குமாடி தமிழகத்திற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி? பினராய் விஜயன்

25 ஜனவரி 2024   05:30 AM 06 பிப்ரவரி 2020   03:43 PM


உண்மை தான். ஆனால் ஏரி, நீர் நிலைகள் எங்களுக்கு அதை விட காஸ்ட்லி ‘பதில் வருகிறது கேரள முதல்வர் பினராய் விஜயனிடமிருந்து.. என்ன ஆச்சு அந்த அடுக்குமாடி டவர்களுக்கு? எங்கே துவங்கியது விதிமீறல்?.

ஒரே விநாடி. சக்தி வாய்ந்த வெடிமருந்து. அவ்வளவுதான் மொத்த கட்டடமும் புழுதிக்காடானது.  அந்த திகைப்பு அடங்குவதற்குள் இன்னொரு கட்டடம். அதுவும் பனால். 500 கோடி சொத்து இடித்து தரைமட்டம். ஒட்டு மொத்த ஊடகங்களும் காமிரா சகிதம் போய் படம்பிடித்து லைவ் ரிலே செய்தன. “இவ்வளவு காஸ்ட்லியான  குடியிருப்பை இடித்து விட்டீர்களே?’ என்றால், உண்மை தான். ஆனால் ஏரி, நீர் நிலைகள் எங்களுக்கு அதை விட காஸ்ட்லி ‘ பதில் வருகிறது கேரள முதல்வர் பினராய் விஜயனிடமிருந்து.. என்ன ஆச்சு அந்த அடுக்குமாடி டவர்களுக்கு? எங்கே துவங்கியது விதிமீறல்?.

ஆறுகளை, மண்ணை, கனிம வளத்தைக் காக்கும் கேரளஅரசு இது போல் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்துத் தள்ளுவதில் ஆச்சரியமில்லை. அங்கே, நீர்நிலைகளுக்கு அருகே கான்கிரீட் கொண்டு கட்டப்படும் எந்தக் கட்டடமும் 1 கிமீ தொலைவிற்குபின் தான் இருக்க வேண்டும்.( தமிழ்நாட்டில் ?) சென்னை, பெங்களூர். ஹைதராபாத் போன்ற ஹாட் சிட்டிகளில் வானளாவிய குடியிருப்புகளைக் கட்டி வரும் 32 ஆண்டுகள் அனுபவம் மிக்க முன்னணி கட்டுமான நிறுவனமான ஜெயின் ஹவுசிங் & கன்ஸ்ட்ரக்rன் நிறுவனம் (இந்தப் பெயரைக் கூட எந்த ஊடகமும் வெளியிட வில்லை), ஜெயின் கோரல் கோவ் (17 மாடி)  என்னும் புராஜக்டையும், கேரளாவைச் சேர்ந்த கேபி வர்க்கி & விஎஸ் பில்டர்ஸ்   என்னும் கட்டுமான நிறுவனம் கோல்டன் காயலோரம் என்னும் (17 மாடி) புராஜக்டையும், ஹோலி ஃபெய்த் பில்டர்ஸ் & டெவலப்பர்ஸ் என்னும் கட்டுமான நிறுவனம் எச்2ஓ ஹோலி ஃபெய்த் (19 மாடி) என்னும் புராஜக்டையும்,  எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஆல்ஃபா வென்சர்ஸ் என்னும் நிறுவனத்தின் ஆல்பா செரீன் (16 மாடி) என்னும் புராஜெக்டையும் மாரடு மாவட்டத்தில் அடுத்தடுத்து கட்டி முடித்தன.

மராடு மாவட்டம் நெட்டூரில் என்ன சிறப்பு என்றால் வடக்கே எர்ணாகுளம் தெற்கே பனங்காடு என வற்றாத நீர்வளமும், பசுமைக் காடும் சூழ்ந்த பகுதி மராடு, நெட்டூர். சுற்ஷீலும் ஏரிகள், ஆறுகள், நீர்வழி, கொச்சி துறைமுகம், மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலை. தொலைவில் கடல்... இதைப்பார்த்த பன்மாடிக் கட்டட கட்டுநர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் புராஜெக்டுகளை முறைகேடான வழியில் அனுமதி வாங்கி கட்ட ஆரம்பித்தனர். 

