தரை மற்றும் சுவர்களில் டைல்ஸ் பதிக்கும்போது..

23 ஜனவரி 2024   05:30 AM 04 அக்டோபர் 2019   01:12 PM


டைல்ஸ் ஒட்டும் துறைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனைப் பின்பற்றி டைல்ஸ் பதித்தால், பார்ப்பதற்கு அழகாகவும், பராமரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.


டைல்ஸ் பதிப்பதற்கான தொழில்நுட்பக் குறிப்புகள்


அடித்தளம் (சப் ஃப்ளொர்) அமைக்கும் முறை டைல்ஸ் பதிக்கப் போகும் பரப்பு நல்ல கட்டமைப்புடன் உறுதியாகவும், வழவழப்பாகவும், சமமாகவும் இருக்க வேண்டும்.வாக்ஸ் போன்ற எண்ணெய்ப் படலங்கள் இல்லாமலிருத்தல் வேண்டும்.

 

ஃப்ளோர் லே அவுட்

 

முதலில், டைல்ஸ் பதிக்கப்போகும் பரப்பை சதுர அளவு கூறுகளாக்கி, அளவெடுத்து சாக்பீஸால் கோடுகள் வரைந்து கொள்ளவும், பிறகு, உதிரி டைல்ஸை ஃப்ளோரில் பொருத்திப் பார்க்கவும். கிட்-டைல்ஸ் ஒரே அளவு இருக்கும்படி இரண்டு திசைகளிலிருந்தும் அறையில் சமமாகப் பொருத்தவும்.

 

டைல்ஸ் பொருத்துவதற்கு முன் சரிப்பார்த்தல்


டைல்ஸ் பொருத்துவதற்கு சரிபார்த்தலினால், பல கார்ட்டன்களிலிருந்து டைல்ஸைக் கலந்திடு வதால் சற்றே சாயல் மாறுபடும் பிரச்சனைகளைத் தவிர்த்திடவும். ஷேடுகளை ஒருங்கிணைக்கவும்.


மெல்லிய (தின்) செட்டை பரப்புதல்

 

சாக்பீஸ் கோட்டை வழிகாட்டியாகக் கொண்டு ஒரே சமயத்தில் ஒரு பகுதியின் மீது தின் - செட்டை தடவவும். சட்டுவக்கரண்டி மீது ஃப்ளாட் பக்கத்தை உபயோகித்து, இரண்டாவது கோட் அடிக்கவும்.


டைல்ஸைப் பொருத்துதல்டைல்ஸ் ஒரு சமயத்தில் ஒன்று வீதம் தின் - செட் மீது திருகியவாறு, அழுத்திப் பொருத்தவும். அதே சமயம் அரைச்சாந்து பூசுவதற்கு இடைவெளி விட வேண்டும்.

 

டாம் டைல்ஸைத் தட்டுதல்

 

ஒரு ரப்பர் மால்லெட்டாம்பை உபயோகித்து தின் - செட்டுடன் டைல்ஸ் நன்கு பிடிக்க உறுதி செய்து கொள்ளவும். அரைச்சாந்து பூசும் இடைவெளி விவரம்
டைல்ஸ் பதித்த அடுத்த நாள் அரைச்சாந்து பூசுவது சாலச்சிறந்தது. ஒரே சமயத்தில் சிறிய அளவில், அரைச்சாந்தை ஸ்பாஞ்ச் அல்லது ஸ்க்யூஸ் கொண்டு பூசவும். இணைப்புகளில் அரைச்சாந்து அழுந்தும்படி, பரப்பு மீது நன்றாகத் தேய்க்கவும். கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான நனைந்த ஸ்பாஞ்சு கொண்டு, கூடுதலானவற்றை நீக்கவும்.

 

முறையாக சுத்தம் செய்யும் குறிப்புகள்:

 

1. தவறாமல் உங்கள் டைல்ஸை சுத்தம் செய்து துடைக்கவும்.

 

2. விடாப்பிடியாய் உள்ள கறையை, சோடா பைகார்பனேட் பேஸ்ட் மற்றும் தண்ணீர் கொண்டு அழுத்தி துவைக்கவும்.

 

3. சோப்பு குறைவாய் உள்ள டிடர்ஜென்டின் சில சொட்டுகளை உபயோகிக்கவும். உராயும் கிளீனர்களை உபயோகிக்காதீர்கள்.

