புதிதாக கட்டடங்கள் கட்டும் போது, தற்போதைய சூழல், எதிர் கால சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொறியாளர்களை கலந்து சில வேலைகள், பிற்காலத்தில் நமக்கு நன்மையையே தரும். ஆனாலும், இதில் எதிர்கால சூழல் மாற்றங்களை, ஒரளவுக்கு மட்டுமே நம்மால் உத்தேசிக்க முடியும்.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகி, தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் கட்டடங்கள், பல்வேறு புதிய பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக, இது போன்ற பழைய கட்டடங்களில், தூண்களில் ஏற் படும் வலு இழப்பு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது. தூண்களை தனியாக வலுவூட்டுவது, நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்விக்கு, இப்போது விடை கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில், சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட, “ஜாக்கெட்டிங்’ என்ற வழிமுறை, தற்போது இந்தியாவிலும் பயன் பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்படி, தூண்களின் மேற்பரப்பை லேசாக கொத்தி, சீர் செய்துவிட்டு, அதன் மேல் கம்பி கட்டி, சென்டரிங் தடுப்புகளை அமைக்க வேண்டும். இதனுள், கான்கிரீட் கலவையை கொட்ட வேண்டும். இதன்பின், குறிப்பிட்ட நாட்கள் கழித்து, சென்டரிங் தடுப்புகளை பிரிக்க வேண்டும். இதனால், தூண்களின் வலு அதிகரிக்கும். அதே நெரத்தில், தூண்களின் எடையும் அதிகரிக்கும்.
இது போன்று, ஜாக்கெட்டிங் முறையில் வலுவாக்கும் முன், தூண்களில் நீர்க்கசிவு தடுப்புக்கான ரசாயன பூச்சுக்களை உட்செலுத்துவதும் நல்லது.
இந்த வழிமுறையை தனி வீடு களுக்கு பயன்படுத்துவதில், சில சிக்கல்கள் இருந்தாலும், பெரிய அடுக்குமாடி குடியுருப்புகளில் பயன்படுத்தலாம்.
கட்டடத்தின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, இந்த வழிமுறையை பயன்படுத்துவது குறித்து, பொறியாளர்கள் உதவியுடன் முடிவு செய்வது நல்லது. மேலும், கட்டடத்தின் மற்ற பகுதிகளும் தரமாக உள்ளதா என்பதையும் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
கவனத்திற்கு.....
1. 100 ஆண்டுகளுக்கு மேலான, பழைய கட்டடங்களை இடிப்பதே நல்லது என, பொதுநல வழக்கிற்க்கு, சென்னை ஐகோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது. இனி, 20 ஆண்டுகளிலேயே தூண்களை ஜாக்கெட்டிங் செய்வது மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
2. மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு, அந்த கட்டட உரிமையாளர் உரிய கட்டணம் செலுத்த தயாராக இருந்தால், போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை இடிக்கலாம்.
3. அந்த கட்டடங்களின் மீது, சிவில் வழக்கு நிலுவையில் இருந்தால், உடனடியாக இடிப்பது சாத்தியப்படாது. அந்த கட்டடங்களில் இந்த ஜாக்கெட்டிங் முறை பலன அளிக்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2068363
|