கட்டுநர்கள் சமூகத்தின் பொக்கிஷங்கள் ! ரூபி.ஆர். மனோகரன், நிர்வாக இயக்குநர், ரூபி பில்டர்ஸ்

22 ஜனவரி 2024   05:30 AM 09 டிசம்பர் 2019   04:16 PM


ரூபி மனோகரன். கட்டுமானத் துறைக்கும், பில்டர்ஸ் லைன் வாசர்களுக்கும் அறிமுகம் தேவைப்படாத தனித்த பெரும் ஆளுமை. 1997-ல் சிறு நிறுவனமாக துவங்கப்பட்டு தற்போது ரூபி பில்டர்ஸ் & புரோமட்டர்ஸ் என்கிற பெரும் கட்டுமான நிறுவனமாக வளர்ந்து,கடந்த 22 ஆண்டுகளில்  3.5 மில்லியன் சதுரஅடி கட்டுமானத்தைக் கட்டி, 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைத்து தமிழகக் கட்டுமானத் துறையின் சிகரமாக விளங்குகிறது. 

 

கட்டிடத்திற்கு உறுதுணையாக விளங்கும் முக்கிய கட்டுமானப் பொருட்களான ரெடிமிக்ஸ் கான்கிரீட், ஃப்ளை ஆஷ் கற்கள், பேவர் பிளாக்குகள், செராமிக்ஸ், கதவு ஜன்னல்களை உயர்ந்த தரத்துடன் தானே உற்பத்தி செய்து தன்னுடைய புராஜெக்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அரிய பில்டராக திகழ்கிறார் 
திரு. ரூபி ஆர். மனோகரன்.

 

கட்டுநர், எழுத்தாளர், சமூகசேவகர் போன்ற பன்முகத்தன்மைமிக்க ரூபி மனோகரன் சமீபத்தில் நடந்த நாங்குநேரி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் வேட்பாளராக அரசியல் களம் கண்டு அதன் மூலம் தமிழக அரசியலில் பரப்பரப்பாக பேசப்படும் அரசியல் பிரமுகராகவும் விளங்கினார். தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளருடன் போட்டியிட்டு வெற்றிபெறாது போனாலும், ஏறத்தாழ  37 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்று அரசியல்  களத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார். 

 

ஒரு மாதகாலம் நாங்குநேரி தொகுதியில் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைச் சந்தித்து  தொகுதி மக்களின் வீட்டுப்பிள்ளையாகவே மாறி இருக்கிறார். “நல்ல வேட்பாளரை நாம் தவற விட்டுவிட்டோம்’ என நாங்குநேரி மக்கள் வருத்தப்படும் அளவிற்கு ரிசல்ட் இருந்தாலும், போட்டி முடிவினைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உற்சாகமாகவே இருக்கிறார். பில்டர்ஸ்லைனுக்காக அவரை சந்தித்து உரையாடினோம்.

 

அரசியல், தேர்தல் களம், நாங்குநேரி தொகுதி உங்கள் பிரச்சாரம் மூன்றையும் பற்றி குறிப்பிடுங்கள்?

 

“”நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக  வேட்பாளராக போட்டியிட, என்னை தேர்வு செய்ததற்கு முதலில் அன்னை சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு. முகுல் வாஸ்னிக், செயலாளர் திரு. சஞ்சய் தத் ஆகியோருக்கு எனது நன்ஷீகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். 

 

தி.மு.க  தலைவர் தளபதி. திரு.ஸ்டாலின் அவர்களோடு இணைந்து எழுச்சிமிகு கூட்டணியாக நாங்கள் தேர்தல் களத்தை எதிர்கொண்டோம்.  இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சிக்கு உறுதிச் செய்யப்பட்ட வெற்றி எனக் கூறுவார்கள். என்றாலும். நாங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சத்தியத்தை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்தோம். முடிவில் ஜனநாயகத்தை, பணநாயகம் வீழ்த்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். என்றாலும் இந்த தேர்தல் முடிவு எனக்கு உத்வேகத்தைதான் கொடுத்திருக்கிறது. 

