கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தேக்கமடைந்திருப்பதற்கு காரணம், அதீத வீட்டு விலை உயர்வுதான். 2000ல் இருந்து எடுத்துக்கொண்டால் அனைத்து பொருள்களின் விலை ஏற்றம் ஏறக்குறைய 10 மடங்காகத்தான் உயர்ந்து உள்ளது. ஆனால், நிலத்தின் விலையேற்றம் சுமார் 30,40 மடங்கு விலை ஏறி இருக்கிறது. இதன் காரணமாகவே நடுத்தர மக்களால் வீடு, மனை வாங்க முடியாத நிலைக்கு சென்றது.ஆனால், இந்த நிலை மாறி 2020-ல் தமிழக வீட்டு விற்பனைச்சந்தை புதிய உச்சம் தொடும்’’ என தன் மாறுபட்ட பார்வையை நம்முன் வைக்கிறார் சென்னை ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பி.ராமகிருஷ்ணன்.
தங்களது நிறுவனம் பற்றிக் கூறும்போது, “”எங்கள் நிறுவனம் 2004ல் துவங்கப்பட்டது. Sri Ragavendra Builders என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு முதல் புராஜக்டாக 700 சதுர அடி வீதம் மூன்று வீடுகள் கட்டி ஒப்படைத்தோம். முறையான அங்கீகாரம் பெற்ற இந்த வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு நாங்களே வங்கிக்கடன் பெற்று ஒப்ப டைத்தோம். அன்றைய ஒரு வீட்டின் விலை ரூ. 8 இலட்சம் ஆகும். இப்போது அதன் மதிப்பு ரூ. 80 லட்சமாகி விட்டது. அன்று தொடங்கிய எங்கள் பயணம் இன்றுவரை சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
எங்களிடம் வீடு வாங்கிய வாடிக்கையாளர்களே அவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு என ஒருவருக்கு ஒருவர் கூறி வெளி யாட்களும், “இதுபோல் தரமான வீடுகள் வேண்டும்’ என்று எங்களைத் தேடி வந்தனர். நிறுவனம் தொடங்கிய 2 ஆண்டுகளில் அதாவது, 2006-ல் முடிவில் 40 வீடுகள் கட்டி முடித்தோம். 2012-ல் 360 வீடுகள் கட்டி முடித்தோம். வாடிக்கையாளர்களுக்கு LICHFL யில் அதிகப்படியான வீட்டுக்கடன் பெற்று தந்ததற்காக அவர்களிடமிருந்து விருது பெற்றேன். மேலும், நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் விலையில் வீடுகள் அளித்தற்காக தமிழக ஆளுநரிடமிருந்து சிறப்பு விருது பெற்றேன் . ISO சான்றிதழ் பெற்ற எங்கள் நிறுவனம், இதுவரை 300 தனிவீடுகளும் 45 அடுக்குமாடி குடியிருப்புகளும் எங்கள் நிறுவனம் கட்டியிருக்கிறது. தற்போது, சென்னையில் இருந்து 15 km சுற்றளவில் 800 சதுரடி, 650 சதுரடி, 1200 சதுரடி என்று தனித்தனி அழகிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிபுகத் தயாராக இருக்கிறது. இதற்கு முழுமையாக வங்கிக்கடன் பெற்றுத் தருகிறோம்’ என்றார்பொதுச்சேவை மீது தீராக்காதல் உடைய திரு.பி.ராமகிருஷ்ணன்.
பொதுச்சேவைப்பணிகளையும் சிறுதொழில் மேம்பாட்டு மையம் என்னும் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். ராகவா பப்ளிக் சாரட்டி டிரஸ்ட்டுக்கு நிறுவனரான இவர், இதன் மூலம் (பொதுமக்கள் விழிப்புணர்வு மையம்) என்ன தொழில் செய்யலாம்/ எப்படி செய்யலாம்? எப்படி பெறுவது? எப்படி - NGO - வில் சேருவது? சுயஉதவி குழு லோன் பெறுவது எப்படி? என்பதை இலவசமாகவே வழிகாட்டி வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் புராஜெக்டுகள் மற்றும் சிறுதொழில் தொடங்க ஆலோசனைகளைப் பெற:
ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் , பி. ராமகிருஷ்ணன்,
எண்: 28/6 ராகவன் தெரு, ஜார்ஜ் காலனி, 3வது தளம், திரு.வி.க. நகர், பெரம்பூர், சென்னை - 600011.
செல் : 9840072200 / 9840996421.
இமெயில் : srbramakrishnan@gmail.com
Website : www.sriraghavendrabuilders.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067109
|