பிரிகேஸ்ட் கான்கிரீட் கிளாடிங்

23 ஜனவரி 2024   05:30 AM 05 அக்டோபர் 2019   11:33 AM


இது வரை கிளாடிங் என்று சொன்னால், மரம், கண்ணாடி, உலோகத் தகடுகள் , பிளாஸ்டிக் ஃபிலிம்கள் போன்றவற்றைக் கொண்டுதான் கிளாடிங் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டு இருப்பீர்கள்.


இப்போது இந்த கிளாடிங் வேலைகளுக்கு முன் கூட்டியே தயார் செய்து வைத்துக் கொண்டுள்ள கான்கிரீட் பகுதிகளைப் பயன்படுத்தலாம். கிளாடிங் என்றாலே அங்கு பளுவைத் தாங்குவதற்குத் தேவைஇருக்காது என்று எண்ணுவீர்கள். பிரிகேஸ்ட் கான்கிரீட் கிளாடிங் முறையில் பளுவைத் தாங்கக் கூடிய பகுதிகளையும் அமைக்கலாம். அதற்குத் தேவையில்லாத பகுதிகளையும் உருவாக்கலாம். கட்டுமானப் பகுதிகளையும் கணக்காக அமைக்கலாம்.

 

பிரிகேஸ்ட் கான்கிரீட் கிளாடிங் பேனல்களைக் கட்டுமான வேலைகள் நடக்கும் இடங்களுக்கு வெளியில் எங்காவது ஓரிடத்தில் வைத்துக் கொள்ளலாம். தயார் நிலையில் எடுத்து வந்து பயன்படுத்தலாம்.


இந்த வகையிலான பிரிகேஸ்ட் கான்கிரீட் கிளாடிங் பகுதிகளைத் தயாரிக்க வழக்கமான முறையில் கான்கிரீட் தயாரிக்க உதவும் மிக்ஸர் இயந்திரங்களையே பயன்படுத்த முடியும்.  கலவைக்கான மூலப் பொருட்களாக, கல், ஜல்லி, டெர்ரகோட்டா கட்டிகள், செங்கல் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.பிரிகேஸ்ட் கான்கிரீட் கிளாடிங் தொழிற்நுட்பம் ஐரோப்பிய நாடுகளில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதே உத்தி உலகின் பிற பகுதிகளிலும் வேகமாகப் பரவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067070