 

4. டைல்ஸ் சுத்தம் செய்ய வாக்யூம் அருமையான வழி. இளஞ்சூடான தண்ணீருடன் வினிகர் கலந்திடின், அது நிரூபணம் பெற்ற, இயற்கையான சுத்தம் செய்யும் பொருளாகும்.

 

5. உங்களுக்கு எப்போதாவது அதிகஸ்ட்ராங்கான க்ளீனர் உபயோகிக்கத் தேவைப்பட்டால், அது ஆசிட் தன்மையற்றதாகவும் நடுநிலைத் தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதற்கு உறுதி செய்து கொள்ளவும்.

 

6. சமையலறை டைல்ஸிலிருந்து புகைக்கரியை நீக்க, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்த கலவையை உபயோகித்து, கழுவவும்.

 

குளியலறை டைல்ஸ் சுத்தம் செய்தல்


குளியலறை டைல்ஸை சுத்தம் செய்யும் முன்பு அழுக்கை அகற்ற சூடான தண்ணீர் வரும்படி rவரை ஐந்து நிமிடங்களுக்கு திந்து விடவும். விடாப்பிடியாக உள்ள கறைகளுக்கு, தேய்க்கும் பவுடரையும் தண்ணீரையும் கலந்த பேஸ்ட்டைத் தடவி ஐந்து நிமிடங்களுக்கு விட்டு வைக்கவும்.

 

நைலான் தேய்க்கும் பேடு கொண்டு தேய்க்கவும். கழுவிய பிறகு உலரும்படி துடைக்கவும்.


நீண்ட நேரத்திற்கு டைல்ஸ் மீதுள்ள இடைவெளி இணைப்புகளை சுத்தமாக வைத்திட ஒன்றே கால் லிட்டர் தண்ணீரில் அரை மேசைக் கரண்டி க்ளோரின் ப்ளீச் திரவத்தைக் கொண்டு கழுவி நன்றாக உலரவிடவும். பிறகு அக்ரிலிக் சீலர் அல்லது மூன்று கோட் லெமன் ஆயில் தடவவும். ஒரு கோட் அடுத்தபிறகு ஒரு மணி நேரம் உலரவிடவும்.

 

மைல்டியூவை நீக்கவும். அமோனியா மற்றும் தண்ணீரின் கரைசல் கொண்டு ஸ்பாஞ்சரிங் செய்வது டைல்ஸ் பளபளப்பாகச் செய்யும்.செய்ய வேண்டியது செய்யக் கூடாததும். டைல்ஸ் மீது சோப் உபயோகிக்காதீர்கள் ஏனெனில், அது ஒரு படலத்தை விட்டுச் செல்லும். இந்த சோப்புப்படலம் டைல்தரைப் பரப்பை மங்கலாக்குகிறது. ஸ்டீல் வூல் பேடுகளை அல்லது அதேபோன்ற உராயும், சுத்தம் செய்யும் பொருள்களை உபயோகிக்காதீர்கள். ஸ்டீல் உதிரித்
துண்டுகள், டைல்ஸ் இடைவெளிகளில் துறு, கறையை ஏற்படுத்தக் கூடும்.

 

ஆசிட் அடிப்படையிலான சுத்தம் செய்யும் பொருள்களை உபயோகிக்காதீர்கள். அவை டைல்ஸ் இடைவெளிகளின் நிறத்தைப் பாதிக்கும். மேலும் டைல்ஸை மங்கலாக்கும். சுத்தமான வினிகரை உபயோகிக்கக் கூடாது. அது ஒரு ஆசிட்டாகும்.


டைல்ஸ் மீது கனமான பொருள்களை கை தவறிப் போட்டு விடாதீர்கள். அது கடைசிவரைக்கும் டைல் தரையின் அழகைக் கெடுக்கும்.

மிகவும் உயர்ந்த க்ளாஸிக் தரைகள் உள்ள இடத்தில், ஸ்பைக் உள்ள ­ஷுக்களை அணியாதீர்கள். மண்ணை வெளியே தட்டிச் செல்ல வேண்டும். இல்லையயனில், அந்த மண், டைல்ஸ் தரையில் கீறல்களை உண்டு பண்ணும்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067071