சம்பாக்காரா ஆறு ( தேசிய  நீர்வழி 3) ஓரம் எதிரே பொக்காளி ஏரி, பக்கத்தில் தெவரா கேனல் என் நீர்வளம் சூழ்ந்த பகுதியில்  கோல்டன் காயலோரம் புராஜெக்டும் அங்கிருந்து  சில கி.மீ தூரத்தில் இன்னொரு நீர்வழிக்கு மிக அருகில் ஜெயின் கோரல் கோவ் புராஜெக்டும்., அதற்கு பக்கத்தில் குந்தனூர் பாலம் அருகே, எச்2ஓ ஹோலி ஃபெய்த் குடியிருப்பும், ஆல்பா செரீன் குடியிருப்பும் அமைந்திருந்தன.

ஒரு ச.அடி ரூ.4000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு 1429 ச.அடி பரப்புடைய 3 படுக்கையறை கொன்ட வீடு 55.66 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
ஒரு டவர் கட்டடத்தில் 122 வீடுகள் என மொத்தம் 4 டவரில் 400-க்கும் 
மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.   இந்த கட்டிடங்களில் மொத்தம் 240 குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

“எழில் கொஞ்சும் நமது  ஊர் இப்படி செல்வந்தர்களின் வணிகஸ்தலமகிறதே’ என்று வருத்தப்பட்டு உண்மையான கேரள குடிமகன் ஒருவர் இந்த நான்கு கட்டுமான புராஜக்டுகள் மீது வழக்கு போட, தொடங்கியது பிரச்சனை.

அரபிக்கடலோரம் கோபுரங்கள் போல கம்பீரமாக காட்சியளித்த இந்த கட்டிடங்கள் அனைத்தும் கடலோர ஒழுங்குமுறை மண்டல் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு, 4 கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்க 2019 ஆம்  ஆண்டு மே மாதம் கேரள அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால், இதை எதிர்த்து இந்த நான்கு கட்டுமான நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்தன். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 கட்டிடங்களையும் இடித்து அகற்றுமாறு கடந்த செப்டம்பர் 27ந் தேதி உத்தரவிட்டது. மேலும் அங்கு வீடு வாங்கியவர்களுக்கு ரூ. 25 லட்சம் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை அக்டோபர் 18ந் தேதி 
முதல் கேரள அரசு மேற்கொண்டது. முதலில் கட்டிடங்களில் மின்சாரம், குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள் வெளியேறினார்கள்.

பின்னர், கட்டிடங்களில் இருந்த ஜன்னல், கதவுகளை அகற்றும் பணிகள் தொடங்கின. பின்னர் கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பதற்காக கடந்த ஒரு மாதமாக அவற்றில் வெடி மருந்துகள் நிரப்பும் பணி நடைப்பெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து 2 கட்டிடங்களை 10.01.2020 & 12.01.2020 ஆகிய நாட்களில் இரு தவணையாக  இடிப்பது என முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி 4 கட்டங்களும் இடித்து தரைமட்ட
மாக்கப்பட்டது.

காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு கடுமையான பாதிப்பு, மற்றும் கட்டுமானத்திற்கு அனுமதித்த கேரள அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படாது இருத்தல் போன்ற விமர்சனங்கள் ஒரு புறமிருந்தாலும், சுற்றுச்சூழலைக் காக்கவும் பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கேரள அரசு யாருக்கும் வளைந்து கொடுக்காமல் செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள். (இதனால் பில்டர்களுக்கு ஒரு ந­ஷ்டமுமில்லை. கட்டடத்தை விற்று காசாக்கி விட்டார்கள்.

