வீட்டை மட்டுமல்ல, அலுவலகத் தையும், தொழிலையும் நிர்வகித்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு சிவில் பொறியியல் படித்த எனது மனைவி யின் பங்களிப்பு மிகப் பெரியது’ என சிலாகிக்கிறார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த M.S. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறி. பி.முருகன்
M.S. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் கட்டுமானநிறுவனம் 1988-ல் கிருஷ்ணகிரி நகரில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனி வீடுகள், வணிக வளாகம், வில்லாக்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஆகியவற்றிற்கு வரைபடம் தயாரித்தல், மதிப்பீடு தயார் செய்தல், உள்ளாட்சி நிர்வாகத்திடம் கட்டிட வரைபடம் அனுமதி பெறுதல், ஒப்பந்த முறையில் மேற்கூறிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல் ஆகிய அனைத்து பணிகளையும் கடந்த 30 வருடங்களாக மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறது.
பொறி. பி.முருகனிடம் பேசியபோது, ‘‘மிகச் சிறிய நிறுவனமாக ஆரம்பித்த எங்கள் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து இன்று கட்டுமானத் துறையில் முத்திரை பதிக்கும் நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. எங்களுடைய கட்டுமானங்கள் மிகவும் தரமான முறையில், சிறந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு, சிறந்த வேலையாட்களைக் கொண்டு மிகத் தரமான முறையில் வாடிக்கையாளர் திருப்தியடையும் விதமாக “தரமே எங்கள் தாரக மந்திரம்” என்னும் கொள்கையுடன் கட்டப்படுகின்றன. எங்களது ஒவ்வொரு கட்டுமானமும் முதல் கட்டுமானத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ, அதே முக்கியத்துவத்துடன் தான் களப்பணிகள் நடக்கும். “ஒவ்வொரு கட்டிடமும் எங்களுக்கு மிக மிக முக்கியமானதே”
நீங்கள் கட்டி முடித்த Project-ன் விவரம் மற்றும் அமைவிடம் பற்றி..
‘‘ஒப்பந்த முறையில் மட்டும் நாங்கள் கட்டிடம் கட்டுவதால், கிருஷ்ணகிரி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் தனி வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளை கட்டியுள்ளோம்’’.
இது வரை உங்கள் நிறுவனம் கட்டி உள்ள புராஜக்ட்களின் கட்டுமானப் பரப்பு? மற்றும் எண்ணிக்கை குறித்து..
‘‘நாங்கள் இதுவரை கட்டியுள்ள வீடுகளின் மொத்த கட்டுமானப் பரப்பு 450000/- சதுர அடிகள் ஆகும். மொத்த புராஜக்ட்கள் என எடுத்துக் கொண்டோமெனில், தனி வீடுகள் : 300 , அடுக்குமாடி குடியிருப்புகள்: 10, வணிக வளாகங்கள் : 10 ஆகும். இதுதவிர மூன்று மருத்துவமனைகளையும் கட்டி இருக்கிறோம்’’.
உங்கள் நிறுவனத்தின் தற்போதைய புராஜக்ட்களின் முழு விவரம்?
‘‘தற்போது 5 வணிக வளாகங்கள், 10 தனி வீடுகள், 2 அடுக்குமாடி கட்டிடங்கள், கிருஷ்ணகிரி நகரில் கட்டி வருகிறோம்’’.உங்களது நீண்ட கால சேவையில், உங்கள் நிறுவனம் பெற்றிருக்கும் விருதுகள் எவை?
‘‘இரண்டு வருடங்களாக JSW- வின் சிறந்த பொறியாளர் விருதினைப் பெற்றிருக்கிறோம்’’
வாடிக்கையாளர்களிடையே எங்கள் நிறுவனத்திற்கென தனித்த அடையாளமும், நற்மதிப்பையும் தான் நாங்கள் மிகச்சிறந்த விருதுகளாக பாவிக்கிறோம். குறைந்த லாபம், நிறைந்த தரம், தலைமுறைகளோடு தொடரும் எங்கள் சேவை இது தான் எங்கள் நிறுவனத்தின் கொள்கையாக இருக்கிறது’’ என்கிறார் பொறி.பி.முருகன். மேலும் விவரங்கட்கு..
எம்.எஸ்.கன்ஸ்ட்ரக் ஷன்ஸ், 312-C முதல் தளம் பெங்களூரு ரோடு,
இந்தியன் வங்கி எதிரில்,
கிருஷ்ணகிரி - 635001
மொபைல் : 94443081583 / 9944679599.
E: mscounstructions_kri@rediffmail.com/ murugansharmila2013@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2068364
|