வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும்போது...........

23 ஜனவரி 2024   05:30 AM 05 அக்டோபர் 2019   11:10 AM


பொதுவாக, பண்டிகை மற்றும் கொண்டாட்டங்களின் போது, வீட்டுக்கு வண்ணம் அடிப்பது, நீண்ட காலமாகவே பழக்கத்தில் உள்ளது. அண்மைக்காலமாக, வீட்டில் புதிதாக பொருட்கள் வாங்குவது போன்று, நினைத்த தருணத்தில் வண்ணம் அடிக்கும் பணிகளை மேற்கொள்வது சாத்தியமாகி உள்ளது.

 

இதிலும், சில ஆண்டுகள் முன்வரை, பெயின்டிங் ஒப்பந்ததாரர்களையே பலரும் நம்பி இருந்தனர். இப்போது, நாமாகவே இந்த வேலையை செய்யக்கூடிய அளவிற்கு, ஆலோசனைகளை பெற முடியும். அனைத்து வகையிலும் உரிமையாளர் தயாராக இருந்தாலும், நம்பகமான ஒப்பந்ததாரர், வேலையாட்கள் கிடைக்க வேண்டும். அத்துடன், நமக்கு தேவையான நேரத்தில், அவர் நேரம் ஒதுக்கி பணிகளை ஏற்க வேண்டும்.


இந்நிலையில், வீடுகளுக்கு வண்ணம் அடிக்கும் பணியில், மக்களுக்கு உதவும் வகையில், பெயின்ட் தயாரிப்பு நிறுவங்கள் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கின்றன. இணைய தளம் வாயிலாக வீட்டில் இருந்தபடியே, இந்த சேவைகளை மக்கள் எளிதாக பய்ன்படுத்தலாம்.

 

எடுத்த எடுப்பிலேயே பெயின்ட் விற்பனையாளரிடம் நிற்காமல், வீட்டில் இருந்தபடியே எந்த அறைக்கு, என்ன வண்ணம், என்ன வகை பெயின் தேவை என்பதையும், அதற்கான பட்ஜெட்டையும், நாமே முடிவு செய்யலாம்.


வீட்டின் அளவு தெரிந்திருக்க வேண்டும்: அறைகளின் புகைப்படங்கள் இருந்தால் போதும். விரும்பிய வண்ணங்கள் மாதிரிகளை, கணினி வாயிலாக பொருத்தி பார்த்து, எந்த வண்ணம் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்யலாம். பழைய வண்ணத்தையே, மீண்டும் அடிக்க விரும்பினால், குறைவான பெயின்ட்தான் தேவைப்படும். புதிய நிறத்திற்கு மாறும் போது, அதிகளவில் இழுக்கும்.

 

இதில் கூடுதல் வசதியாக, சில நிறுவனங்கள் பெய்யின்ட் அடிக்கும் பணியை முடிப்பதற்கும், ஆட்களை அனுப்பவும் முன்வந்து உள்ளன. இது போன்ற சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் மக்கள், ஒவ்வொரு நிலையிலும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

 

குறிப்பாக, பெயின்ட் தயாரிப்பு நிறுவன்த்தின் பரிந்துரைகலை, அப்படியே ஏற்க வேண்ட்க்ய கட்டாயமில்லை என்பதை புரிந்து, அஹ்டன் படி     செயல்பட வேண்டும். கூடுதல் வசதிகள் கிடைக்கிறது என்பதற்காக, சம்பந்தப்பட்ட பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரைகளில் தேவை இல்லை என்று தெரிவதை தைரியமாக தவிர்க்கலாம்.

 

கவனத்திற்கு...

1. வெளிப்புற சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச்சு எனப்படும், வெள்ளை அடிக்கும் முறை மறைந்து, அதற்கு பதிலாக, டிஸ்டம்பர்க்ஷ் வகைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

 

2. வீடுகளுக்கு வண்ணம் அடிக்கும் பணி, ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் செய்ய வேண்டிய பராமரிப்பு பணியாக இருந்து வருகிறது. வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் வண்ணங்கள் பூசப்படும் போது, வீட்டின் உள் அறைகள் விசாலமான தோற்றம் தருவதாக அமையும்.

 

3. வீட்டின் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணியை துவக்கும் முன், சுவரில் படிந்துள்ள அழுக்கு, கறைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்துவது அவசியம்.

 

4. விரிசல்களை சரி செய்ய, சிமென்ட் பூசி இரு நாட்களுக்கு பின், வண்ணம் அடிக்க வேண்டும்.

 

5. எப்போது துவங்கி எப்போது முடிக்கப் போகிறோம் என்பதை, திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

 

6. 15 அடி நீள, 12 அடி அகல, 10 அடி உயரம் அளவுக்கு, ஐந்து லிட்டர் ப்ரைமரும், ஆறு லிட்டர் பெயின்ட்டும் தேவைப்படும்.


சிறிய நிறுவனங்களிடமும் தரமான பெயின்ட் கிடைக்குமா?

புதிதாக வீடு கட்டும் போது, அதில் பூச்சு வேலை முடியும் போது, அடுத்ததாக எந்த இடத்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம் என்று, பலரும் யோசிப்பார்கள். இதற்கு சுவர்களின் அமைப்பு, பயன்பாட்டுக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்ய, பல்வேறு வழிமுறைகள் வந்துவிட்டன.

 

இதில் பலரும், இந்நிறுவனத்தின் பெயின்ட் தான் வாங்க வேண்டும் என்று, முன்கூட்டியே முடிவு செய்து வைத்திருப்பார்கள். இவ்வறு முடிவு செய்பவர்கள் பலரும், பிரபலமான பெரிய நிறுவனங்களின் பெயின்ட்டையே, தேர்வு செய்வதை பார்க்க முடிகிறது.

 

மாற்று என்ன?

பெயின்ட் நிறுவனத்தை தேர்வு செய்வதில் பெரும் பாலானோர், பிரபலமான நிறுவனங்களையே தேர்வு செய்கின்றனர். இந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை, எளிதாக அறிய முடிவதே, இதற்கு முக்கிய காரணம். இது போன்று மக்கள் மத்தியில், தங்களை பற்றிய விவரங்களை கொண்டு சேர்ப்பதில், இந்நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதே, இதன் அடிப்படையாகும்.

 

ஆனால், மக்கள் மத்தியில் பிரபலமாகத, எத்தனையோ சிறிய நிறுவனங்கள், பெயின்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. பிரபலமான பெரிய நிறுவனங்கள் வழங்குவது போன்று, மக்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு புதிய வகை பெயின்ட்களை, இந்நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இருப்பினும், இந்நிறுவனங்கள் குறித்த விவரங்கள் வெளியில் வராததால், மக்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

 

விலை குறைவு 

தற்போதைய சூழலில், பெரிய திட்டங்களில், லீட்ரூ  எனப்படும் காரியம் குறைந்த வகை பெயின்ட்களை பயன்படுத்தவே, பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு சிறிய நிறுவனங்களின் பெயின்ட்கள் தான், நல்ல தீர்வாக அமைந்து உள்ளன. எனவே, பொதுமக்களும் காரீயம் குறைந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பெயின்ட்களை, குறைந்த விலையில் வாங்க சிறிய நிறுவனங்களை நாடலாம். இணையதளத்தில் தேடினால், இத்தகைய நிறுவனங்கள் குறித்த விவரங்கள், எளிதாக கிடைத்துவிடும். 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067080