நுகர்வோரும் வீட்டுக் கடன கொடுத்த வங்கிகளும் தான் மல்லுக்கட்ட வேண்டும் என ஒரு தரப்பும், விற்காத வீடுகள் பல இந்த புராஜெக்டுகளில் இருப்பதால், கட்டுநர்களுக்கும் இதில் பாதிப்பு உண்டு, மேலும் அவர்களின் நற்மதிப்பு இதனால் கெடுகிறது இன்னொரு தரப்பும் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்).
இதுபற்றி குடியிருப்பு சந்தை ஆய்வாளர் திரு. ராமநாதன் சொல்லும்போது, “”இது கிட்டத்தட்ட மெளலிவாக்கம் இடிந்த கட்டடத்தில் வீடு வாங்கிய மக்கள் அவதிப்பட்ட சம்பவம் போல உள்ளது, அது தானாக இடிந்தது. இது இடிக்கப்பட்டது. அவ்வளவு தான் வித்தியாசம்.

ஆனால் கேரளாவில் ஒரு வீட்டுக்கு ரூ.25 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். அது கூட மெளலி வாக்கத்தில் வீட்டை புக் செய்தவர்களுக்கு கிடைக்க வில்லை. ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. எப்படி அனுமதித்தார்கள்? எனத் தெரியவில்லை. இனி, வீடு வாங்கும் மக்கள் நீர்நிலைப்பக்கம் அருகே குறைந்தது 1 கிமீ தூரத்திற்கு அப்பால், இருக்கும்படி பார்த்து வீடு வாங்க வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டிலும் நீர்நிலைகள், கடற்கரை அருகே வீடுகள் கட்டப்படுகின்றன’’ என்றார்.

சுற்றுசூழல் ஆர்வலர் பிரதிபா கூறும்போது, “”கேரள அரசு தன் சுற்றுசூழலைக் காப்பதில் உள்ள கடமையை மற்ற மாநிலங்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறது. நீங்கள் பில்டர் களை மட்டும் குறைகூற முடியாது. சென்னை புற நகரில் ஒரு காலத்தில் 100 ஏக்கரில் விரிந்து பரந்திருந்த ஆதம்பாக்கம் ஏரி இப்போது  10 ஏக்கர் கூட இல்லை. அத்தனை நிலத்தையும் ஆக்கிரமித்தது பில்டர்கள் மட்டும் தானா? எவ்வளவு மக்கள் வீடு கட்டி குடியிருக்கிறார்கள் தெரியுமா? பள்ளிக்கரணை சதுப்புநிலம் என்ன ஆயிற்று? அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து லஞ்சம் பெற்று கொடுத்த அனுமதிகள்தான் சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க உள்ள பசுமைச் சுற்றுச்சூழலைக் சீரழித்துக் கொண்டிருக்கின்றன.

கேரளாவில் நீர்வழித் தடம் அருகே ஓரமாய் தான் கட்டி இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஏரிக்குள்ளேயே லே அவுட் போடுகிறார்கள். கட்டுமானத் திட்டங்கள் போடுகிறார்கள். ஏரி ஆக்கிரமிப்பு பற்றி ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பேசுகிறது. என்ன வேடிக்கையயன்றால் அந்த தொலைக்காட்சி நிறுவனக் கட்டடமே ஒரு ஏரியின் மீது தான் கட்டி இருக்கிறது. இவ்வளவு ஏன்? தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஆறு, ஏரி, நீர்வழித் தடம் போன்றவற்றை ஆக்கிரமித்து எத்தனை புராஜெக்டுகள் உருவாகி வருகிறது?  என்கிற டேட்டா அரசிடம் இருக்கிறதா? எனக் குமுறுகிறார் பிரதிபா.
எல்லோருக்கும் வீடு அவசியம்தான். ஆனால் அது எதன் மீது ? என்பது அதனிலும் அவசியம். 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068078