ஹேபிடட் அளிக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான தரமான கட்டுமானம்.

23 ஜனவரி 2024   05:30 AM 09 செப்டம்பர் 2019   11:00 AM


கட்டுமானத்திற்கு கான்கிரீட் கூரைத் தவிர பலவகைப்பட்ட கட்டுமானக் கூரைகள் சந்தையில் உள்ளன. பிராண்டட்/ நான்- பிராண்டட் மற்றும் பல ரகங்களில் கூரைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. கூரைகளில் சாண்ட் விச் பேனல்கள், ஸ்டீல், சிமெண்ட் ஷீட், பாலி கார்பனேட், பிவிசி, கருகேடட் அயன் (Corrugated Iron) இபிடிஎம் ரப்பர் என பலவகைக் கூரைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்  சந்தையில் உள்ளன. ஆனால் இவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இவற்றை சந்தைப்படுத்துவதும், தரத்தை மேம்படுத்துவதும், தங்கள் தொழிலகங்களின் செயல் திறனை அதிகரிப்பதும்  பெரும் பிரச்சனையாக இருக்கிறது. 

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு கூரைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது ஹேபிடட் நிறுவனத்தின் டெர்வில்லிகர் மையம் (Terwilliger Center). 

குறைந்த வருவாய் பிரிவினர் வீடுகட்டும் போது அவர்கள்  நீடித்து உழைக்கக் கூடிய தரமான கூரையைப் பெற வேண்டும் என்பதற்காகவும், கூரைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவும்  Terwilliger Center  கட்டுமானச் சந்தையில் பணியாற்றுகிறது.

இந்த மையம் குறைந்த வருவாய் பிரிவினர் வீடுகளுக்கான தரமான எம்.சேண்ட், வாட்டர் ஃபுரூபிங் பணிகள், கட்டுமானப் பணியாளர்களை நியமித்தல் மற்றும் கூரைப் பொருட்களை வழங்கல் ஆகிய நான்கு முக்கியமான துறைகளைச் சேர்ந்த நிறுவவனங்களுடன் இணைந்து பங்காற்றுகிறது.

டெர்வில்லிகர் மையம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் இணைந்து  உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை நீக்க பணியாற்றுகிறது.

ஏன் இந்தப் பணிகளை ஹேபிடட் நிறுவனம் செய்ய வேண்டும்?

ஹேபிடட்  என்பது உலகளாவிய நிறுவனமாகும்.  ஏழை நடுத்தர மக்கள் தரமான கூரையின் கீழ் தங்கள் இல்லங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதும்  தரமான எம்.சேண்டால், திறமையான கட்டுமானப் பணியாளர்களால் கட்டப்பட்ட நீர்க்கசிவு இல்லாத இல்லங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தான் ஹேபிடட்   நிறுவனத்தின் இலக்கு ஆகும். 

இதனால் 1000 ச.அடி வரை வீடு கட்டும் மக்கள் பெறும் பயனடைவர்.ஹேபிடட்  தரும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் கூரைப் பொருட்களின் சந்தையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் கூரைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு : 

Terwilliger Center for Innovation in Shelter, 
ஹேபிடட்  ஃபார் ஹியுமானிட்டி இண்டர் நேஷனல், 
C/o  டிவாரா டிரஸ்ட், 10 வது தளம்,  
ஐஐடிஎம் ரிசர்ச் பார்க், கானகம் ரோடு,  
தரமணி, 
சென்னை - 600113. 
வருண் பூஜாரி - இமெயில் : tcis-india@habitat.org

திரு.வருண் பூஜாரி 
கைபேசி : 9885601001 / 044 66687388
E-mail : tcis-india@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067187