குளியலறை நீர்க்கசிவு வழுக்கல்- தவிர்த்தல் எப்படி?

23 ஜனவரி 2024   05:30 AM 30 செப்டம்பர் 2019   03:36 PM


அண்மையில் என் நெருங்கிய நண்பர் எண்னைத் தொலைபேசியில் அழைத்து கீழ்க்கண்ட சிக்கலைப் பற்றித் தெரிவித்தார். அவருக்கு வயது 75.

என்னுடைய வீட்டுக் குளியலறையில் போடப்பட்ட பழைய தரையோடுகள் வழுக்குகின்றன. எப்போது கால்வழுக்கி விழுந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. எனவே அவற்றை உடனே மாற்றவேண்டும்.

குளியலறையில் முன்பே நீர்க்கசிவு, நீர் ஒழுக்கு இருந்தது. அதைத் தடுக்க முன்பே இருந்த தரையோடுகளின் மீதே மற்றுயமாரு அடுக்கு தரையோடுகள் போட்டோம். எனினும் நீர்க் கசிவு முழுமையாகக் குறைய வில்லை.குளியலறைக்கு வரும் குழாய்கள்(சுவரிலுள்ளேமறைத்து அமைக்கப்பட்டவை) வழிவெளியேறும் நீர் விசையின்றி கொஞ்சமாக வருகிறது. இதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்துச் சரி செய்ய வேண்டும்.

இவற்றிற்கு நாங்கள் தெரிவித்த பழுதுநீக்கும் வழிமுறைகள்

 

1. குளியலறையில் போடப் பட்ட இரண்டு அடுக்கு ஓடுகளையும் எடுத்துவிட வேண்டும். காங்கிரீட் தரை குறிப்பாக அறையைச்சுற்றிய மூலைவரிகள் இவற்றில் நீர்க்கசிவு நீர் ஒழுக்கு இருக்கிறதா என சோதித்துப் பார்க்க வேண்டும். அதன்மீது சிமெண்ட் பாலுடன் நீர் தடுப்புத் திரவத்தைக் (Say Dr.Fixit Pidicrete URP/Pidicrete N or CERA Proof )  குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து இரு பூச்சுகள் / முதல் பூச்சு முடிந்து 4 மணிநேரத்திற்குப் பிறகு) பூசி காய விட வேண்டும். குறிப்பாக தரைத்தள மூலைவரிகளில் Sealant தடவியும் நீர்க் கசிவை முற்றிலுமாகத் தடுத்திட வேண்டும்.

 

2. இதன்மீது Adhesive Mortar பூசிஅதன்மீது வழுக்காத (Anti Skid) தரை ஓடுகளைப்பாவி Tile Grout பயன்படுத்தி இணைப்புகளை முழுமையாக மூட வேண்டும். தண்ணீர் விரைந்து ஓடும் வகையில் வாட்டம் (Adhesive Slope ) சரிவு கொடுத்து தரை ஓடுகள் பதியப்பட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் வழவழப்பான Ceramic Tiles, Vitrified Tiles பதிக்கக் கூடாது. வயது வந்தோர் குளியலறையில் வழுக்கி விழுந்து முதுகு / கால் உடைத்துக் கொண்ட நிகழ்வுகள் ஏராளம்.

 

3. இதற்கு மேலும் குளியலறைச் சுவர்களும் தரையும் இணையும் தரைத்தள மூலை வரிகளில் றீeழியிழிஐமி Selant (Dr. Fixit Silicone Sealant wc for tiles) தடவுதல் நீர் ஒழுக்கலை முழுவது மாகத் தடுக்கும்.

 

4. குளியலறைக்கு வரும் நீர்க்குழாய்களை சுவரை உடைத்துப் பார்த்ததில் அதனுள் பரப்பில் உப்புத்திட்டுகள்  Chloride Scales) உருவாகி வரும் வழியைப் பாதிக்குமேல் அடைத்து நீர்விசையைப் பெரிதும் குறைத்திருப்பது அறியப்பட்டது. 

 

எனவே இக்குழாய்களை எடுத்துவிட்டு புதியதாக PP-R குழாய்கள் அல்லது அலுமினியம் Composite குழாய்கள் பொருத்திடக் கருத்துரை வழங்கப்பட்டது.

 

இதன்படி இவ்வேலைகள் விரைவாக (10 நாட்களுக்குள்) செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ரூ.16500/d செலவு ஆனதாகத்  தெரிவிக்கப்பட்டது.

 

எனவே குளியலறை கழிவறைகளில் எந்தக் காரணத்திற்காகவும் வழவழப்பான Virtified Tiles  போடக் கூடாது என்பதும் நீர்க் கசிவைத் தடுத்திட புதிதாகக் கிடைக்கும் நீர்த்தடுப்பு கட்டுமான வேதியியல் திரவப் பூச்சுகளைப் பயன்படுத்திட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067190