மூன்றே நாட்களில் சென்ட்ரிங் பணிகளை முடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டுமா? அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தப் புதுமையான படைப்பை வழங்குபவர்கள் ஹை லைஃப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினர். கட்டுமானத் தொழிலுக்கான இயந்திரங்கள், சாதனங்களை உருவாக்கி அளிப்பதில் இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். இப்போது இவர்களது தயாரிப்புகள் இந்தியாவிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டன.
எந்த வேலைக்கு ஏற்றது?
அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பலவிதமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாடிக் கட்டுமானங்களுக்கு இவை பெரிதும் பொருத்தமானவை. அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் இவை பேருதவியாக இருக்கும்.
தனித் தனி பாகங்களைக் குஷீப்பிட்ட வகையில் இணைத்தால் போதும். எல்லாம் நொடியில் தயாராகிவிடும். இந்த வகையில் செயல்படும்போது ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலையைத் துவக்குவதற்கு உரிய கால இடைவெளி மிக மிகக் குறைவாகவே ஆகும். எடை குறைவான பாகங்கள் என்பதால் இணைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் களைப்பின்றிப் பணியாற்ற முடியும். வேகமாகவும் செய்து முடித்துவிடலாம்.
தளங்களின் உயரங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதேபோல், கட்டட வடிவமைப்பும் சிக்கலானதாகவும் இருக்கலாம். அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் உங்கள் வேலைகளை எளிதாக்குகின்றன.
வழக்கமான முறையில் அமைக்கப்படும் கட்டடத் தளங்களிலும், வழக்கத்திற்கு மாறான தளங்களிலும் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். பல கட்டடங்களில் தளங்களின் உயரம் ஒரே மாதிரியாக அமைவது கிடையாது. அம்மாதிரியான கட்டுமானங்களில் சிரமமே இல்லாமல் வேலைகளைச் செய்வதற்கு
அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே ஏற்றவை.
தேவைப்படும் நீளம் அல்லது உயரத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள இவற்றில் உள்ள பின்களை வெளியில் இழுத்தாலே போதும். சரிக்கட்டிக் கொள்ளலாம். தேவைப்படும் உயரத்தை எட்டிய பிறகு பின்களை அவற்றின் இடத்தில் பொருத்தினால் வேலை முடிந்தது.
உலகப் புகழ் பெற்ற வேர்ல்ட் ட்ரேட் சென்டரைக் கட்டியவர்கள் யார் என்று தெரியுமா? கால்லவினோ குழுமம் என்ற நிறுவனம்தான். அவர்கள்தான் கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் ஒரு கட்டுமானத் திட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். இங்கும் இவர்கள் அடுத்தடுத்த வேலைகளை மூன்றே நாட்கள் இடைவெளியில் மேற்கொள்வதற்கு அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே உதவி இருக்கின்றன.
இந்தியாவிலும் கூட இதே மாதிரியான வேகத்தில் கட்டுமான வேலைகளை முடிக்க முடியும். எல் அண்ட் டி நிறுவனத்திற்கான கட்டுமானம் ஒன்றில் அடுத்தடுத்த வேலைகளை ஐந்து நாள் இடை வெளியில் முடிக்க முடிந்திருக்கிறது.
வெகு வேகமாக முடித்துவிட முடியும் என்பதால் காலமும் மிச்சமாகும். இது மறைமுக இலாபத்திற்கு வழி வகுக்கும். செலவு அடிப்படையில் கடுமையான சிக்கனத்திற்கு உதவும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களே போதும். பிரித்தெடுக்கும் வேலைகளை விரைவாகச் செய்துவிடலாம்.
பாகங்களின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் கிரேன்களைப் பயன்படுத்த வேண்டிய நேரமும் குறைவாகவே ஆகும். கிரேன்களுக்கான வாடகை, இயக்கச் செலவு ஆகியவையும் குறைவாகவே ஆகும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067003
|