1. சைட்டிற்கு வரும் கட்டுமானப் பணியாளர்களின் வரவை பதிவு செய்து அவர்களை வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமாக யாருக்கு என்ன வேலை தர வேண்டும்? யாருக்கு எந்த வேலை தெரியும்? தொழிலாளர்களின் குணாதிசயம் என்ன? அவர்களின் தன்மை என்ன? ப்ளஸ் பாயின்ட், மைனஸ் பாயின்ட் என்ன? என்பதை ஒரு சைட் சூப்பர்வைசர் தெரிந்திருக்க வேண்டும்.
2. பணியாட்கள் எப்போதும் சூப்பர்வைசரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனக்குரிய இருக்கையில் அமர்ந்து விடாமல் சைட் முழுவதும் வலம் வரக்கூடியவராக இருக்க வேண்டும்.
3. தான் ஒரு வேலை வாங்கும் இயந்திரம் போல் அல்லாமல், பணியாளர்களாடு ஒத்துப் பழகி, அன்பாகப் பேசி, அவர்களிடம் வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும்.
4. பணியாளர்களுக்குத் தேவையான இருப்பிட, கழிப்பிட மற்றும் குடிநீர் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.அவர்கள் தங்கும் இடத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் சுகாதாரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்e வேண்டும்.
5. தொழிலாளர்களின் சிறிய தவறுகளை அன்போடு கண்டிக்க வேண்டும். அதே சமயம் மன்னிக்க வேண்டும். ஆனால், அலட்சியமாக செய்யப்படும் தவறுகளை செய்யும்போது கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
6. தொழிலாளர்கள் தொடர்ந்து சூரிய ஒளியில் பணிபுரிவதை தடுக்க வேண்டும்.
7. வேலையின் தன்மைக்கேற்ப வேண்டிய உபகரணங்கçe அணிகிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும்.
8. கட்டுமானப் பொறியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே உறவுப் பாலமாக செயல்பட வேண்டும்.
9. பணியாட்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் அவர்களின் கூலி மற்றும் முன்பணத்தை தவறாமல் கொடுத்து விட வேண்டும். நிறுவனத்திடமிருந்தோ, கட்டுநரிடமிருந்தோ பணியாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கித்
தருவதில் முனைப்பு காட்ட வேண்டும்.
10. திட்டமிட்டபடி மறுநாள் நடக்கப்போகும் கட்டுமானப் பணிகள் என்ன? அதற்குத் தேவையான பொருட்கள் என்ன? என்பதைப் பற்றிய விவரங்களை முன்கூட்டியே பெற்றிட வேண்டும்.
11. ஒட்டு மொத்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் சைட்டிற்கு, சைட் சூப்பர்வைசர்தான் பாதுகாப்பு அதிகாரியாக கருதப்படுவார். பாதுகாப்பைப் பொறுத்தவரை சிறு சைட்டுகளுக்கு சைட் சூப்பர்வைசர்தான் முழுப்பொறுப்பு. பெரிய நிறுவனங்களில் இதற்கென தனியே ஒரு அதிகாரி இருந்தாலும், சைட் சூப்பர்வைசரும் பாதுகாப்பு விதிகளைக் கண்காணிப்பது நல்லது.
12. கட்டுமான வேலைகளின் போது பணியாளர்களுக்கு விபத்து ஏதேனும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கென அடிப்படை முதலுதவிகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. மேலும், இதற்கென ஆகும் செலவிற்குத் தேவையான பணத்தை நிறுவனத்தினரிடமிருந்தோ, கட்டுநரிடமிருந்தோ வாங்கி தன்னுடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
13 பணியாளர்கள் அதிகப்படியாகத் தேவைப்படின், அவர்கள் எங்கு கிடைப்பார்கள் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
14. ஒன்றுக்கு மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் அவர்தம் ஊழியர்கள் ஒரே கட்டுமானத்தில் பணி புரியும்போது, எந்த ஊழியர், எந்த கான்ட்ராக்டரிடம் பணி புரிகிறார்? என்கிற விவரத்தையும், கான்ட்ராக்டரின் பெயர், கைபேசி எண்ணையும், தனியே ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஊழியர்களின் விவரங்களையும் நாம் வைத்துக் கொள்வது நல்லது.
15. கட்டுமானத்திற்குத் தேவையான தரமான பொருட்கள் எங்கெங்கு தடையின்றி கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சப்ளையர்களின் விவரங்கçe கை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவரே ஒரு சிறந்த சைட் சூப்பர்வைசர் ஆக முடியும்.
16. பணியாளர்களின் பல்வேறு வேலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள் , சாதனங்கள், உபகரணங்கள், பொருட்களை உடனடியாக சப்ளை செய்ய வேண்டும். மேற்கூறியவை இல்லை என்கிற காரணத்தினால் கட்டுமானப் பணிகள் நிற்கக் கூடாது.
17. கட்டுமானப் பொருட்களின் இருப்பு, வரவு & செலவு முதலியவற்றை முறையாக பதிவு செய்ய வேண்டும்.
18. பொருட்களை கொள்முதல் செய்யும் போது பொறியாளருடன் கண்டிப்பாக செல்ல வேண்டும். தானே செல்ல வேண்டிய சூழ்நிலை வரும்போது, பொறியாளருடன் நேரிலோ, அல்லது கைபேசியிலோ முன் ஆலோசனை செய்து கொள்e வேண்டும்.
