மின் தடையை சமாளிக்க வீடுகளுக்கு இன்வர்ட்டர் மிகவும் அவசியமாகிறது. உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உட்பட சில வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோக்கிறோம். கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாவசியமாகிறது.
இதில், சைன் வேவ் இன்வர்ட்டர், ஸ்கொயர் வேவ் இன்வர்ட்டர் என, இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு வகையிலும் குறைந்தபட்சம், 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என, இரண்டு வகை உண்டு. 200 வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். அதை வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு வகையிலும் குறைந்தபட்ச அளவான, 250 வாட்ஸ், 400 வாட்ஸ் திறன் கொண்ட இன்வர்ட்டர்களே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டன. மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்தால், இந்த அளவு போதுமானதாக இல்லை. இதன் விற்பனையும் நிறுத்தப்பட்டது.
ஒரு காலத்தில் இது போன்ற குறைந்த திறன் கொண்ட இன்வர்ட்டர்கள் போதுமானவையாக இருந்தன. ஆனால், அண்மைக்காலமாக, இத்தகைய குறைந்த திறன் இன்வர்ட்டர்கள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போதைய நிலவரப்படி, ஒரு விளக்கு, ஒரு மின் விசிறி, ஒரு டிவி இயங்கும் வகையில், 650 வாட்ஸ் திறன் கொண்ட இன்வர்ட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக, 800 வாட்ஸ் திறன் கொண்ட இன்வர்ட்டர்கள் பெரும்பாலானோரால் வாங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி, வீட்டில் ஐந்து விளக்குகள், நான்கு மின்விசிறி அல்லது ஒரு டிவி அல்லது கணினி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இன்வர்ட்டர்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்படுவதால், மின்சாரம் தடைபடும் போது இது செயல்பட துவங்கும். இதற்காக, இன்வர்ட்டர்கள் மின்சார இணைப்பிலேயே வைத்து இருப்போம். இவ்வாறு மின்சாரம் தடைபடாத சமயங்களில் மின் இணைப்பில் இருக்கும் போது, இதுவும் மின் சாரத்தை பயன்படுத்தும்.
இதனால், வீட்டில் மற்ற உபயோகங்களுக்கு போக, இன்வர்ட்டர்கள் காரணமாகவும் மின்சார செலவு இருக்கும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதன் பேட்டரி சார்ஜ் ஆக வேண்டியது அவசியம் என்பதால் இன்வர்ட்டர், பேட்டரி ஆகியமிவற்றை மின் இணைப்பிலேயே வைத்து இருக்க வேண்டியது அவசியம்.
கோடைக்காலங்களில், தொடர்ந்து இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில், குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
இது குறித்த அடிப்படை விபரங்களை முறையாக தெரிந்து கொண்டு இன்வர்ட்டர்களை பயன்படுத்துவது நல்லது என்கின்றனர்.
கவனத்திற்கு...
. வீடுகளில் இன்வர்ட்டர் பயன்படுத்துவோர் அதற்கான அவசியத்தை முறையாக திட்டமிட வேண்டும்.
. மின் தடை காலத்தில் எத்தனை விளக்குகள் எரிய வேண்டும், மின் விசிறிகள் தேவையா, டிவி, கணினி தேவையா என்பதை கணக்கு போட்டு அதற்கு ஏற்ற திறன் கொண்ட இன்வர்ட்டர்களை தேர்வு செய்ய வேண்டும்.
. எந்த வகை இன்வர்ட்டர்களை வாங்குவதாக இருந்தாலும் அது தொடர்பான தரக்கட்டுப்பாட்டு விபரங்களை சரி பார்ப்பது அவசியம்
. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர் பேட்டரிகளை வைக்க வேண்டும். முழுவதும் மூடி வைக்க வேண்டும். முழுவதும் மூடி வைக்கக் கூடாது.
. இன்வர்ட்டர்களை வாங்கும் போது, அதன் பராமரிப்பு விதிமுறைகள் குறித்த விபரங்களை தெளிவு படுத்துவது அவசியம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067166
|