கட்டுமானத்துறையின் உயிர் நாடி எது என்றால்? கான்கிரீட் எனச் சொல்லலாம். அந்த கான்கிரீட் தேவைக்கேற்ப, அமைவிடத்திற்கேற்ப பல்வேறு உருவ மாற்றங்களை ஆண்டுதோறும் கண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது, கான்கிரீட்டைப் பலூன் போல காற்றை உட்செலுத்தி உப்ப வைத்து அதில் சிறு வீடு அல்லது அரங்குகளை உருவாக்க வல்ல நவீன தொழிற்நுட்பம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
காற்றை உட்செலுத்தி உப்ப வைக்கும் கான்கிரீட்டின் அவசியம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒழிக்கப்பட வேண்டிய விrயம் குடிசை வீடுகள் ஆகும். அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அடிக்கடி எரியும் இந்த குடிசை வீடுகளுக்கு கான்கிரீட் வீடுகள் மாற்று என்றாலும் அத்தனை பேருக்குமே கான்கிரீட் வீடு என்பது எந்த அரசாலும் இயலாதது. தீப்பற்றாத வெள்ளத்தினால் பாதிக்கப்படாத, மழைநீர் ஒழுகாத தரமான வீடுகளை குறைந்த விலையில் உருவாக்குவதற்குத்தான் பலூன் கான்கிரீட் தொழிற்நுட்பம் நமக்கு உதவி செய்கிறது. இவ்வகையான கான்கிரீட், உலகளாவிய பிரசச்சினையான சேரி வாழ் ஏழை மக்கள் வீடுகளுக்கு உண்டான ஓர் தீர்வாகும்.
ஏழை மக்களுக்கான வீடுகள் அன்றி திடீர் அரங்குகள், நெடுஞ்சாலையில் ஓய்வு இல்லங்கள், வனங்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகள் கடப்பதற்கான பாதைகள், தனியார் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவான கூடாரங்கள் போன்றவற்றிற்கு பலூன் கான்கிரீட் தொழிற்நுட்பம் ஏற்றது. இந்த தொழிற்நுட்பம் தற்போது வெளிநாடுகளில் வரவேற்கப்படுகிறது.
எப்படி இது தயாரிக்கப்படுகிறது?
முதலில் காற்றை உட்செலுத்தி பலூனை போல உப்ப வைக்கும் பாகங்களைக் கட்டாக கட்டப்பட்ட நிலையில் விமானம் மூலமாகவோ அல்லது ட்ரக் மூலமாகவோ பணியிடத்தில் சேர்க்கப்பட வேண்டும். பிறகு இதனை கட்டிலிருந்து பிரித்து அதற்குண்டான பரப்பில் விரிக்க வேண்டும். பின்பு ரப்பர் குழாய் மூலம் அதற்கும் தண்ணீரை நிரப்ப வேண்டும். முடிவில், பாட்டரியில் இயங்கும் சிறிய மின்விசிறி அல்லது காலால் மிதிக்கும் பம்பை கொண்டு காற்றை உட்செலுத்தி உப்பும் கட்டுமான அமைப்பை ஊதி அதன் உருவத்திற்கு ஏற்ப மேலே ஏற்றி நிலைப்பாடு கொள்ள செய்ய வேண்டும்.
இதனை 12 மணி நேரம் க்யூரிங் செய்து கடினமடையச் செய்ய வேண்டும். உண்மையில் காற்றை ஊதி உப்ப வைக்கும் பாகத்தையும் கான்கிரீட் துணியையும் வெவ்வேறாக கடினபடுத்துவதை விட, உப்பும் பாகத்தை வாஸ்தவத்தில் கான்கிரீட் துணியோடு இணைக்க வேண்டும் மற்றும் அவைகளை ஒன்றாகவே மேலே ஏற்றி அதனின் நிலைப்பாட்டில் நீர் எதிர்ப்பு தன்மை கொண்ட ஜவ்வாக பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த தொழில்நுட்பத்திலுள்ள ஒரே சிக்கல் பலூனைப்போல் ஊதி உப்ப வைக்கும் உருவத்தை தக்கவைப்பதுதான்.
கான்கிரீட் குமிழ் என்கிற டோம் குமிழ் போன்ற டோமை உருவாக்கும் இந்த மெல்லிய யஷல் போன்ற கான்கிரீட் தொழிற்நுட்பம் மிக எளிதானதுதான்.
ஆகவே, மிக திறன் வாய்ந்த கான்கிரீட் கட்டுமானத்தை உருவாக்க வல்லது என்றாலும் இதனின் விலையும் குமிழ் போன்று உருவாக்குவதற்கு தேவைப்படும் குஷீப்பிட்ட வகையான அச்சும் மிக கடினமான வேலைப்பாடாக இருப்பதால் இதனை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் மிக கனமான டார்பாலீன் போன்ற பலம் பொருந்திய கட்டிடக்கலை துணியை கொண்டு உருவாக்கப்பட்ட பலூனை போன்ற உருவத்தைக் கொண்டு கான்ட்ராக்டர்கள் குமிழ் வடிவத்தை உருவாக்கலாம். இந்த தொழிற்நுட்பத்தை உபயோகப்படுத்துவதால் சாதாரணமாக தேவைப்படும் கான்கிரீட்டில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் தேவைப்படுகிறது. இதனின் பயன்பாடு மிகவும் பரவலானது.
