ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பனிப் பிரதேச நாடுகளில் பனிக் காலங்களில் போக்குவரத்து என்பதே மிகவும் சிக்கலான விஷயம். பனி சதா கொட்டிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று அடி உயரம் வரை பனி சேர்ந்துவிடுவது இங்கெல்லாம் வாடிக்கையான ஒன்று. சாலைகள், விமான நிலையங்களில் ரன்வேக்கள் பனி மூடிவிட்டால் அது எவ்வளவு சிக்கல் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
வழக்கமாக ரன்வேக்களில் உள்ள பனியை அகற்ற 24 மணி நேரமும் விமான ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். மேலும், விசேஷமான வேதியியல் பொருட்கள், கருவிகள் கொண்டு பனியை உடனுக்குடன் அகற்றுவார்கள்.
இதற்கு பதிலாக சாலைகளில் படரும் பனி உடனுக்குடன் தண்ணீராக உருகி வழிந்துவிட்டால்? இந்த ஐடியா எப்படி? இதை தான் அமெரிக்காவின் லோவா மாநில பல்கலைகழகம் ஆராய்ச்சி செய்து செயல் படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த சாலையையே அயர்னிங் செய்யும் எலக்ட்ரிக் கான்கிரீட்டினால் ஆன இந்த டெக்னாலஜியை டெஸ் மோயின்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை செய்து பனியை உடனுக்குடன் உருக வைத்திருக்கிறார்கள்.
சாலையை எப்படி சூடாக்குகிறார்கள்? எலக்ட்ரிக் கான்கிரீட் என்றால் என்ன?
கான்கிரீட் பலகைகள் நடுவே ‘எலக்ட்ரோடு’ பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சூடாக்கும் டெக்னாலஜி தான் இது. இதற்கென தனித்தனி இரு கான்கிரீட் லேயர்களை உருவாக்குகிறார்கள். 8 அடி நீளம், 4 அடி அகலம் உடைய கான்கிரீட் பலகங்கள் தடிமனில் வெவ்வேறு அளவுடையதாக இருக்கிறது. 6 அங்குலம் உடைய லேயர் கீழ் பாகத்திலும் 4 அங்குலம் உடைய கான்கிரீட் லேயர் மேல் பாகத்திலும் பொருத்தப்படுகிறது. இதில் கீழ் பாகத்தில் உள்ள லேயரில் ஒரு ஸ்லாப்பிற்கு 12 எலக்ட்ரோடுகள் இடைவெளி விட்டு பொருத்தப்படுகின்றன. இது போல குறிப்பிட்ட சாலைகளில் உள்ள எல்லா கான்கிரீட் பலகங்களிலும் எலக்ட்ரோடுகள் பொருத்தப்படுகின்றன.
எலக்ட்ரோடுகளுடன் மின் ஒயர்கள் இணைக்கப்பட்டு அவை தனியே ஒரு ஹீட்டிங் சிஸ்டத்த்தில் ஒருங்கிணைக்கப்பட்டு அருகாமையில் மின் நிலையத்தில் கட்டுப்படுத்தப் படுகின்றன. இப்போது பனிப் பொழிவு அதிகமாகி பனிப் படலங்கள் அடுக்குகளாக சாலைகளில் படியத் துவங்கும் போது ஹீட்டிங் சிஸ்டம் ஆன் செய்யப்படுகிறது. இப்போது மின் ஒயர்கள் வழியே எலக்ட்ரோடுகளுக்கு மின்சாரம் பாய்ச்சப்பட்டு மேல் பக்க லேயர்களில் உள்ள கான்கிரீட் பலகம் சூடாக துவங்குகிறது. 3 நிமிடங்களில் கான்கிரீட் பலகம் 300 செல்சியஸை தாண்ட பனிப்படலம் உருகி நீராகி பக்கத்தில் உள்ள மழைநீர் கால்வாயில் கலந்து விடுகிறது. இதனால் அடிக்கடி பனிப்படலத்தை அகற்றும் வேலை இல்லை.
எலக்ட்ரோடு பொருத்தப்படுகிற கான்கிரீட் பலகங்கள் வழக்கமான கான்கிரீட் மிக்ஸ்ஸாக இருப்பது இல்லை. இதில் கார்பன் ஃபைபர், டைட்டானியம் போன்ற விசேஷ கூடு பொருட்கள் வழக்கமான கான்கிரீட் கலவையுடன் சேர்க்கப்படுவதால் எலக்ட்ரோடு உருவாக்கும் வெப்பத்தைத் தாக்கு பிடிக்கின்றன.
இதை செயல்படுத்த ஒரு நாளைக்கு ஒரு சதுர மீட்டருக்கு 333 வாட்ஸ் மின்சாரம் தேவை என்பதும் ஒரு சதுர மீட்டர் சாலையில் பனி படராமல் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 20ரூ செலவு செய்ய வேண்டும் என்பதும் சற்றே நெருடலான விஷயம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067081
|