தொங்கும் ரயிலில் ஜாலி பயணம்

22 ஜனவரி 2024   05:30 AM 16 டிசம்பர் 2019   04:23 PM


மெட்ரோ ரயிலில் சென்னை மக்கள் பறக்கத்துவங்கியிருக்கும் இவ்வேளையில் சீனாவும் ஒரு ரயில் சேவையைத் துவங்கியுள்ளது. இது மோனோவும் இல்லை, மெட்ரோவும் இல்லை. ஹாங்கிங் டிரெயின். அதாவது தொங்கும் ரயில். நம்மூர் பழனி மலை ரோப்காரை விட சேஃப்டி, அட்வான்ஸ் இது.

 

இதன் முதலாவது தொங்கும் ரெயிலின் சோதனை ஒட்டம், வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்டுவில், இந்த ரெயிலின் சோதனை ஒட்டம் நடைபெற்றது.

 

லித்தினியம் பேட்டரி மின்சக்தியில் இயங்கும் இந்த ரெயில், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.300 கிலோ மீட்டர் ரெயில் பாதையில், இந்த ரெயிலின் சோதனை ஒட்டம் வெற்றிகரமான நடந்ததாக அறிவிக்கப் படுள்ளது.


இந்த ரெயில் 120 பயணிகள் பயணிக்க முடியும் என இந்த திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரான ஜியாடெங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாய் வான்மிங் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கிலோ மீட்டர் சுரங்க ரெயில் பாதை அமைக்க செலவாகும் தொகையை விட 5-ல் ஒரு வீதமே, தொங்கு ரயில் பாதையை அமைக்க செலவாகும் என ஜாய் வான்மிங் கூறியுள்ளார்.

 

அத்துடன் லித்தினியம் பேட்டரிகள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ரெயில் பாதையின் நீளத்தை, மேலும் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு, விரிவாக்க உள்ளதாகவும் பின்னர், 100 கி.மீ. தூரத்திற்கு, இந்த ரயில் பாதை விரிவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது போன்ற ரெயில்கள், சீன மக்களுக்கு மிகுந்த பயனளிப்பது மட்டும் இல்லாமல் ஒரு ஜாலி ரைடாக அமைந்து, குழந்தைகளையும் பெரிதும் மகிழ்விக்கிறது.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066814