சுவர்மேற்பூச்சில் உள்ள சூட்சுமம்

23 ஜனவரி 2024   05:30 AM 12 ஆகஸ்ட் 2019   04:05 PM


ஆறுகளுக்கு மணற்பரப்பு ஒரு கவசம் என்றால், மனிதர்களுக்கு கவசம் தோள் ஆகும். அதுபோலவே கட்டடங்களுக்கு கவசம் சுவர் மேற்பூச்சு ஆகும்.

சுவர் மேற்பூச்சு என்பது வெறும் பினிஷிங் ஒர்க் மட்டுமல்ல, கட்டத்திற்கு பாதுகாப்பு பணியும் கூட. வால் பிளாஸ்டரிங் என்ற அந்த மேற்பூச்சு பணியை   மேற்கொள்ளும் போது கட்டுமான பணியாளர்கள், பொறியாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய தொழில்நுட்ப குறிப்புகள் இதோ..

கால இடைவெளி:

குடியிருப்புகள் மற்றும் இதர கட்டுமானங்களில் செங்கல் அல்லது பிளை ஆஷ் உள்ளிட்ட மற்ற கற்களை பயன்படுத்தி சுவர் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் 7 அல்லது 8 நாட்கள் கழித்தே பிளாஸ்டரிங் என்ற மேற்பூச்சு பணியை தொடங்க வேண்டும். அதற்கும் முன்னதாக போதிய அளவு தண்ணீர் விட்டு சுவர்களுக்கான கியூரிங் பணிகளை முடித்திருப்பது அவசியம்.

மேற்பூச்சின் கன அளவு

பொதுவாக, சுவர் பூச்சு அமைக்கப்படும் கனம் 12 எம்.எம். முதல் 16 எம்.எம். வரையில் இருப்பதுதான் சரியானது. இந்த அளவை விட அதிகமாக சுவர் பூச்சு அமைவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக , வீட்டின் வெளிப்புற சுவர்களில் அமைக்கப் பட்டுள்ள பல்வேறு ஆர்க்கிடெக்சுரல் வடிவங்களை கச்சிதமாக    சிமெண்டு - மணல் கலவை மூலம் பிளாஸ்டரிங் செய்து அழகாக தோன்றும்படி செய்யப்படும். அந்த நிலையில் மேலே குறிப்பிட்ட அளவை விட, மேற்பூச்சின் கனம் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளது. அந்த நிலையிலும் மேற்பூச்சின் கனம் 18 எம்.எம். என்ற அளவுக்கு மேற்படாமல் இருப்பதே சுவர் அமைப்புக்கு எடுப்பான தோற்றம் தரும். 

பட்டன் மார்க் முறை அவசியம்

சுவர்ப்பூச்சு பணிக்கு முன்னர், தூக்கு குண்டு (Plumb bob) பயன்படுத்தி மேற்கூரை முதல் தரைத்தளம் வரையில் மேலிருந்து கீழாக சுவர்ப்பூச்சு ஒரே சீராக அமைவதற்கு சுவரில் பட்டன் மார்க் செய்து கொள்வது முக்கியம். அதாவது, சுவர்ப்பூச்சின் கனம் மேலிருந்து கீழாக ஒரே அளவாக அமைவதற்கு இந்த பட்டன் மார்க் முறை அவசியமானது.

கிச்சன் மெஷ் பயன்பாடு

செங்கல் அல்லது இதர கற்கள் கொண்டு அமைந்த சுவர்பரப்புகளை தக்க சிமெண்டு - மணல் கலவை கொண்டு பூச்சு வேலை செய்து விடலாம். ஆனால் சுவர்ப்பகுதியில் தூண்கள் அல்லது கான்கிரீட் அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீது   வெறுமனே சிமெண்டு - மணல் கலவை மட்டும் கொண்டு பூச்சு வேலைகளை செய்வது கூடாது.

காரணம், செங்கல் அல்லது இதர சுவர் அமைப்புகள் மற்றும் கான்கிரீட் தூண்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள வெப்பநிலை மாறுபாடுகள் கொண்டதாக இருக்கும். அதன் காரணமாக, சிமெண்டு கலவையில் உள்ள ஈரப்பதம் உலரும் தன்மையில் உண்டாகும் மாற்றத்தின் காரணமாக விரிசல்கள் ஏற்படலாம். இந்த சிக்கலை தவிர்க்க சிக்கன் மெஷ் எனப்படும் கோழிவலை அமைப்பை அவற்றிற்கு இடையில் வைத்து சுவர்ப்பூச்சு பணிகளை செய்யவேண்டும்.

மெல்லிய விரிசல்கள்

பல இடங்களில் மேற்பூச்சு பணிகளை செய்து விட்டு, சுவர்ப் பரப்பு வழவழப்பாக இருப்பதற்காக சிமெண்டை தூவி விட்டு காரைக்கரண்டி கொண்டு தேய்த்து விடுவதாக அஷீயப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் எவ்விதமான நன்மையும் ஏற்படாது என்பதுடன், சுவரில் மெல்லிய விரிசல்கள் ஏற்படவே அது வழிவகுக்கும்.

இயந்திரப் பூச்சு

இப்போதைக்கு பிளாஸ்டரிங் இயந்திரங்கள் சந்தைக்கு வந்துள்ளன. ஆனால் இவை முழு நிரைவூட்டலை 
( பினிஷிங்) கொடுத்து விடாது. ஆனால் கட்டடத்தின் வெளிப்புறப் பரப்பு  , மிகப்பெரிய சுவர்ப்பரப்பு, வணிகவளாகங்கள் இவற்றிற்கெல்லாம் ஏற்புடையது ஆகும். மிகச்சிறிய இடப்பரப்பு, வீடுகளின் உள்ளறை சுவர்களுக்கு இயந்திரத்தைத் தவிர்க்கலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067288