JKs Foundation ஃபவுண்டேஷன்

27 ஜனவரி 2024   05:30 AM 07 செப்டம்பர் 2019   11:22 AM


சென்னையில் நடுத்தர வருவாய் பெறும் மக்களுக்காக வீடுகள் கட்டும் சேவையை கடந்த 14 ஆண்டுகளாக செய்து வருகிறது JKs Foundation கட்டுமான நிறுவனம். 2003 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரைசுமார் 57 அபார்ட்மென்ட்கள் மற்றும் 68 தனி வீடுகளைக் கட்டி முடித்திருக்கிறது. மொத்தம் 125 கட்டுமான புராஜக்டுகளைக் கட்டி முடித்து வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைத்திருக்கிறது. குறுகிய காலத்திலேயே 3 லட்சம் ச.அடி பரப்பிலான கட்டுமானங்களைக் கட்டி முடித்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு.

 

அதில் அடுக்குமாடி வீடுகள், 2,20,000 சதுரஅடிஎன்ற அளவிலும் தனி வீடுகள் 60, 000 சதுர அடி  என்ற அளவிலும் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜெயக்குமார் அவர்கள் கூறும்போது, “”ஆரம்பத்தில் JK Foundation என்னும் பெயரில் இயங்கிய இந்நிறுவனம் 2017 முதல்   
JKs Foundation  என்றழைக்கப்படுகிறது. என்னுடைய மனைவி திருமதி.J. சத்தியலஷ்மி அவர்களை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு JKs Foundation (Partnership) என்று மாற்றப்பட்டது.

 

JKs Foundation ஆக மாற்றப் பட்ட இரண்டு ஆண்டுகளில் சுமார் 8 அபார்ட்மெண்டுகளை கட்டி முடித்துள்ளோம்’’ என்றவரிடம் பட்ஜெட் பில்டர் ஆக தொடர்ந்து செயலாற்றுவது பற்றிக் கேட்டோம்.

 

“”எப்போதுமே  பட்ஜெட்  வீடுகளுக்கான தேவை இருந்து வருகிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான வீடுகளை வாங்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் மாதச் சம்பளக்காரர்களாக இருக்கிறார்கள். 

 

எங்கள் புராஜெக்டுகள் பெரும்பாலும் வட சென்னையில் அமைந்து வருகின்றன. சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வினாயகபுரம், பொன்னியம்மன் மேடு, பெரியார் நகர், ஜவகர் நகர், தேவகி நகர் என பல இடங்களில் அபார்ட்மெண்ட் மற்றும் தனிவீடுகளை கட்டி முடித்துள்ளோம் . எங்கள் நிறுவனத்தில் வசதி மிக்க மற்றும் வசதி குறுகிய நிலையில் இருப்பவர்களும் வாங்கும் விதத்தில் 500 Sqft முதல் 1000 Sqft வரையிலான வீடுகள் உள்ளன. எங்கள் நிறுவனத்தில் Loan வசதியும் செய்து தரப்படுகின்றன’’ எனக்கூறும் திரு. ஜெயக்குமார், தனது நிறுவனத்தின் அசைக்க முடியாத வெற்றி பற்றிக் கூறும்போது, 

 

“”பொருளாதார மந்தமான இச்சூழ்நிலையில் கார், வீடுகள் வாங்குவது மக்களிடையே கடினமான விஷயமாகி விட்டது. இந்த  தருணத்தில் கூட, எங்கள் வீடுகளை சந்தைப்படுத்த நாங்கள் பெரிதும் சிரமப்படவில்லை. காரணம் எங்களின் வாடிக்கையாளர்கள் தான். 

 

இது வரை 600 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நாங்கள் கட்டித்தந்த தரமான கட்டுமானங்களில் மன நிறைவுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு எங்கள் நிறுவனத்தைப் பரிந்துரை செய்து அவர்களையும் எங்களிடமே வீடுகள் வாங்கச் செய்வதால் எங்கள் புராஜெக்டின் வீடுகள் தேக்கமின்றி விற்பனை ஆகின்றன. இதே தரம்,  வாடிக்கையாளர் திருப்தி, விற்பனைக்குப் பிந்தைய சேவை போன்றவற்றைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதும் எங்கள் வெற்றிப் பயணத்திற்குக் காரணம்.’’ என்றார்.

 

தங்களது லேட்டஸ்ட் புராஜக்ட் பற்றிக் குறிப்பிடும்போது,

“”தற்போது நாங்கள் சென்னையில் கொடுங்கையூரில் உள்ள ஆர்.வி,நகரில் 6 வீடுகளை கொண்ட 1 அபார்ட்மெண்டும், அதே கொடுங்கையூரில் உள்ள எவரடி காலனியில் 6 வீடுகளை கொண்ட 1 அபார்ட்மெண்டும், பொன்னியம்மன் மேட்டில் 2 அபார்ட்மெண்டும், திரு.வி.க.நகரில் உள்ள வெற்றி நகரில் தனி வீடும் கட்டி கொண்டு வருகிறோம்’’ என்றார்.

 

JKs Foundation லேட்டஸ்ட் புராகெஜ்ட்கள் பற்றிஅறிய:

 

JKs Foundation, ஏ.ஜெயகுமார். 
28 A , வேலவன் நகர், பாலாஜி நகர், 

மெயின் ரோடு,  

கொளத்தூர்,  
சென்னை - 600099,
தொலைபேசி : 9884059591.
இமெயில் : jkfoundation95@gmail.com
Web: www.jkfoundation.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068560