 

நான் நீண்ட நெடுங்காலமாக செய்து வரும் சமூக சேவைப் பணிகளின் ஒரு அங்கம்தான் அரசியல் ஆகும். எந்த ஆதாயத்தையும்  பார்க்காமல் நான் செய்து வரும் சமூகப்பணிகளை  அரசியலுக்கான அறுவடையாக மாற்றிக் கொள்ளத் தெரியாதவன் நான். என்றாலும் நாங்குநேரி பிரச்சாரம் மூலமாக அங்குள்ள ஏழைய எளிய மக்களை, மண்ணின் மைந்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியதை, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்ததை எனது பெரும்பாக்கியமாக நினைக்கிறேன். என் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் அவை.

 

மற்றபடி தேர்தலில் வெற்றி கிட்டாது போனதை நான் சரிவாக நினைப்பதே கிடையாது. என்மீது சொல்லப்பட்ட தவறான கருத்துக்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து 37 சதவீத மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கிற பாஸிட்டிவ் எனர்ஜி தான் என்னுள் ஓடுகிறது. தேர்தலில் முடிவிற்கு பிறகு ‘நல்ல சமூகசேவகரை, நல்ல மனிதரை நாம் தேர்ந்தெடுக்க தவறி விட்டோம்’ என நாங்குநேரி மக்கள் வருத்தப்படுவதாக எனக்கு செய்திகள் வரும் போது, உண்மையிலேயே நான் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்து கொள்கிறேன்‘’.

 

இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் ஆளுங்கட்சியை மக்கள் இன்னும் நம்புகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

 

“”ஒரு போதும் இல்லை. நாடு முழுக்க பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது. வேளாண்மை, ஆட்டோமொபைல் துறைகள் நலிந்து கிடக்கின்றன. எது குறித்தும் தெளிவான புரிதல் இல்லை, விளக்கம் இல்லை. தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் மிகச் சாதாரணமான பணிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 


தொழில், வேலைவாய்ப்பு மிகவும் மந்தமாகி விட்டது. இவர்களிடம் தொலைநோக்கு திட்டங்கள் அறவே இல்லை.  

 

ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே அமிழ்த்து வைக்கப் படுகிறார்கள். ஆளும் கட்சியின் உண்மையான லட்சணம் பொதுத் தேர்தலில் தெரியவரும்’’. 

 

கட்டுநர் ரூபி மனோகரன் - அரசியல் பிரமுகர் ரூபி மனோகரன் ஒப்பிட முடியுமா?

 

“”கட்டுமானத் தொழில் தான் எனது ஆதாரம். அதேசமயம் சமூக பணிச் சேவையின் அடுத்த பரிணாமம் தான் அரசியல். இரண்டிற்குமே மனிதநேயம் தான் அடிப்படை. அரசியலில் நுழைந்து தான் கட்டுநர் ரூபி மனோகரன் பிரபலமாக வேண்டும் என்பதில்லை. ஒப்பீடு எனப் பார்த்தால் கட்டுநர் ரூபி மனோகரன் அதிரடியாக முடிவுகளை எடுக்கக் கூடியவர், அதே சமயம் அமைதியானவர். இலாபநோக்கு பாராதவர். அரசியல் வாழ்க்கையில் ரூபி மனோகரன் அணுகுவதற்கு எளிமையானவர். மக்களில் ஒருவர். சுருக்கமாக சொல்வதென்றால், கட்டுநர் மனோகரன், தொழிலை சேவையாக கொண்டவர். அரசியல் மனோகரன் சேவையை தொழிலாகக் கொண்டவர்’’.

 

அரசியல் பிம்பத்தைத் தவிர்த்து, கட்டுநர் மனோகரன் கட்டுமானத் தொழிலில் உள்ள சமகால பிரச்சனைகளாக  சுட்டிக்காட்டுவது எவை?

