மேற்பூச்சு, பட்டி இல்லை வீட்டுக்குள் ஹீட்டும் இல்லை..!

23 ஜனவரி 2024   05:30 AM 09 செப்டம்பர் 2019   12:43 PM


இயற்கைக்கு மிகவும் நெருக்கமான, சிமென்ட் போன்ற செலவினங்கள் பெரிதும் தவிர்த்த,    வழக்கமான பாணியில் இல்லாத,தனித்துவம் வாய்ந்த  இல்லங்கள் நாடுவோரை, “எங்களிடம் வாருங்கள் உங்களுக்காக கனவு இல்லங்களை பிரம்மிக்கும் அழகுடன் கட்டித் தருகிறோம்’ என வரவேற்கிறார். சென்னையைச் சேர்ந்த எல்.பி கன்ஸ்ட்ரக்rன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. லோகேஷ்.

 

சிமெண்ட் மேற்பூச்சு, பட்டி முழுதும் தவிர்த்து கலைநயம் மிக்க சுவர்களால் ஒட்டு மொத்த வீட்டின் தோற்றத்தினை மாற்றி கலைக்கூடமாக்கி விடுகிறார் இந்த இளம் பொறியாளர். வழக்கமான செங்கல் அல்லாமல் இதற்கென புதிய பசுமை இன்டர்லாக் மண்கல்லினை தாமே தயாரித்துப் பயன்படுத்துகிறார்.

 

சுவர்களில் அதிக செலவு செய்து டைல்கள், மார்பிள், கிரானைட் பதிக்கும் வழக்கத்தினை மாற்றி புதிய டிரண்ட் செட்டராக களத்தில் புகுந்திருக்கும் லோகேஷைr சந்தித்து அவரது புதிய வகைச் செங்கல் மற்றும் புதிய கட்டுமான முறை பற்றிக் கேட்டோம்.

 

“”சார்.சுவர்களுக்கு சிமென்ட் பூச்சு இல்லாமல் இருப்பது லாரிபேக்கர் காலத்து பழைய முறைதான். ஆனால் யாரும் அப்படிப்பட்ட இல்லங்களை விரும்ப மாட்டார்கள். அதற்கு காரணம் கட்டுமானச் செங்கல் நல்ல அழகான  தோற்றத்திலும், உறுதியுடனும் இல்லாமல் இருப்பது தான். எனவே அதற்கென விசேஷமான புதிய செங்கல்லை தயாரிக்க துவங்கினோம்.

 

இதன்படி களிமண், சுண்ணாம்பு, பாறைதுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இச்செங்கல் வைத்து வீடு கட்டும் போது சுவர் கட்டுமான வேலைக்கும் சரி..,மேற்பூச்சுக்கும் சரி சிமென்ட், மணல் கலவை சுத்தமாக தேவைப்படாது. இதனால் சுவர் கட்டு வேலை மற்றும் மேற்பூச்சுக்கு ஆகும் செலவினம் பெரிதும் குறைகிறது.


மேலும் பட்டி பார்க்கும் வேலையும் இல்லை. நீங்கள் விரும்பினால் வேண்டிய நிறத்தில்  பெயிண்ட் செய்து தருகிறோம். பரீட்சார்த்தமாக இதைச் செய்ய ஆரம்பித்தோம். முதல் புராஜக்டில் இது செமையாக ஹிட் ஆகிவிட, இப்போது தனி வீடு கட்டும் மக்கள் பலரும் இதே போல செங்கல் வைத்து வீடுகட்டச் சொல்லி தேடி வருகிறார்கள்’’ என்கிறார் லோகேஷ்.

 

இதுபோன்ற மாற்று மண்கல்லினால் வீடு கட்டுவதால் நுகர்வோருக்கு உண்டாகும் பலன்கள் என்ன?


