கூலிங் டவர், பால்கனிக்கு ஏற்ற ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமெண்ட்

23 ஜனவரி 2024   05:30 AM 05 அக்டோபர் 2019   11:51 AM


அனல் மின் நிலையங்களில் கூலிங் டவர் என்பது இன்றியமையாத தேவை. இவற்றை உருவாக்கிப் பராமரிப்பது என்பது கடினமான வேலை. இத்தகைய கூலிங் டவர்களின் உட்புறச் சுவர்களை நிலக்கரித் தார் எபாக்ஸிக் கலவையால் பூசுவார்கள். இந்தப் பூச்சு அப்படியயான்றும் அதிக காலம் நீடிக்கத்தக்கது அல்ல. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே பலமிழந்துவிடும். அடுத்துப் பூச வேண்டிய தேவையை ஏற்படுத்தும். இரண்டாவது தடவை பூசப்படும் பூச்சு அதிக காலம் தாக்குப் பிடிக்காது. மூன்று நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே உரிந்து விழுந்துவிடும்.

 

இப்படி ஒவ்வொரு தடவையும் அடுத்தடுத்துப் பூசுவது பெரிய தொல்லையாக இருக்கும் இல்லையா? இதற்குப் பதில் ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமென்ட் கொண்டு பூசுவது சரியான தீர்வாக இருக்கும் என்று சீனாவில் கண்டுபிடித்தார்கள்.

 

புதிய உத்தியைப் பயன்படுத்துவதற்கு முன் கம்ப்யூட்டர் அடிப்படையில் எல்லாவற்றையும் நன்கு சோதித்தார்கள். கூலிங் டவர்களின் உட்புறம், ஈரத்தால் ஏற்படும் பாதிப்பு, எபாக்ஸி பூச்சின் ஆயுள், பருவ நிலை மாற்றம்  என்று பலவற்றையும் ஆய்வு செய்த பிறகே ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமென்ட் பொருத்தமான மாற்றுப் பொருளாக இருக்கும் என்று முடிவெடுத்தார்கள்.

 

சுமார் எட்டாயிரம் சதுர மீட்டர் பரப்பைக் கொண்டவை கூலிங் டவர்களின் உட்பகுதிகள். இவ்வளவு பெரிய பரப்பிற்கு எபாக்ஸிப் பூச்சுப் பூசுவது என்பது அதிகம் செலவு வைக்கக் கூடியது. தவிரவும் வேலையை முடிக்கவும் நீண்ட நாட்கள் ஆகும்.ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமென்ட் பயன்படுத்துவது சிக்கனமாக அமையும். தடங்கல் இல்லாமலும் வேலையை முடித்துவிடலாம். சுழலும், கையால் இயக்கக் கூடிய கிரைண்டர்களைக் கொண்டு எஞ்சி இருந்த எபாக்ஸி பூச்சைச் சுரண்டி எடுத்தார்கள். ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமென்ட்டைப் பூசினார்கள்.

 

இரண்டு கோட்டிங்குகளாக 2 மி.மீ கனத்திற்குப் பூசி விட்டுவிட்டார்கள். கூலிங் டவர் இப்போது கூலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கூலான யோசனை என்று தோன்றுகிறதா?பால்கனிப் பகுதியை அடிக்கடி புழங்குகிறோம். இதனால் அங்கு தேய்வு, கீறல்கள் அதிகமாக ஏற்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

 

இருக்கிறது.  ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமென்ட் கொண்டு பூசிவிட்டால் தாங்கள் குறிப்பிடும் தொல்லைகளைத் தவிர்க்கலாம். இது உராய்வினால் ஏற்படும் உரிதலைத் தடுக்கக் கூடியது. பாலியூரித்தேன் மூலம் அமைக்கப்படும் பரப்புகள் உறுதியானவையாகக் கீறலை எதிர்த்து நிற்கும். அவற்றைப்போலவே உழைக்கக் கூடிய பரப்புகளை ஃப்ளெக்சிபிள் பாலிமர் சிமென்ட் மூலம் உருவாக்கலாம். 

 

இதிலுள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது ஈரமான நிலையில் கூடுதல் வலுக் கொண்டதாகச் செயல்படும். பால்கனி போன்ற இடங்களில் மழைத் தடுப்புஇல்லாத  போதும் பாதுகாப்பில் இது எந்தக் குறையும் வைக்காது.உப்புத் தன்மை காரணமாக ஏற்படும் உரிந்து விழுதலையும் கூட ஃப்ளெக்சிபிள் பாலிமர் 
சிமென்ட் கட்டுப்படுத்தும். வேதிப் பொருட்களால் ஏற்படும் அரிப்பையும் தடுத்து நிறுத்தும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067079