 

“”இருப்பதிலே கட்டுநர்கள் தான் சிக்கல்களில் உள்ள தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, காலிமனை வரி, ரெரா என ஒன்றா, இரண்டா எங்கள் தடைக் கற்கள்? ஜிஎஸ்டி எடுத்துக் கொள்வோம் கட்டுமானப் பொருட்களின் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி போடுகிறார்கள். கட்டி முடித்த வீட்டை விற்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி போடுகிறோம். இதுதவிர பத்திர பதிவுச் செலவு 4 சதவீதம், முத்திரைத்தாள் வரி 7 சதவீதம் வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும். மேலும், 50 லட்சத்திற்கு மேல் ஒருவர் வீடு வாங்கினால் 1 சதவீதம் வரி கட்டவேண்டும். அதாவது 60 லட்ச ரூபாய் மதிப்பில் ஒருவர் வீடு வாங்கினால்  21 லட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றால் இதுதான் வரிவிதிக்கும் முறையா? அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தங்கள் கனவு இல்லத்தை பெறுவதற்கு ஆதார விலையில் 35 சதவீதம் அரசுக்கு வரியாகக் கட்ட வேண்டும் என்பது எந்த விதத்தில் ஏற்புடையது?

 

அதற்குப் பிறகு  குடிநீர் வரி, கழிவு நீர் கட்டணம், சொத்து வரி என பல இருக்கின்றன. கட்டுநர்களுக்கு நாளுக்கு ஒரு வரி, விதிகளை விதிக்கின்றார்கள்.

 

ஒரு காலி நிலத்தில் நாங்கள் புராஜெக்ட் செய்கிறோம் என்றால், முதலில் அந்த நிலத்தை நில வகை மாற்றம் செய்வதற்கு தவம் செய்ய வேண்டி இருக்கிறது. 8,10 துறைகளிடம் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. முதலீடு செய்த பணத்திற்கு வட்டியும் கட்ட வேண்டும். இதுதவிர, லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. எல்லாவற்றையுமே தான் ஒரு கட்டுநர் சமாளிக்க வேண்டி இருக்கிறது. 

 

இதனால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், கட்டுநர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு என்றில்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பெரும் பாதிப்பு.  ஏறக்குறைய 20 மில்லியன் மக்கள் கட்டுமானத் துறையின் வேலை வாய்ப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெறுகிறார்கள். ஒரே ஒரு பெரிய கட்டுநரால் 3,000 மக்களுக்கு வேலை கிடைக்கிறது என்றால் அப்படிப்பட்ட கட்டுநரை இந்த அரசு கொண்டாட வேண்டாம். குறைந்தபட்சம் மிதிக்காமல் இருந்தால் போதும். எங்களது பிரச்சனைகளை, கோரிக்கைகளை  உடனுக்குடன் தீர்க்க அரசு முன்வர வேண்டும். கட்டுநர்களை வாழவிடுங்கள். தொழில்செய்ய விடுங்கள்.

 

நாட்டின் குடிமக்களுக்கு வீடுகளை உருவாக்கி தருவது அரசின் கடமையாகும்.  அதற்கு தான் வீட்டு வசதி துறை, குடிசை  மாற்று வாரியம் இருக்கிறது. அவர்களால் முடியாத பணிகளைத் தான் கட்டுநர்களாகிய நாங்கள் தொழில் ரீதியாக செய்து வருகிறோம். நாங்கள் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் வீடுகளை மட்டும் தருபவர்கள் அல்லர். நாங்கள் வருமானத்தை ஈட்டித் தரும் பொக்கிrங்களாக இருக்கிறோம் ஆனால், எங்களை அரவணைத்து, ஊக்குவித்து, ஆதரிப்பார் யாருமில்லை. இந்த நிலைமை மாறினால் தான் தமிழக கட்டுமானத் துறை மட்டுமல்ல, இந்திய கட்டுமானத் துறையும் உயர்வு பெறும்.

 

பாதியில் நின்ற கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதும், வீடு வாங்குபவர்கள் கூடுதல் கடன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்திருப்பது பற்றி?

