யாரை வடிகட்டுகிறது நீட்?

23 ஜனவரி 2024   05:30 AM 12 அக்டோபர் 2019   10:35 AM


நீட் என்னும் மருத்துவ நுழைவுத்தேர்வு தந்த அதிர்ச்சியை விட பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது, மும்பையில் நடந்த நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த  டாக்டரும் அவர் மகனும் சேர்ந்து செய்த ஆள்மாறாட்ட மோசடி.

இதுபோல இன்னும் நிறைய மோசடிகள் நடந்திருக்கலாம் என்பதும், இதுவரை தேர்வான மாணவர்கள் கூட மறு ஆய்வு செய்யப் பட இருக்கிறார்கள் என்பதும் தலைக்குனிவையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 


நீட் தேர்வு அந்த அளவிற்கு கடினமானதா? இந்த  மோசடி தேர்வுக்கு சில அதிகாரிகள்  தெரிந்தே துணை போயினரா? பிள்ளைப்பாசம் கண்ணை மறைத்ததா? அந்தப் பெரும் தவறுக்கு மெத்தப் படித்தக் குடும்பம் எவ்வாறு ஒத்துக் கொண்டது? ஏதேனும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தப் புகார் எழுதுள்ளதா? இதெல்லாம் இன்னும் விளங்காத கேள்விகள்இப்படி எளிதில் இன்னொரு ஆள், மாற்றாக வந்து தேர்வு எழுதிச் செல்லும் அளவிற்கு நீட் தேர்வு சிஸ்டம் இருக்கிறதா?  என்பதும் கூட நமக்குப் புரியவில்லை. 

 

ஒரு திரைப்படத்தில் கடத்தல் லாரியை சோதனைச் சாவடியில்  பிடிக்க போலீஸ் செல்வது போல காமெடி காட்சி வரும். சோதனை செய்த போலீசார் ‘லாரிக்குள் ஏதும் கடத்தல் பொருட்கள் இல்லை’ என  சொல்லி லாரியை அனுப்பி வைப்பார்கள். கடைசியில் ‘அவன் கடத்தியதே லாரியைத் தான்’ என சொல்லி சிரிக்க வைப்பார்கள்.

 

அந்த திரைக்காமெடி தான் நிஜத்தில் நிகழ்ந்திருக்கிறது.  மாணவர்களின் சட்டைக்காலர், கை மடிப்பு, பெண்களின் மூக்குத்தி, கம்மல், ஜடை  எல்லாம் சோதனை செய்யும் அதிகாரிகள் ‘தேர்வாளர் குறிப்பிட்ட அந்த மாணவன்தானா?’ என்பதை சரிபார்க்கவில்லை யென்றால் என்ன நீட்? எதற்கு நீட்? அது யாரை வடி கட்டுகிறது?

 

குறுக்கு வழியில் பாஸாகி, மருத்துவம் பார்க்க விழையும் இது போன்ற மாணவர்கள் கைகளில், நம்மைப் போன்ற நோயாளிகள் சிக்கினால்..?

 

தான் ஒரு மருத்துவர் என்றால் தன் பிள்ளையும் ஒரு மருத்துவ ராகத்தான் வலம் வரவேன்டும் என்பது எப்படிப்பட்ட மனோபாவம்? அதற்கு  பிள்ளைகள் தானா பலி? 

 

தான் பட்ட கஷ்டத்தை, தன்னுடைய சந்ததிகள் படக்கூடாது   என பெற்றோர் பாடுபடுவது நியாயம் தான். ஆனால், தனக்குப் பிடித்த பாடத்தை அல்லது தன்னால் படிக்க முடியாத பாடத்தை தன்னுடைய சந்ததியினரைப் படிக்க வைக்கப் போராடுவது ஒருவகையில் அவர்களின் மீதான் வன்முறைதான். தங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, என்னவாக விரும்புகிறார்களோ அதைப் படிக்க அனுமதிப்பது தான் பெற்றோர்களின் தார்மீகக் கடமையாக இருக்கும்.

 

வறட்டு கௌரவத்திற்கும், வீண் சமுக பெருமைக்கும், சமூக வலைத் ளங்களில் நிலைத்தகவல் போடுவதற்கும் நம் குழந்தைகளைப் பலியிடுவது எப்பொழுதும் ஏற்புடையதில்லை.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067077