கட்டடம் டூ கட்டடம் கான்க்ரீட் பாலம்

24 ஜனவரி 2024   05:30 AM 16 டிசம்பர் 2019   06:17 PM


கட்டடத்துறையில் இனி என்ன செய்ய மிச்சம் இருக்கிறது எனத் தெரியவில்லை. கட்டடக்கலை இனி அடுத்த பரிமாணம் நோக்கிச் செல்ல இருக்கிறது. கட்டடங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தான். அந்த பரிமாணம் .


வெவ்வேறு பயன்பாடுகளை உடைய பல கட்டடங்களுக்குச் செல்லும்போது ஒவ்வொரு கட்டட மாக ஏறி இறங்கத் தேவையின்றி பில்டிங் டூ பில்டிங் செல்வதற்கு பாதை இருந்தால் அது எத்தனை ஈஸியாக இருக்கும்?. இது பற்றிச் சில மாதங்களுக்கு முன் ‘ஹாங்காங்கில் பில்டிங் பாத் வே’  என்பது பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

 

அதாவது முன்னரே கட்டி முடிக்கப் பட்ட பல கட்டடங்களை குறிப்பிட்ட ஒரே தளங்களில்  கான்கிரீட் பாலம் ஒன்றைக் கட்டி அதன் மூலம் எல்லா கட்டடங்களையும்  இணைத்து வழி ஏற்படுத்துதல், இதனால் பில்டிங் டூ பில்டிங்  செல்ல வேண்டியவர்கள் தெருவுக்கு இறங்கத் தேவையின்றி பில்டிங் பாத் வே வழியாகவே செல்கிற புது கட்டுமான உத்தி ஹாங்காங்கில் வரவேற்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தோம்.

 

இதே  ஐடியாவை சீனாவும் பயன்படுத்தத் துவங்கிவிட்டது. ஐடியா உபயம் ஹாங்காங் தான். ஹாங்காங் கட்ட கலைஞர் ஏய்டாஸ் (Aedas) என்பவர்தான் இதை வடிவமைத்து உள்ளார். இதில் என்ன முக்கிய வேறுபாடு என்றால். ஒரே காம்பவுண்டில் உள்ள நான்கு டவர்களை வெவ்வேறு தளங்களில் இணைக்கக் கூடியதாக இது  வடிவமைக்கப்படுகிறது.

 

சீனாவின்  யஹன்குய்ன் (Hengqin) என்னும் தீவு நகரத்தில் சிஆர்சிசி பிளாசா என்னும் இந்த புராஜெக்ட் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

குடியிருப்பு,அலுவலகம், ஹோட்டல்,ஷாப்பிங் மால், இன்டோர் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம், கிட்ஸ் பிளே ஏரியா, பள்ளிகள், கல்லூரி, தியேட்டர், மருத்துவமனை, வங்கி,கண்காடிச் & கருத்தரங்குகள், பூங்கா  என கலவையாக பல பயன் பாடுகளுக்கான தேவைகள் இந்த கட்டடங்களில் தனித்தனியே பகுக்கப் பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் இந்த நான்கு கட்டடங்களில் உங்களுக்கு கிடைக்காத பொருள் அல்லது சேவை எதுவுமே இல்லை எனச் சொல்லலாம். ஆனால், அந்த பொருள்களை, சேவையைப் பெற கட்டடம் விட்டு கட்டடம் செல்ல ஒவ்வொரு முறையும்  தரை தளம் செல்ல வேண்டுமல்லவா? அதைத் தவிர்க்கத்தான் இந்த பில்டிங் 
பாத் வே...இதை வான் பாலம் (Sky Bridge) என அழைக்கிறார்கள். 

 

இந்த பாலம் தரை தளத்திலிருந்து துவங்குகிறது . கட்டடத்தைச் சுற்றி ஒரு ராட்சத பாம்பு போல அரவணைத்து வளைவுகளும்., திருப்பங்களும் கொண்டு பக்கத்து கட்டடத்துக்கு செல்கிறது. பாலம் சாய் தளம் என்பதால்.. மிக எளிதாக நடந்து செல்லலாம். கட்டத்தின் இருபதாவது தளத்தில் இந்த வான் பாலம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து இன்னொரு பில்டிங் செல்ல வழி உண்டு. கீழே இறங்கத் தேவையில்லாத்தால், பெருமளவு எஸ்கலேட்டர் பயன்பாடு குறைகிறது. நேரமும் மிச்சமாகிறது. இந்த கான்கிரீட் பாதை மட்டுமே மூன்று அடுக்குகளாக 6 கி.மீக்கு நான்கு டவர்களையும் இனைப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு டவரில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் கீழே செல்ல வேண்டியதில்லை. பார்க்கிங் சென்று காரை எடுக்கத் தேவையில்லை.. இதனால் எரிபொருளும் தேவைப்படாது.  

 

ஒரு கட்டடத்தில் குடும்ப வாழ்க்கை , பக்கத்து கட்டடத்தில் அலுவலகம் அல்லது தொழில், இன்னொரு கட்டடத்தில்  மனம் மகிழ விளையாட்டுகள், பூங்காக்கள். தீம் பார்க்குகள்,கிளப்புகள்., நான்காவது  கட்டடத்தில் மருத்துவமனை., வங்கிகள், தியேட்டர்கள் என சகல வசதிகளும் அருகாமை கட்டடத்திலேயே  இருப்பதால் அவர்கள் உலகம் இந்த நான்கு கட்டடங்களில் முடிந்து விடுகிறது.  

 

வீடுகள் தனித்தனியே இருந்த காலம் போய் கேட்டட் கம்யூனிட்டி என்ற காலம் வந்தது.  இனி வீட்டிலிருந்து எழுந்து ரெடியாகி, எதிர்பில்டிங்கில் வேலை செய்து விட்டு, பக்கத்து பில்டிங்கில் சென்று விளையாடிவிட்டு, படம் பார்த்து விட்டு,  அப்படியே வரும் போது இன்னொரு பில்டிங்கில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு  பொடி நடையாக நடந்து வீட்டுக்கு வந்து விடலாம்.. 

 

மகனோ , மகளோ  அங்கேயே ஏதாவது ஒரு ஸ்கூல் அல்லது கல்லூரியில் சேர்ந்து பட்டமும் பெற்று விடலாம். தரையில் காலை வைக்காமலேயே ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும் சௌகரியமாக வாழ வழி செய்கிறது இந்த பில்டிங் கனெக்rன் சிஸ்டம். 2022 இல் கட்டுமானப்பணிகள் நிறைவடைய உள்ள, 2 லட்சம் ச.மீ பரப்புடையை இந்த புராஜெடில் வீடு, அலுவலகம் வாங்க கடும் போட்டி நடக்கிறது.. 

 

ஹாங்காங்கிலிருந்து மெல்ல சீனாவுக்கு வந்திருக்கும் இந்த கட்டாய கட்டட கான்கிரீட் பாலம் என்னும் டெக்னிக் விரைவில் கிழக்காசிய நாடுகள் முழுக்கவும்., மக்கள் தொகை மிகுந்த நாடுகளிலும், வாகனப் பெருக்கம் மிகுந்த நாடுகளிலும் பரவும் என எதிர்பார்க்கலாம்.  

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067979