தனி வீடுகள், அப்பார்ட்மெண்ட் வீடுகள், பண்ணை வீடுகள் என கட்டுமானம் எதுவாக இருந்தாலும் ப்ளம்பிங் எனப்படும் குழாய்கள் பொருத்தும் பணிகள் மிகவும் முக்கியமானவை. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் அனுப்புகிறோமோ அத்தனை லிட்டர் தண்ணீர் நுகரப்பட்டு அத்தனை லிட்டர் தண்ணீரும் கழிவு நீராகத் திருப்பப்படும். எனவே தான் குடிநீர் சப்ளை செய்யும் குழாய்கள் போலவே கழிவு நீர் வடிகால் குழாய்களும் மிக கவனமாக நிறுவப்பட வேண்டும்.
ப்ளம்பிங் குழாய்களை பதிக்கும் போது ப்ளம்பர்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பத்து விஷயங்கள் உள்ளன.
1. ஒரு வீட்டின் சராசரி நுகர்வு எத்தனை லிட்டர் எனக் கேட்டறிந்து அதைவிட மூன்று மடங்கு அதிகமாக தண்ணீர் வெளியேறுவதற்கான வழிகளை செய்வதற்கான குழாய் வடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
2. கூடுமானவரை “ஸி’ ஆங்கிள் எனச் சொல்லப்படும் “எல்போஷ்க்களை அருகருகே பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.
3. கட்டுமானத்தின் உரிமையாளர் என்பவர் ப்ளம்பிங் பற்றிய தொழிற்நுட்ப அறிவு அற்றவராக இருப்பார். எனவே, அவர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக அவர் சொன்ன அளவுகளில், அதாவது தேவையைவிட குறைவான விட்டமுடைய குழாய்களை வாங்கிப் பொருத்திவிட கூடாது.
4. எலக்ட்ரிக்கல் மற்றும் ப்ளம்பிங் போன்றவை கன்சீல்ட் பணிகளாகும். இவற்றுள் எலக்ட்ரிக்கல் பணிகள் பெரும்பாலும் சுவர்கள், தளங்கள் ஆகியவற்றில் உள்ளே பெரும்பாலும் பதிக்கப்பட்டுவிடும். ப்ளம்பிங் பணிக்கு அத்தனை சிரமங்கள் இருப்பதில்லை என்றாலும் பேஸ்மட்டத்தைப் பொறுத்தவரை கழிவுநீர் குழாய்களை உள்ளேயே புதைத்துவிடுகிறார்கள். அது போன்ற சமயங்களில் அஸ்திவாரங்கள் மேற்கொள்ளும் போதே குழாய்களை பொருத்தும் பணிகளை செய்து முடித்துவிட வேண்டும்.
5. வீட்டுக் கட்டுமானத்தை முழுதாக முடித்தப் பின்னர் குழாய்களைப் பொருத்தும் போது சிற்சில இடங்களில் தாய் சுவர்களை மற்றும் பார்டிஷன் சுவர்களை துளையிடும் பணி மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதை தவிர்க்க முன்பே திட்டமிட்டிருந்தால் குழாய்கள் சுவர்களை ஊடுருவும் இடங்களில் தேவையான திறப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் சிரமம் குறையும் நேரம் குறையும்.
6. பெரும்பாலான வீடுகளுக்கு குழாய்கள் மூலம் நீர் ஒழுகுதல் என்கிற பிரச்சனை நீண்ட காலம் இருக்கும். எனவே, பிவிசி குழாய்களை எவ்வித சேதமும் இல்லாமல் பொருத்த வேண்டும். அதே போன்று பிற்காலத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் சரி பார்க்க ஏதுவாக குழாய்கள் பொருத்தப்பட வேண்டும்.
7. நான்கு அங்குலம் மேற்பட்ட பிவிசி குழாய்களுக்கு ஆங்காங்கே பழுதுபார்க்கத் தோதாக மறை வைத்த திறப்புகள் பொருத்தப்பட்ட வசதிகள் இருக்கின்றன. ஆனால் இவை விலை சற்று அதிகம். இதை வாங்க உரிமையாளர்கள் யோசிப்பார்கள். ஆனால், 40 அடி நீளத்தில் ஒரு நீளமான குழாயை ஜாயின்ட்டுகள் போட்டு நாம் பொருத்தும் போது நடுவில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அவற்றை நீக்குவதற்கு இது போன்ற திறப்புகள் தேவை என்பது எடுத்துரைத்து உரிமையாளருக்கு புரிய வைக்க வேண்டும்.
8. தற்போது சிமெண்ட்டினால் ஆன பைப்புகளை பயன்படுத்தும் பழக்கம் நகர்ப்புறங்களில் குறைந்துவிட்டன. ஆனால், முற்றிலுமாக சிமெண்ட் பைப்புகளின் உபயோகம் நின்று விடவில்லை. (மொட்டை மாடியிலிருந்து நீரை வெளியேற்றவும் கழிவு நீரை வெளியேற்றவும் தான்
சிமெண்ட் பைப்கள் பொருத்தப் டுகின்றன). பிவிசி பைப்புகள் போல சிமெண்ட் பைப்புகளுக்கு பிராண்டிங் என்பது இல்லை.
9. எனவே, தேவையான தரத்துடனும் உறுதியுடனும் சிமெண்ட் பைப்கள் தருவிக்கப் படுகின்றனவா? என்பது தெரியாது. எனவே, கூடுமானவரை மொட்டை மாடியிலிருந்து நீரை வெளியேற்றவும் கழிவு நீரை வெளியேற்றவும் பிவிசி பைப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
10. சமயலறை மற்றும் குழியலறை கழிவறை உபயோகங்களுக்கு ஸ்டீல் குழாய்களை பொருத்தும் போது அவை ஒரு போதும் துருப்பிடிக்காத தரமான பிராண்டட் ஸ்டீல் குழாய்களா? என்பதை அறிந்து தான் பொருத்த வேண்டும். வால்வுகளும் தரமறிந்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு முழுமையான ப்ளம்பிங் பணி தான் ஒரு வீட்டின் நீர் ஒழுகுதல் என்கிற நெடுநாள் அவஸ்தையிலிருந்து காப்பாற்றுகிறது. எனவே, குழாய்கள், வால்வுகள் மட்டுமின்றி அவற்றை பொருத்தும் ப்ளம்பிங் பணியும் தரமிக்கதாக இருக்க வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067185
|