சாலை அகலம் பார்க்காமல் அடுக்குமாடி வீடு வாங்க வேண்டாம்!

23 ஜனவரி 2024   05:30 AM 10 செப்டம்பர் 2019   12:53 PM


அடுக்குமாடி கட்டடங்களில் வீடு வாங்கும் போது, சில அடிப்படை விவரங்களை மக்கள் கவனிக்க வேண்டும். முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குடியிருப்பு திட்டம் எந்த, எத்தகைய நிலத்தில் அமைந்துள்ளது. நிலத்தின் உரிமை மட்டுமல்லாது, அதன் வகைப்பாடு குறித்த விவரங்களையும் அறிய வேண்டும்.

 

சுற்றியுள்ள இடங்களின் வளர்ச்சி, கழிவுநீர் வெளியேறும் வசதி, குடியிருப்புகள் அருகில் அமைந்துள்ளதா; மனை அமைந்துள்ளதா; அந்த இடம் முழு வளர்ச்சி அடைந்த இடமாக இருக்கிறதா, கார்னர் சைட், குடிநீர் மற்றும் மின்சார வசதி, மண்ணின் உறுதித்தன்மை இப்படி பல்வேறு வசதிகளை அடிப்படையாக வைத்து மனையை தேர்வு செய்கிறோம். இறுதியாக மனையானது, உள்ளூர் திட்டகுழுமம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி கட்டட விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்கிறோம். ஆனால், மனைக்கு செல்லும் சாலைகளை பற்றி அவ்வளவாக விசாரிப்பது இல்லை.

 

குறிப்பாக, அந்த திட்டம் அமைந்துள்ள பகுதியின் சாலை அகலம் எவ்வளவு என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும். அதாவது, சாலையின் தற்போதைய அகலம், முழுமை திட்டத்தில் வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட அகலம் ஆகிய விபரங்களை, துல்லியமாக பார்க்க வேண்டும். பார்க்கவில்லை என்றால், நம் விருப்பப்படி கட்டடத்தை கட்டுவதில் சிக்கல் ஏற்படலாம்.

 

நான்கு தளங்களுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் எனில, அங்கு சாலையின் அகலம், 60 அடியாக இருக்க வேண்டும். 10 மாடியும், அதற்கு மேலும் தளங்களை உடைய கட்டடம் எனில், சாலையின் அகலம், 80 அடியாக இருக்க வேண்டும். குறைந்தது, 40 அடி அகல சாலை இருந்தால் தான், அடுக்கு மாடி குடியிப்பை கட்ட அனுமதி கிடைக்கும். அப்படி அகலமான சாலை இல்லாத பட்சத்தில், கட்டடத்திற்கான அங்கீகாரமும் கிடைக்காது. 

 

வங்கிகடனும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ,இதற்கு அடுத்தபடியாக, மனைக்குள் கட்டடத்தை சுற்றிவிடப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். பொதுவாக, வளர்ச்சி விதிகளில் குறிப்பிட்ட அளவுக்கு பக்கவாட்டில் காலியிடம் விடுவதாக கட்டுமான நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால், கட்டுமான பணியின் போது, பக்கவாட்டு காலி இடத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டு விடும்.

 

இந்த காலி இடம் குறைவதால், என்ன ஆகிவிட போகிறது என, அசட்டையாக இருக்க வேண்டாம். அடுக்குமாடி கட்டடங்களில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில், மீட்பு வாகனங்கள் தடங்கலின்றி வந்து செல்ல, இத்தகைய காலி இடம் அவசியமாகிறது. பெரும்பாலான குடியிருப்புகளில், செட்பேக் பகுதியை வாகன நிறுத்துமிடங்களாக பயன்படுத்துகின்றனர். இதுவும் அவசரகாலங்களில் பாதிப்பை அதிகப் படுத்தும்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067184