சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கன்கிரீட் கலவை தோலின் மீது பட்டால் அதிக எரிச்சல் ஏற்பட்டு புண் உண்டாகும். இதனால் அதிகபட்சம் தோலின் மீது துணியால் மூடிக்கொண்டுமேலே படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாட்டர் புரூப் கிளவுஸ் கையில் அணிந்து கொள்ளலாம்.
காலுக்கு ரப்பருடன் கூடிய உறை, தலைக்கு கவசம், அணிவது நல்லது. மற்றும் முழங்கால் முட்டி வாட்டர் புரூப் அணிந்து கொள்ளலாம். முடிந்த வரை கான்கிரீட் கலவையின் போது தினமும் மாற்று உடை அணியவும். கான்கிரீட் வேலை முடிந்ததும் சுத்தமாக குளிக்க வேண்டும்.
அதிகபட்ச எரிச்சலுடன் வலியும் உண்டாகும் எனபதால் நாம் அதிகபட்சமாக விழிப்புடன் இருக்க வேண்டும். கான்கிரீட் கலவை செய்யும் போது அதில் சேர்க்கப்படும் போர்ட்லாண்டு சிமெண்ட், மணல், ஜல்லி முதலிய கலவைகளை கலக்கும் போது, அவற்றை எடுத்துச் செல்லும்போது முதுகில் வலி வராமல் கனம் குறைவான பொருட்களை தூக்கிச் செல்லவேண்டும். ஓடவோ குதித்தோ செல்லக்கூடாது. இதனால் கால்களுக்கு வலி ஏற்பட்டு முதுகுவலி ஏற்படலாம்.
சிமெண்ட், புழுதி இவற்றின் காரணமாக கண்களில் தூசிகள் அதிகமாக விழுந்து கண்கள் கெடுவதற்கு நாம். கண்களை முற்றிலும் மூடிய கண்ணாடி அணிய வேண்டும். கண்களில் கான்கிரீட் கலவை விழக்கூடாது. வேலை நடக்கும் இடமானது மிகவும் இடைஞ்சல் இல்லாமல் எளிதில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066986
|