மெட்டல் பில்டிங் ஃபாஸ்ட்னர்களில், “தானே துளையிடும் திருகாணி’யின் (செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு - (Self Drilling Screw) முக்கியத்துவம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
கடினமான வேலையை மிக எளிதாக்கிவிட்ட செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருவின் பயன்பாடுகள் பற்றி உலகின் முன்னணி செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு தயாரிப்பான கோரோஷீல்டை தைவானியிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து, இந்தியா முழுக்க விற்பனை செய்யும் சென்னையைச் சேர்ந்த ஏசன்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குநர்
திரு. அப்பாஸ் அவர்களிடம் கேட்டபோது,
“”இன்று மெட்டல் பில்டிங் துறை வளர்ச்சி யடைந்திருக்கிறது என்றால் அதற்கு செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருவின் பயன்பாடு மிகவும் அவசியமானது ஆகும். ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு கூரைத்தகடை இரும்புச் சட்டத்தில் பொருத்துவதற்கு கூரையின் மேல் இரு ஆட்களும் கூரையின் கீழ் இரு ஆட்களும் தேவைப்படுவர். தரை முதல் கூரைக்கு லேடர், வொர்க் ப்ளாட்பார்ம் போன்றவற்றை தேடவேண்டும். நேர விரையம், ஆள் விரையம் இந்த முறையில் அதிகம். செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு வந்த பிறகு ட்ரில்லிங் மி´னில் திருகாணியை பொருத்தி விட்டு இரும்பு கூரையின் மேல் பிடித்து ஒரே அழுத்தத்தில் திருகாணி கூரை மற்றும் இரும்பு சட்டத்தை துளைத்துவிட்டு மெட்டல் கூரையைப் பொருத்திவிடுகிறது.
இன்று நாடுமுழுக்க 98% இப்படி தான் மெட்டல் பில்டிங்கில் ஃபேப்ரிகேஷன் பணிகள் செய்யப்படுகிறது. சிறியது முதல் பிரம்மாண்டமான மெட்டல் ரூஃபிங் மற்றும் மெட்டல் பில்டிங் பணிகளுக்கு செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு ‘அச்சாணி’யாக பயன்படுகிறது’’.
இந்த துறையில் உங்கள் நிறுவனத்தின் அனுபவத்தை பற்றி கூறுங்கள்..
“”இந்தியாவில் மெட்டல் பில்டிங் துறைக்கு செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருவின் பயன்பாடு நிச்சயம் தேவை என 18 ஆண்டுகள் முன்பே கணித்திருந்தார் எனது தந்தை. அப்போதெல்லாம் செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை. தைவானில் ‘கோரோஷல்ட்’ என்கிற பிராண்ட் செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருவில் முன்னணி பிராண்டாகும்.
எனது தந்தை முதல்முறையாக தைவானிலிருந்து ‘கோரோஷல்ட்’ செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருவை இறக்குமதி செய்து நாடுமுழுக்க சப்ளை செய்தார்.
இன்று ஒரு நாளைக்கு நாடு முழுக்க 25 டன் வரை சப்ளை செய்யும் அளவிற்கு ஏசன்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் வளர்ந்திருக்கிறது’’.
கோரோஷல்ட் பிராண்டை பற்றி சில வார்த்தைகள்
“”இது சர்வதேச தரம் வாய்ந்த செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு ஆகும். ‘கோரோUல்ட்’ நிறுவனம் தரமான மூலப்பொருள் மற்றும் அதிநவீன சர்வதேச தரம் வாய்ந்த தொழிற்நுட்பத்தின் மூலம் பல்வேறு கட்ட தரப் பரிசோதனைகளுக்கு பிறகு தயாரித்து நமக்கு அளிக்கிறது. இது எளிதில் ‘துரு’ பிடிப்பதிலை. இன்று நாடு முழுக்க உள்ள பில்டர்கள், காண்ட்ராக்டர்கள், ஃபேப்ரிகேட்டர்கள் அனைவரும் தங்கள் ஃபேப்ரிகேஷன் பணிகளுக்கு விரும்புவது
கோரோஷல்ட் பிராண்ட் செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு மட்டும்தான். அதை இந்தியாவிற்கு முதன்முதலில் கொண்டு வந்ததும் இன்றளவும் செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குரு விற்பனையில் முதன்மையான இடத்தில் இருப்பதும் எங்கள் நிறுவனம் மட்டுமே.
இந்தியாவில் உள்ள ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் எங்கள் டீலர்கள், விற்பனையாளர்கள் இருக்கிறார்கள்.
எங்களிடம் 12 மிமீ முதல் 250மிமீ வரையிலான பல்வேறு அளவுகளில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருக்கள் கிடைக்கும். இதை இந்தியாவில் எந்த மூலையிலும் நீங்கள் வாங்கலாம் என்பது தான் எங்கள் சிறப்பு’’.
ஏசன்ஸ் எண்டர்பிரைசஸின் ‘ரியல் பாஸ்ட்னர்ஸ்’ என்கிற தயாரிப்பு பற்றி...
“”ரியல் பாஸ்ட்னர்ஸ் என்பது எங்களது தேவைக்காக தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாகும். இன்டீரியர் பணிகள், மாடுலர் கிச்சன் உள்ளிட்ட மர வேலைகள் சீலிங் பணிகளுக்கு, ரியல் பாஸ்ட்னர்ஸ் முதன்மையான பிராண்ட் ஆகும். அதாவது வெளிப்புற வேலைகள் மற்றும் மெட்டல் பில்டிங் & கூரைகளுக்கு கோரோஷல்டும் உட்புறப் பணிகளுக்கு ரியல் பாஸ்ட்னர்ஸும் ஏற்றவை’’ என்கிறார் திரு. ஹூசேபா அப்பாஸ்.
ஏசன்ஸ் என்டர்பிரைசஸின் கோரோஸஷல்ட் மற்றும் ரியல் பாஸ்ட்னர்ஸின் செல்ஃப் ட்ரில்லிங் ஸ்குருக்ளை மொத்தமாக பெற டீலர் ஷிப்பிற்கு அணுக :
ஏசன்ஸ் என்டர்பிரைசஸ், ரஸியா மேன்ஷன், எண் : 68 & 70 , வேளச்சேரி ரோடு, சின்ன மலை , சைதாப்பேட்டை,சென்னை - 600015.
M : 99401 46350, E: info@asons.in, W : www.asons.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067980
|