ஆண்டுக்கு 50 ஆயிரம் ச.அடி கட்டுமானம் இலக்கு !

22 ஜனவரி 2024   05:30 AM 09 டிசம்பர் 2019   12:37 PM


தேனியில் கடந்த 33 வருடங்களாக தரமான கட்டுமானங்களை நியாயமான விலையில் வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப கட்டி வருகிறது 

 கே.ஏ.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம்.

 

இதன்  நிறுவனர்களான திரு.கே.அப்துல் ரஹீம் மற்றும்  பொறி அ.ஜாகிர் உசேன் நம்மிடையே பேசும்போது, ‘‘நாங்கள் 2011 வரை அரசு சார்ந்த கட்டுமானப் பணிகளை செய்து வந்தோம். 2011க்கு பிறகு தற்போது தனியார் கட்டுமானப் பணிகளையும், வணிக வளாகங்கள் பணிகளிலும் எங்களை ஈடுபடுத்தி வருகிறோம். தற்போது தேனி மாவட்டத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 35 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறோம். இந்த ஆண்டில் 40,000 சதுர அடியிலான அரசு கட்டுமானப் பணிகளையும், 30,000 சதுர அடியிலான தனியார் கட்டுமானப் பணிகளையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். நாங்கள் போடியில் அரசு கட்டுமானப் பணியாக அம்மா உணவகத்தை கட்டி முடித்திருக்கிறோம் மற்றும் சின்னமனூர் போடி அல்லி நகரத்தில் போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்புப் பணிகளையும் முடித்திருக்கிறோம்.

 

நாங்கள் இதுவரையில் 2 லட்சம் முதல் 2 லட்சத்து ஐம்பதாயிரம் வரையிலான சதுர அடியிலான கட்டுமானப் பணிகளை முடித்திருக்கிறோம். வருடத்திற்கு 50,000 சதுர அடியிலான பணிகளை இலக்காகக் கொண்டு இப்பணியில் எங்களை ஈடுபடுத்தி வருகிறோம். இதுவரையில் 50 தனிவீடுகளையும் 3 அடுக்குமாடி குடியிருப்புகளையும், 6 வில்லாக்களையும், 5 வணிக வளாகங்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறோம். 

 

தற்சமயம் தேனியில் 6 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பினையும் 10 வீடுகள் கொண்ட தனிவீட்டு பணியிலும், நகராட்சி வணிக வளாகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் முல்லை பைப்ஸ் & எலக்ட்ரிக்கல்ஸ் என்ற நிறுவனத்தையும், பெர்ஜர் பெயிண்ட்ஸின் (Berger Paints) டிஸ்ட்ரிப்யூட்டராகவும் இருக் கிறோம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பும் அவர்களது பாராட்டுகளுமே நாங்கள் பெற்ற விருதுகளாக நினைத்து பெருமைப்படுகிறோம்’’ என்கிறார்கள்.  

 

மேலும் விவரங்களுக்கு, 

கேஏஆர்கன்ஸ்ட்ரக் ஷன்ஸ், எண்:20, சுந்தரிமுனி காம்பளக்ஸ், 
என்.ஆர்.டி.நகர், பி.டி.ஸ்கீம் ரோடு,
தேனி - 625531. 
பேசி : 98423 15686,  E : karctheni@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066884