19. ஜல்லி, மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் சைட்டிற்கு வந்து சேரும் போது அந்த அளவீடுகளை அளக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
20. செங்கற்களை அட்டி போட்டு அடுக்கி வைக்க பணித்திட வேண்டும். அடுக்கும்போது நடுவில் வெற்றிட
மாக அடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
21. சிமெண்ட் மூட்டைகளை பேஸ் போட்டு அடுக்க வேண்டும். அவற்றில் ஈரம் படாமல் பார்த்துக் கொள்e வேண்டும். மழை வந்தால் சிமெண்ட் மூட்டைகளை பாதுகாக்க கட்டுமானப் பொருட்களை வைக்கும் YARD-ல் அடுக்கி வைக்க வேண்டும்.
22. First In , First Out என்பதற்கேற்ப, எந்த கட்டு
மானப் பொருள் முதலில் கொள்முதல் செய்யப்பட்டதோ அவற்றை முதலில் பயன்படுத்திட வேண்டும். இதற்கு ஸ்டோர் கீப்பரை அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும்.
23. ஸ்டோரிலிருந்து கொண்டு செல்லும் கட்டு மானப் பொருட்கள் முறையாக சேதாரமின்றி செலவிடப் பட்டதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
24. சிமெண்ட் மூட்டைகள் கட்டி தட்டிப் போகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
25. சிமெண்ட் மூட்டைகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும். அதாவது, சுவர் ஓரமாக அடுக்குதல் கூடாது. எண்ணுவதற்கு வசதியாகவும், மீண்டும் எடுக்க வசதியான உயரத்திலும் அடுக்க வேண்டும்.
26. கட்டுமானத்திற்குப் பயன்பட்டதற்குப் போக மீதம் உள்ள பொருட்களை இருப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
27. சிமெண்ட் கலவை வேஸ்ட் ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சில நேரங்களில் மண்ணோடு மண்ணாக கலவையைப் போட்டு மூடி விடுவார்கள். அவ்வாறு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும்.
28. அனைத்துப் பொருட்களும் தீப்பிடிக்காதவாறு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும்.
29. சைட்டின் பாதுகாவலனாகவும், சைட் சூப்பர்வைசர் விளங்க வேண்டும். வெளி ஆட்கள், நிறுவனத்திற்கும், சைட்டிற்கும் சம்பந்தமில்லாத ஆட்கள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
.
30.இரவு நேரங்களில் கட்டுமானப் பொருட்கள், சாதனங்கள், உபகரணங்கள் திருட்டுப் போகாமல் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். காலை வந்த உடனே இவற்றைக் கணக்கெடுப்பதில் வேகம் காட்ட வேண்டும்.
31. மரச்சட்டங்கள், ஃபிரேம்கள் ஆகியவற்ஷீன் அளவுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
32. பணிகளின் தரத்தைப் பேணுவதும் சைட் சூப்பர்வைசரின் வேலையாகும். உதாரணத்திற்கு, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் செங்கற்களை தண்ணீரில் நனைத்த பிறகே பயன்படுத்துதல் வேண்டும் என்பதை கண்காணிக்க வேண்டும்.
33. கட்டுமானத்திற்கு உறுதியைத் தருவது கியூரிங் பணிகள்தான். எனவே, சோம்பலின்றி முறையான கால அளவீடுகளாடு, கியூரிங் பணிகள் தொடர்ந்து செய்ய பணியாளர்களை பணித்திட வேண்டும்.
34. காலம்கள், பீம்கள், பிளாஸ்டரிங் வேலைகள் எந்த தேதியில் முடிக்கப்பட்டது என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப கியூரிங் மற்றும் இதர பணிகளை செய்ய வேண்டும்.
35 . கான்கிரீட் பணிகளுக்கான முட்டு மரங்கள்/ஸ்டீல்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? ரன்னருடைய தூர அள வுகள் சரியான விகிதத்தில் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
36. சிமெண்ட் கலவை போடும்போது, சூரிய ஒளி படாத வகையில் YARD ஒன்றை அமைத்து அதற்குள் கலவையிட வேண்டும்.
37. சைட்டை எப்போதும் ஆணி, கம்பி, குப்பைகள் இல்லாதவாறு அன்றாடம் தூய்மையாக வைத்துக் கொள்e வேண்டும்.
38. ஆரம்பகட்ட பணிகளின் போது மின் சப்ளை டெம்பரவரியாகத்தான் வாங்கி இருப்பார்கள். ஆகவே, மின்சாரம் சார்ந்த பணிகள் செய்யும்போது, எந்நேரமும் விபத்துக்கள் நேராதவாறு கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
39. எர்த்ஒர்க் நடைபெறும்போது மின் கடத்தும் கேபிள் ஏதேனும் செல்கிறதா? என்று பார்வையிட்டு பணியை மேற்கொள்ள வேண்டும்.,
40. மரச்சட்டங்களை படுக்கை மட்டத்தில் சமமாக அடுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்ய வில்லையயனில், அவைகள் வளைந்து போகும். இவற்றைத் தவிர்க்க அதன் மேல் தேவையான பாரங்களை வைக்க வேண்டும்.
From Buildersline Monthly
www.buildersline.in
For Subscribe pl call : 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067296
|