கட்டுமானப் பணிகளில் போலி ஜல்லிகளை தவிர்ப்பது எப்படி?

23 ஜனவரி 2024   05:30 AM 10 செப்டம்பர் 2019   01:18 PM


கட்டுமானத் துறையில் விழிப்புடன் இருப்பவர் என்று கருதப்படும் கட்டுமான பொறியாளர்களும், பணியாளர்களும் கூட சில சமயங்களில் அசந்துபோய்விடும் அளவுக்கு, போலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, செங்கல், மணல், சிமெண்ட், பெயின்ட், கம்பிகளில் போலிகள் வருவது குறித்து, பல்வேறு தகவல்கள் கேள்விபட்டு இருப்போம்.

இதில், கருங்கல் ஜல்லிகளில் கூட போலிகள் வருகின்றன என்பது, பலருக்கும் புதிய தகவலாக இருக்கும். கட்டுமான பணியில் அஸ்திவாரம் அமைப்பது முதல், மேல்தளம் வரை ஒவ்வொரு கட்டத்திலும், கான்கிரீட் கலவை பயன்படுத்தபடும் இடங்களில், ஜல்லிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

கான்கிரிட் தயாரிப்பில், சிமென்ட்டின் தரம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு கருங்கல் ஜல்லிகளும் மிக முக்கியமானதாகும். இதில், குவாரிகளில் இருந்து பெறப்படும் ஜல்லிகளை மட்டுமே, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஆனால், பல இடங்களில் கிணறு தோண்டும் போதும், தரை மட்டத்தில் கிடக்கும் பெரிய பாறைகளை உடைப்பதால் கிடைக்கும் ஜல்லிகள் தரமானவை அல்ல. தரத்தின் அடிப்படையில் பார்த்தால், இவை கருங்கல் ஜல்லிகள் போன்று இருந்தாலும், பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.

எனவே, நீங்கள் வாங்கும் கருங்கல் ஜல்லிகள் முறையான குவாரிகளில் இருந்து கிரrர்கள் வாயிலாக உடைக்கப்பட்டு அனுப்பப்பட்டதா என்பதை விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், குவாரிகளில் இருந்து வரும் ஜல்லிகள் மட்டுமே, கான்கிரீட்டுக்குள் இருக்கும் போது, புறச் சூழலால் ஏற்படும் அதிர்வுகள், சுமைகளை தாங்கும் திறன் உடையதாக இருக்கும். கிணறுகள் போன்ற இடங்களில் இருந்து பெறப்பட்ட ஜல்லிகள், அந்த அளவுக்கு உறுதி தன்மையுடன் இருக்காது, அதிர்வுகள், மின்சார தாக்குதல்கள் ஏற்பட்டால் உடையகூடியதாக இருக்கும். 

கான்கிரீட் கட்டுமானத்தின் மேல் ஏற்படும். அதிர்வுகள், சுமைகளால் உள்ளீடாக உள்ள ஜல்லிகள் உடைந்தால், கட்டடத்தின் உறுதி தன்மை பாதிக்கும். போலிகளை தவிர்ப்பது போன்று, சேறு, குப்பை, கறைகள் உள்ள ஜல்லிகளையும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தாதீர். இவையும் போலிகளாக இருக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு மட்டும், 10ஆயிரம் யூனிட் ஜல்லி தேவையாக உள்ளன. இந்த நிலையில் கருங்கல் குவாரிகளுக்குச் சென்று வரும் லாரிகளின் எண்ணிக்கை, சில நடைமுறைச் கிக்கலால் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜல்லி வினியோகம் சீராக இல்லை. இதுவும் போலிகளின் நடமாட்டத்
திற்கு ஒரு காரணமாய் உள்ளது. ஒட்டு மொத்தமான இந்த காரணங்களால், கருங்கல் ஜல்லி தட்டுப்பாடு ஏற்பட்டு, கட்டுமானப் பணிகள் மேலும் முடங்கியுள்ளது என்பது, உண்மை என்கின்றனர்.

கவனத்திற்கு!

•  மணல் தட்டுப்பாட்டை தொடர்ந்து கருங்கல் ஜல்லிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கட்டுமானத் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

• தமிழகத்துக்கு நாள்தோறும் சராசரியாக, 25 ஆயிரம் யூனிட் கருங்கல் ஜல்லி தேவைப்படுகிறது. ஆனால், வரத்து மிக குறைவாக உள்ளதால், போலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

•  ஒரு யூனிட், 2,500 லிருந்து, 3,500 ரூபாயாக விலை உயர்ந்துள்ளதும், போலிகள் உருவாக மிக முக்கிய காரணமாகும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067169