ரோடு ரோலர், எர்த் மூவர் போன்றவை அதிகபட்சம் ஒரு மிதிவண்டி வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களாக நாம் பார்க்கிறோம். அதனுடைய எடை மற்றும் பயன்பாடுகளுக்கு காரணமாக அது அவ்வாறு வடிவமைக்கப் படுகிறது. ஆனால், கட்டுமான வாகனங்கள் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்ற ஜே.சி.பி. நிறுவனம் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய டிராக்டர் ஒன்றை தயாரித்து கட்டுமான இயந்திர உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறது.
இந்தியாவில் 200 கி.மீ. வேகத்தில் சொகுசு காரே சாலையில் செல்லாது என்ற போது 5 டன் எடை உடைய ஒரு கட்டுமான இயந்திரம் எப்படி 200 கி.மீ வேகத்தில் செல்லமுடியும் என்றால், ஜே.சி.பி. தலைவர் அந்தோனி பாம்போர்ட் தான் காரணம்.
டிராக்டர் என்றாலே மெதுவாக தான் செல்ல வேண்டுமா? அதிவேகத்தில் பறக்கக்கூடிய டிராக்டரை வடிவமைக்க தனது குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார் பாம்போர்ட். இதனால் ஜே.சி.பி. 8000 சீரிஸ் டிராக்டர்கள் துவக்கத்தில் 70 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களாக டிராக்டர்களை உருவாக்கியது. அதன்பின் டிராக்டரை இலகுவாக்கி வடிவமைப்பில் மாறுதல் செய்து அதிக மேம்பாடுகளுடன் மணிக்கு 217 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய டிராக்டரை ஜே.சி.பி. உருவாக்கி அசத்தியது. ஆனால், சென்ற மாதம் அதையும் மீறி தனது பழைய சாதனைகளை உடைத்து மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக டிராக்டரை ஜே.சி.பி. நிறுவனம் இயக்கி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. ஏறத்தாழ 11 ஆயிரம் எல்.பி. எடையுடைய ஒரு வாகனத்தை 250 கி.மீ வேகத்தில் செலுத்தி பின் பாதுகாப்பாக நிறுத்துவது என்றால் அது எளிதான காரியமல்ல.
”ஆறு மாதங்களுக்கு முன்பு, நாங்கள் மணிக்கு 165 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை உருவாக்கி னோம். ஆனால் அதை 6 மாதத்தில் இன்னுமும் மேம்படுத்தி ஜே.சி.பி. பாஸ்ட் டிராக் என்கிற மேம்படுத்தப்பட்ட டிராக்டரை கட்டுமான உலகிற்கு சமர்ப்பித்திருக்கிறோம். இந்த புதிய சாதனையின் மூல
மாக ஜே..சி.பி. குழுமம் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது. இப்படி ஒரு அசத்தலான வடிவமைப்பை செய்த ஜே.சி.பி. பொறியியல் குழுவினருக்கும், வடிவமைப்பு மற்றும் மோட்டார் சப்ளைக்கு உறுதுணையாக இருந்த ஜி.கே.என் ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்திற்கும் எங்களது நன்றிகள்’’ என்றார் பாம்போர்ட்.
அதெல்லாம் சரி, இவ்வளவு வேகத்தில் செல்லக்கூடிய ஜே.சி.பி. வாகனங்கள் நம்மூரில் செல்ல அனுமதி கிடைக்குமா? அதற்கேற்ற சாலைகள் இங்குள்ளனவா? என கேட்காதீர்கள். இதெல்லாம் வெளிநாடுகளில் உள்ள அதிவிரைவு சாலைகளில் செல்வதற்கு மட்டும் தான்.
உண்மையில் இந்த ஜே.சி.பி. வாகனம் எப்படி இயங்குகிறது? எவ்வளவு வேகத்தில் பறக்கிறது? அதன் முழு செயல்பாடுகளை காண உங்கள் மொபைல் ஆப்பில் இந்த பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்து அதிசயுங்கள்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066883
|