தமிழகத்தில் எம்.சாண்ட் உற்பத்தி கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாகத்தான் எம் சாண்ட் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இவ்வளவு பரவலாக எம் சாண்ட் உற்பத்தி அதிகரித்து வரும் தருணத்தில் அதன் தரக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஏனென்றால், பலதரப்பட்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து வரும்பொழுது சீரான தரம் உறுதி செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்குதமிழக அரசு பொதுப்பணித்துறை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு எம் சாண்ட் உற்பத்தியாளர்களின் தொழிற் சாலையை நேரடி ஆய்வு செய்து அதற்கு உண்டான Quality Standard தரம் நிர்ணயம் செய்து தரக்கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கி, அவ்வாறு வாடிக்கையாளர்கள் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறப்பட்ட உற்பத்தியாளார்களிடம் மட்டுமே எம் சாண்ட் வாங்கி பயனடைய வேண்டும்’’ எனக்கூறுகிறார் தமிழகத்தின் முன்னணி எம்.சேன்ட் உற்பத்தி நிறுவனமான எஸ்.ஆர்.சி புராஜெக்ட்சின் நிர்வாக இயக்குநர் திரு.பி. விமலன்.
மேலும் அவர் கூறும்போது, “வாடிக்கையாளர்களுக்கு எம். சாண்ட் தரம் இருக்கிறதா? இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்கு உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்து Gradation ரிப்போர்ட் வாங்கி. அதில் ஒவ்வொரு அளவிற்கான விகிதங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். முக்கியமாக வாஷிங் நன்றாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள 150 மைக்ரான் (0.15 மி.கி) விகிதத்திற்கு 10% குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த எம் சாண்ட் நன்றாக வாஷ் செய்யப் பட்டுள்ளது என்றும் அதில் மிகவும் சிறிய துகள்கள் நீக்கப்பட்டு உள்ளது என்பதை அறிய முடியும்.
மேலும், கான்கிரீட்டுக்குபயன்படுத்தப்படும் எம்.சாண்ட் 4.75 மி.மீ சைஸ்க்கு குறைவாகவும் 2.36 மிமீ அளவுக்கு மேல உள்ள விகிதம் குறைந்தது 10% இருக்க வேண்டும். ஏன் என்றால், அவ்வாறு இருந்தால் தான் கான்கிரீட்டு நல்ல உறுதியும் குறைந்த அளவில் சிமெண்ட் அளவு செலவு ஆவதையும் உறுதி செய்ய முடியும்.
பி.சேண்ட் (Plastering Sand ) 2.36 மி மீ குறைவாக அனைத்துத் துகள்களும் இருக்க வேண்டும். இது சரியாக இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் சல்லடை (Sieve) வைத்து சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும், அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் லேப் டெஸ்ட் செய்தும் தெரிந்து கொள்ளலாம்.
எங்களது எஸ்,ஆர்,சி நிறுவனமானது தமிழகத்திலேயே முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிக்கு தேவையான எம் சாண்ட், பி சாண்ட் உற்பத்தியை துவக்கிய நிறுவனமாகும். 15 ஆண்டுகளாக எங்களிடம் கிரஷர் ஜல்லிகள் 6,12,20,40,53 அளவுகளில் சாலைக்கு பயன்படுத்தும் ஜி.எஸ்.பி.டபுள்யூ எம்.எம் ஆகியவை கிடைக்கிறது.
மேலும், எங்களது நிறுவனத்தில் வாடிக்கை யாளர்கள் முன்னிலையில் எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் தரத்தை எங்களது நவீன சோதனைக்கூடத்தில் சோதனை செய்து உறுதி கொள்ளலாம். எங்களது நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு மற்ற எந்த ஒரு எம்.சாண்ட் மாதிரி கொண்டுவந்தாலும் அதனை இலவசமாக சோதனை செய்து தருகிறோம். வாடிக்கையாளர்கள் எம் சாண்ட் தரத்தை புரிந்து அதனை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சேலம் அருகே பனைமரத்துப்பட்டி, சென்னை அருகே செய்யாறு ஆகிய இடங்களில் எங்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது’’ என்றார் திரு.விமலன்.
எஸ் ஆர் சி நிர்வாகத்தின் கிளைகள் :
தலைமை அலுவலகம், சேலம் - 0427-2312343 , 9842744409
பனைமரத்துப்பட்டி, சேலம் - 636204.
போன் : 9489555154 , 9778340000.
செய்யாறு : சித்தாத்தூர், போன் : 9688877999, 9788099993, 9942370140, 8870854322
இமெயில் : srcsalem@yahoo.co.in, Website : www.srcprojects.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067065
|