ஃபிளை ட்ரோன் கண்காணிப்பு தொழில்நுட்பம்

23 ஜனவரி 2024   05:30 AM 22 நவம்பர் 2019   11:10 AM


அணைகள், பாலங்கள் போன்ற மிகப் பெரிய கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கத் தான் ஃப்ளை ட்ரோன்கள் தேவை என்ற சூழ்நிலைமாறி தற்போது டாப் ஆங்கிளில் குரூப் போட்டா பிடிக்கக் கூட ட்ரோன்கள் பயன்படும் நிலை உருவான பிறகு, நடுத்தர கட்டு மானங்களில் ட்ரோன்களின் கண்காணிப்புப் பணி வெகு நிச்சயம் இனி முக்கியப் பங்கு வகிக்கும்.

 

கட்டுமானத்துறை நிர்வாக மென்பொருள்:

 

பிம், டெக்லா, க்ளவுட் போன்ற மென் பொருட்கள் நிர்வாகம், கணக்கியல் மதிப்பீடு தொடர்பான ஒரு கட்டுநரின் பணிகளை எளிதாக்க வல்லது. துவக்கத்தில் இவை எல்லாம் ஒரு பெரிய கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே தேவைப்படும் என்றே கருதப்பட்டது.

பின் மெல்ல மெல்ல அந்நிலை மாறி நடுத்தர கட்டுநர்களுக்கும் மேலாண்மை, நிர்வாகம் & கணக்கியல் தொடர் பான மென் பொருட்களை தங்கள் கணினியில் நிறுவி அதனைப் பின்பற்ற வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மென் பொருட்களை பயன்படுத்தும் தொழில்நுட்பம் உத்வேகம் மற்றும் விழிப்புணர்வு நிச்சயம் அதிகமாகும்.

 

3டி கான்கிரீட்:

 

வீடு கட்டிடப் பொருட்களை உறுதியான பசை போன்ற உள்ளீடு பொருட்களாக ஸ்டோர் செய்து பிறகு அதிலிருந்து பிரம்மாண்ட வீடுகளை பிரிண்ட் முறையில் உருவாக்குகிற இந்த அதிசய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டில் இன்னமும் பேசப்படும். இது போன்ற புதுப்புது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் சர்வதேச சந்தையிலிருந்து விரைவில் இந்திய சந்தைக்குப் பரவும்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066985