பொதுவாக, இம்மாதிரி கான்கிரீட் கட்டுமானங்களை அமைக்க கட்டையிலான பரவலான கட்டுமானத்தை அமைப்பது மிக அவசியமானது. ஆனால், வியன்னா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்e தொழிற்நுட்ப யோசனைப்படி தற்போது உப்ப வைக்கக்கூடிய ஏர்குஷன் இந்த மாதிரி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பெரிய அeவிலான கான்கிரீட் அல்லது கல்லாலான குமிழ் கட்டுமானங்கள் தற்போது கட்டப்படுவது வழக்கத்தில் இல்லை. இதற்கு காரணம் இதனின் கட்டுமானத்திற்கு பெரிய அளவும் அதிக செலவும் கொண்ட அதனை தாங்கும் மரத்தினாலான கட்டிட அமைப்பு தேவைப்படுகிறது.
ஆகவே, புதிய கட்டிட முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மரத்தாலான கட்டுமான அமைப்பு தேவையில்லை. இதனின் உத்தி என்னவென்றால் ஏர்குrன் தரைமீது விரிக்கப்பட்டு அதன்மீது சமதe கான்கிரீட் ஸ்லாப் அமைக்கப்பட்டு அது கடினமானவுடன் ஏர்குrனில் காற்றை செலுத்தி உப்ப வைத்தல்தான். இதனால் கான்கிரீட் வளைக்கப்பட்டு நெடுநாட்கள் தாங்கும் யrல் கட்டுமானம் உருவாக்கப்படுகிறது.
இவ்வகையான கான்கிரீட் கட்டுமானத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்இந்த மாதிரியான யrல் கட்டுமானத்தை அமைக்கும் முதல்படியாக ஓர் வட்ட வடிவமான கான்கிரீட் பவுண்டேஷன் அமைக்கப்பட்டு அதன் மீது ஒரு கான்கிரீட் கட்டிடத்திற்கு தளமாக மட்டும் இல்லாமல் இந்த யrல் கட்டிடத்தை கீழே இழுத்து பிடிக்கவும் உபயோகப்படுகிறது. ஓர் 30 அடி விட்டமுள்ள குமிழ் டோமிற்கு மேலே தூக்கும் காற்றின் விசை 28,000 பவுண்டுகளாகும். பவுண்டேஷனின் ஆழம் கோட்பாடு நூலின் சிபாரிசுப்படி செயல்படுத்தப்படுகிறது. ஸ்லாப்பின் வெளிச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள சாவித்துவாரம் போன்ற அமைப்பு இந்த குமிழ் டோம் உட்புற பளுவாலோ அல்லது நில நடுக்க பளுவாலோ நகர்வது தடுத்து நிறுத்த பயன்படுகிறது.
இப்புதிய கட்டிடமுறை மரத்தினாலான கட்டுமான அமைப்புகளை தவிர்ப்பதால் சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கிறது. இதனை அமைக்கும் நேரம், பொருட்கள் மற்றும் ஏராளமான பணம் சேமிக்கப்படுகிறது. ஓர் அனுமானத்தின்படி குறைந்தது 50 விழுக்காடுகள் வரை தொன்று தொட்டு வரும் கட்டுமான பழக்கத்தையும் இந்த உத்தியினால் சேமிக்க முடிகிறது.
கான்கிரீட் எப்போதும் கான்கிரீட்டாகவே இருந்து வருகிறது. ஆனால் கான்கிரீட் உபயோகம் எப்போது முடிவடைகிறதோ அன்று வேறு மாற்றுப் பொருள் உருவாகுகிறது. கான்கிரீட் என்பது ஓர் குறிப்பிடத்தக்க பொருளாகும். அதற்குண்டான தனியான விஞ்ஞானமும் கலாசாரமும் உள்ளது. சமீப காலத்தில் தான் கான்கிரீட்டை புதுமையான வடிவத்திற்கும், உருவத்திற்கும் பயன்படுத்துவதில் ஆராய்ச்சிகள் மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன. கான்கிரீட் தொழிற்நுட்பத்தோடு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி, மானிட சமுதாயத்திற்கும் அதனின் மேம்பாட்டிற்கும் பயனுள்ள விஷயமாகும்.
அதற்கு கான்கிரீட்டை பலூன் போல உப்பவைத்து பயன்படுத்தும் தொழிற்நுட்பம் நல்ல தொடக்கம் என்றே கருதலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067082
|