அடித்தளத்திற்கும், கட்டட உயரத்திற்கும் தொடர்பு உண்டா?
இந்தப் பொதுவான கேள்வி கட்டுமானத் துறை சார்ந்த அனைவரிடமும் பரவலாகவே உள்ளது. கட்டட உயரம் கூடக் கூட அடித்தளங்களின் ஆழமும் கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். ஒரு சாதாரண G+1 மாடி வீட்டுக் கட்டடத்திற்குக் கூட - குறைந்தது 1.50 மீட்டர் (5 அடி) ஆழத்திற்கு மேலாக அடித்தள ஆழம் இருக்க வேண்டும் என்று (கட்டட மேஸ்திரிகள் உட்பட) வலியுறுத்துகின்றனர்.
ஒரு கட்டுநர் - அவருடைய கட்டடக் கலைஞர் வற்புறுத்தலின் பேரில் - கருங்கல் பாறை(Soft Rock & Hard Rock) அடிமனையில் 5 அடி வரை உள்ள பாறைகளை வெடிவைத்து உடைத்து அதன் பின்னரே அடித்தளம் போட்டதாகத் தெரிவித்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு (திருச்சி மாநகரில் G+2 மாடிகள் உடைய ஒரு தொடக்கப் பள்ளிக்கு - Hard Strata எனப்படும் கெட்டித்தரை கிடைக்கும் ஆழம் தோண்டிய (12 அடிக்கு மேலாக) கட்டுநரையும் தம் சொந்த வீட்டிற்கு தம்மிடம் சொந்தத்தில் JCB இயந்திரம் உள்ளதால் - 12 அடிக்கு மேலாக கடினத் தரை கிடைக்கும் வரை தோண்டிய தகுதியுள்ள பட்டப் பொறியாளரையும் நாங்கள் அறிவோம்.
இவையனைத்துமே இத்துறை சார்ந்த பொறியாளர்களுக்
கிடையேகூட கட்டட உயரத்திற்கேற்ப -அடித்தள ஆழம் இருக்க வேண்டும் என்ற தவறான - அடிப்படையற்ற புரிதல் - தெளிவற்ற கருத்துப்பதிவு இருப்பதால்தான்.
கட்டுமானத்தில் அடித்தளப் பொறியியல் மற்றும் மண்ணியக்கப் பொறியிலும் - அடித்தள வடிவமைப்பு இவற்றிற்கேற்ப அமைய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அடித்தளத்தின் ஆழம் எவ்வளவு என்பது - அடித்தளப் பொறியாளர் மற்றும் வடிவமைப்புப் பொறியாளரும் இணைந்து கலந்து பேசி - மேலிருந்து கீழிறங்கும் மொத்த பாரங்களுக்கும் தேவையான மண்ணின் காப்பு தாங்குதிறன் (SBC) எங்கு கிடைக்கிறதோ அந்த ஆழமே போதுமானது.
குறை எடை தாங்கும் மண் வகையாக (Poor Bearing Soils) இருந்தால் செயற்கை முறையில் (கல்லுடைத்தூள்: செஞ்சரளை மண் கலவை 1:3 -300மி.மீ 900 மி.மீ ஆழத்திற்கு - 150மி.மீ அடுக்குகளாகக் கொட்டி கெட்டிப்படுத்தி அடித்தளம் அமைக்கலாம். (5 அடி முதல் 8 அடி ஆழம் வரை) தரையை ஓட்டியே sdr, sr & hr போன்ற பாறை இருக்கும் அடி மனைகளில் -300 மி.மீ முதல் 500 மி.மீ வரை வெட்டி - மட்டம் செய்து ( Benching)) - எஃகு உறுதியூட்டிகளைத் துளையிட்டு உள்நுழைத்து இறுக்கி (Anchoring) அதன்மீது அடித்தளத்தை (பன்மாடிகளாக இருந்தாலும்) அமைக்கலாம்.
-By A. veerappan
www.buildersline.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2073032
|