“”முன்பே சொன்னது போல் கட்டுமானச் செலவு குறைகிறது. வழக்கமான கட்டுமான முறைக்கு ச.அடிக்கு ரூ.2000 எனில், இதற்கு ரூ.1800 தான் ஆகும். மேலும்.  இந்த இன்டர் லாக் செங்கல்லில் சுண்ணாம்பு கலந்திருப்பதால் வீட்டில் ஏசி போட தேவையே இருக்காது. வெளி வெப்பநிலையை  விட, உள்ளுக்குள் சுமார் 5 டிகிரி வெப்ப நிலை  குறைவாகவே இருக்கும். 

 

மேலும் உங்கள் வீடு  தனித்துவமான தோற்றத்தில் காட்சி அளிக்கும். இயற்கையோடு சேர்ந்த பசுமை வீட்டை விரும்புவோர்க்கு எங்கள் நிறுவனத்தின்  இல்லங்கள் பெரிதும் விரும்பத்தக்கதாக இருக்கும்’’ என்னும் லோகேஷ் இந்த பசுமை மண்கல்லை தயாரிப்பதற்கென்றே தனி தொழிற்சாலையும் ஈரோட்டில் ரூ. 1 கோடி முதலீட்டில் 7 ஏக்கர் பரப்பளவில்  நிர்மாணித்து இருக்கிறார்.

 

இதுவரை சென்னை புறநகரில் பத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களை மாறுபட்ட தோற்றத்தில் கட்டி அசத்திய இவர், தங்கள் பசுமை மண்செங்கல்லைப் பற்றி பேசும்போது, “”நாங்கள்  தயாரிக்கும் மண்கல், எரிசாம்பல் கற்கள் போல் அல்லாமல், அடிப்படையில் குளுமையானது. இது மாறிக்கொண்டே இருக்கும் வானிலைக்கு ஏற்றாற்போல் குளிர்ச்சியை கொடுக்கும். 

 

80% செம்மண்,(நுண்மண்)15%சுண்ணாம்பு, 5% குவாரி டஸ்ட் (பாறைத்துகள்)பயன்படுத்தி 9x9x4.5 ,9x6x4.5, 12x9x6 ஆகிய மூன்று அளவுகளில் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் இயந்திரம் மூலமாகவே தயாராகும் இந்த கற்கள் வழக்கமான செங்கல்லை விட பலமடங்கு அதிக உறுதி வாய்ந்தவை. கட்டுவேலை செய்ய மிக எளிதானவை.

 

இக்கற்களை எங்களது புராஜெக்டுகளுக்கும் மட்டுமன்றி மற்ற பில்டர்கள், காண்ட்ராக்டர்கள்,மற்றும் வீடு கட்டுவோருக்கும் சப்ளை செய்கிறோம். சிமெண்ட், மணல், தண்ணீர் பயன்பாடு அறவே இதில் இல்லாததால் பலரும் இந்த கட்டுமான முறைக்கு மாறுகின்றனர். சுவர் கட்டுமானம் தவிர மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளும், கட்டடப் பொருட்களும் வழக்கமானவை தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லி விடுகிறேன். ஒரு வேளை உங்களுக்கு இந்த  மாற்று மண்கல் மற்றும் எங்கள் கட்டுமானமுறை மீது ஐயம் இருந்தால் நிச்சயம் நாங்கள் கட்டி முடித்த புராஜக்ட்களையும் அதில் வசிக்கும் வாடிக்கையாளரையும் நேரில் பார்த்து பேசி விட்டு ஐயங்களை  தீர்த்துக் கொள்ளலாம்’’ என்கிறார்  திரு. லோகேஷ் உறுதியாக.

 

எல்.பி. கன்ஸ்ட்ரக்rன் சென்னை புராஜெக்டுகள் மற்றும் மாற்று இன்டர்லாக் மண்கற்களைப் பற்றியும் அவர்களின் புதிய கட்டுமான முறை பற்றியும் அறிய., தொடர்பு கொள்ளவும் :

 

எல்.பி. கன்ஸ்ட்ரக் ஷன், நெ.8/2 எல் & டி காலனி, 
பேஸ் 2, விருகம்பாக்கம்,

சென்னை - 600 092,
போன் : 096000 89359
E: mail4lbconstruction@gmail.com
Website : lbconstruction.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067186