 

“”இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏற்கனவே இதுபோல பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏதேனும் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேற்ற அஷீகுஷீ உங்களுக்கு தெரிந்ததா? இந்த அறிவிப்பினால் நாடுமுழுக்க 1600 கட்டுமான திட்டங்கள் பலன் பெறும் என்கிறார்கள். அப்படி ஆனால் மற்ற கட்டுமானத்திட்டங்களின் நிலை?  மத்திய அரசின் 25,000 கோடி முதலீட்டு திட்டம் யானை பசிக்கு சோளபொறிதான்.

 

அடுத்ததாக, வீடுவாங்குபவர்களுக்கு கூடுதல் கடன் தருகிறார்களாம்? முதலில் வீடு வாங்குவதற்கு ஆட்களை அனுப்பச் சொல்லுங்கள். அசல் விலையுடன் 35 சதவித வரியை விதித்துவிட்டு,  பின் அதற்கு கடன் தருகிற திட்டம் நகைச்சுவையாக இருக்கிறது’’. 

 

ஆட்டோமொபைல் துறை கடுமையான தாக்கத்தில் சிக்கினாலும், ரியல் எஸ்டேட் துறை சீராக இருப்பதற்கு என்ன காரணம்?

 

“”ஆட்டோமொபைல்  துறையின் தேக்கம் தற்காலிகமானதுதான்.  பி.எஸ்.6 இன்ஜின் பயன்பாடு தொடர்புடைய குழப்பங்களால்தான் ஆட்டோமொபைல் தற்போது சரிந்திருக்கிறது. அடுத்தாண்டு மத்தியில் அது மீண்டு எழும். ஆனால், வீடு என்பது ஒரு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரேமுறை நிகழ்கிற நிகழ்வாகும். ரியல் எஸ்டேட் துறை கடந்த ஆறேழு ஆண்டுகளாகவே தத்தளித்து வருகிறது. என்றாலும் இந்த நிதி ஆண்டில் நாடு முழுக்க வீடு விற்பனை ஓரளவு நன்றாக இருக்கிறது என்றால் அது வரவேற்கக்கூடியதுதான். ஆனால், இந்தத் துறையில் உள்ள வரிகள், கட்டணங்கள் குறைக்கப் பட்டு பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டால் என்றுமே கட்டு
மானத் துறை நம்பர் 1 துறையாக திகழும். அனைத்து வகை மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும்’’.

 

ரூபி பில்டர்ஸின் தற்போது லேட்டஸ்ட் புராஜக்டுகளைப் பற்றி ?

 

“”இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 5 புராஜெக்டுகளை நாங்கள் லாஞ்ச் செய்திருக்கிறோம். ஓ.எம்.ஆரில் ரூபி அனந்தா, மேற்கு தாம்பரத்தில் ரூபி நக்rத்ரா, தாம்பரம் முடிச்சூர் சாலையில் ரூபி ராயல் டவர் ஆகிய புராஜெக்டுகளின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர கிழக்கு தாம்பரத்தில் ரூபி பிலிஸ் என்னும் புராஜெக்ட்டையும், மாம் பாக்கத்தில் ரூபி ஜிஎஸ்டி என்கிற புராஜெக்ட்டையும் விரைவில் துவக்க உள்ளோம். 

 

மேலும், மனைகளை விற்கும் பிரிவினையும் ரூபி நிறுவனம் துவங்கி யுள்ளது. கேம்ப் ரோடு அருகே ரூபி நேனோ பிளாட்ஸ் என்னும் மனைப் பிரிவும், ஒரகடம் அருகே ரூபி வல்லம் பிளாட்ஸ் என்னும் மனைப் பிரிவும் பொதுமக்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

2020-ல் அகரம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம்’’ என்கிறார்  என்றுமே மாறா உற்சாகத்துடன்  திரு. ரூபி.ஆர். மனோகரன் .

 


தென் சென்னையில் ரூபி பில்டர்ஸின் புராஜெக்டுகளை அறிய:

எண் : 247 - வேளச்சேரி மெயின் ரோடு, 
சேலையூர், 
சென்னை - 600073. போன் : 044 - 30093009 ,  
மொபைல் : 9841754195
E: marketing@rubybuilderschennai.com
 Web : www.rubybuilders.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066900