அண்மைக்காலமாக, புதிய வீடு கட்டுவோர், காற்றோட்டம், வெளிச்சம் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இது ஆரோக்கியமானது தான் என்றாலும், வடிவமைப்புகள் விrயத்தில் பலரும் கவன குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக, வீட்டில் அதிக எண்ணிக்கையில் ஜன்னல்கள் இருக்க வேண்டும் என்று நினைபவர்கள், அது எப்படி அமையும் என்பதிலும், அதில் உள்ள பாதுகாப்பு விஷயங்களிலும் கவணம் செலுத்த வேண்டும். ஒரு காலத்தில், மரத்தை மட்டுமே ஜன்னல் தயாரிக்க பயன்படுத்தினர். இதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஜன்னல்களில் கிரில் கம்பிகள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
கிரில் கம்புகளை மர பிரேம் களில் எப்படி அமைக்கிறோம் என்பதை பாதுகாப்பு கோணத்தில் அனுகுவது நல்லது. மரத்தால் ஆன சட்டங்களில் கம்பிகளை நுழைத்து பயனப்டுத்திய பலரும் தற்போது, மர சட்டத்துக்கு நடுவில் உள்ள இடைவெளியை நிரப்பும் வககையில் கிரில் கம்பி இணைப்பு களை பயனப்டுத்துகின்றனர்.
இந்த கிரில் கம்பிகளை பிரேம்களில் இணைக்க பெரும்பாலம் ஸ்குரு வகை ஆணிகளே பயன்படுத்தப்படுகின்றனர். இதை ஜன்னலை இறுக்கமாக சட்டத்துடன் சேர்க்கும் என்பதில் யாருக்கும் எந்த விதத்திலும் சந்தேகம் இல்லை.
ஆனால், வீடு புகுந்து கொள்ளையடிக்க வருவோர், ஸ்குரு வாயிலாக பொருத்தப்பட்ட கம்பி ஜன்னல்களை எளிதாக அகற்றி விட்டு, தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
எனவே, ஜன்னல்கள் அமைப்போர், மர சட்டத்தில் பொருத்தும் வகையிலாக கிரில் தொகுப்புகளை தவிர்த்து விட்டு, சுவருடன் நேரடியாக் இணையும் வகை கிரில் கம்பிகளை பயனப்டுத்தலாம். சுவருடன் இணைத்த கிரில் கம்பிகளை கொள்ளையர்கள் விட்டுவைப்பார்களா என்ற கேள்வி எழும். “ஸ்குரு’வை அகற்றி உட்புகுவதை காடிலும், இதில் வாய்ப்பு குறைகிறது என்பதே அனைவரின் கவனத்துக்கு வர வேண்டிய விஷயம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2068366
|