வீட்டு உபயோகத்திற்கான சாதாரண செப்டிக் டேங்க் கட்டுவதற்கே உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை செலவாகும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு தனிச் செலவு வேறு. இதற்கான வியத்தகு தீர்வைத் தருகிறது கோவையை சேர்ந்த மேக் இந்தியா லிமிடெட் நிறுவனம்.
35 ஆயிரம் ரூபாய் செலவில் மிக எளிமையான முறையில் இந்நிறுவனம் பயோ டேங்குகளை வடிவமைத்திருப்பதோடு இதை நாம் எப்போதுமே சுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும் கூறி நம்மை பிரம்மிக்க வைக்கிறார் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. மனுநீதி மாணிக்கம்.
இந்த தொழில்நுட்பம் பற்றி கூறுங்கள்..
‘‘எங்கள் பயோ டைஜஸ்டர் செப்டிங் டேங்க் தொழிற்நுட்பம் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் (DRDO) உலக காப்புரிமை பெற்ற தொழில் நுட்பம் ஆகும்.
பிராணவாயு இல்லாமல் வாழும் நுண்ணுயிர் மனித கழிவை உணவாக சாப்பிடும். இது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் பெட்டகத்தில் வாழ்ந்து கொண்டு மனித கழிவை உணவாக எடுத்து கொண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் நுண்ணுயிர். இந்த கழிவு நீர் பெட்டகத்திலிருந்து வெளிவரும் நீர் செடிகளுக்கு உகந்தது. துர்நாற்றம் சிறிதும் இருக்காது. இதை மேலும் சுத்திகரித்து எல்லா உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்.
இந்த பயோ செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் தண்ணீரில் எந்த ஒரு துர்நாற்றமும் இருக்காது. நிலத்தடி நீர் கெட்டுப் போகாது. அதிகபட்சம் பத்து பேர் கொண்ட வீட்டில், எங்களது உயர்தர உறுதியான பயோ செப்டிக் டேங்குகள் கட்டுவதற்கு வெறும் ரூ.34,000 மட்டுமே செலவாகும்.
வரி மற்றும் போக்குவரத்து செலவுகள் தனி. தமிழகம் முழுவதும் பல இடங்களில் கழிவு நீரை என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். அனைவரும் இதை பயன்படுத்தலாம். மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளுக்கு இதனால் பெரும் பயன் உண்டாகும்’’.
எது போன்ற கட்டடங்களுக்கு உங்கள் பயோ டேங் ஏற்றது?.
‘‘வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் எல்லாவிதமான கழிப்பறை உள்ள கட்டிடங்களுக்கும் இது ஏற்றது. இங்கு எங்கள் தயாரிப்பான நுண்ணுயிர் ஜீரண சக்தி (MAK - 200) பயோ டேங்கை பயன்படுத்தலாம்.
பொது சாக்கடை நீர், ஏரி மற்றும் குளம்
மேலாண்மைக்கு நுண்ணுயிர் ஜீரண சக்தி (MAK - 250) ஐ தயாரித்து வழங்குகிறோம். அதைப் போலவே, மக்கும் கழிவு மேலாண்மைக்கு எங்களது நுண்ணுயிர் ஜீரண சக்தி (MAK - 340) ஐ பயன்படுத்தலாம்.
ஒரே ஒருமுறை பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்கில் நிரப்பப்படும் இந்த பாக்டீரியா வாழ்நாள் முழுக்க செயல்படும். எந்த ஒரு பராமரிப்பும், பராமரிப்புச் செலவும் செய்ய வேண்டியதே இல்லை’’.
இந்த பயோ டைஜஸ்ட்ர் தொட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு பற்றி
‘‘தனிநபர்களை விட நிறுவனங்கள் இதை ஆர்வத் துடன் வாங்குகிறார்கள். ITC Limited, Roots, HP Petroleum, VVV & Sons, Tata Coffee Ltd, மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள், ரயில்வே / விமானப்படை குடியிருப்பு மையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் 700+ க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் பயோ டைஜஸ்டர் தொட்டிகள் மூலம் சுத்தமான நீரை மனித கழிவுகளில் இருந்து சுத்திகரித்து தந்து வருகிறது’’.
உங்கள் தொழிற்சாலை... மற்றும் தரக் கொள்கை குறித்து....
‘‘MAK Group of Companies, ISO 9100:2018 தரச் சான்று பெற்ற நிறுவனம் ஆகும். 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனம் 1980- களிலேயே இந்திய தொழில் நுட்பத்தை உலகுக்கே (MAKE IN INDIA) அறிமுகப்படுத்தியது.
சென்னை போன்ற பெருநகரங்களில் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கே 7500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்காதவர்கள், ஒவ்வொரு முறை அந்த சாதாரண செப்டிக் டேங்குகள் நிரம்பும் போது, அதை சுத்தம் செய்ய வேண்டிய செலவுகள் மிக மிக அதிகம். ஏன் இந்த வேண்டாத செலவுகள்? நகரவாசிகளும், புறநகர்வாசிகளும் சீக்கிரமே பயோ டைஜஸ்ட்ர் டேங்குகளுக்கு மாற வேண்டும்’ என்கிறார் திரு. மனுநீதி மாணிக்கம்.
இவர்களது முகவரி
மேக் இந்தியா லிமிடெட் ,
திரு.மனுநீதி மாணிக்கம்
7/41,அவினா´ ரோடு, கோல்டுவின்ஸ், சிவில்ஏரோட்ரோம் போஸ்ட், கோயம்புத்தூர் - 641014.
தொலைபேசி : 95 00 99 17 87
E: bioprojects@makindia.co.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067978
|