கிரானைட், டைல்கள், மார்பிள் கொண்டு அமைக்கப்பட்ட தரைகள் என்றென்றும் அழகானவை, எழில் மிகு தோற்றத்தினை வழங்குபவை. ஒருக்காலத்தில் தரைகளுக்காக மட்டும் மிகுந்த செலவழித்து கட்டடங்களை உருவாக்கியது பழைய தலைமுறை. ஆனால் இந்தக்காலத் தலைமுறையினர் தரைகளுக்கு, மட்டுமல்லாது சுவர்களுக்கும் கிரானைட், டைல்கள், மார்பிள் கொண்டு அலங்கரிக்கிறார்கள்.
இதனால் அறைகளுக்கு புதிய இன்டிரியர் அலங்காரம், எழில் மிகு தோற்றம் கிடைக்கிறது. வீட்டை மிக அழகாக்கி காட்டுகிறது. சுவர் கட்டுமானம் முடிந்த பிறகு கிரானைட், மார்பிள், டைல்கள் பதிப்பதால் சுவர் மேற்பூச்சு, பட்டி , பெயின்ட் செலவு இல்லை.
எல்லாம் சரிதான். ஆனால் செலவு? நடுத்தர மக்கள் அனைவராலும் இவ்வளவு விலை கொடுத்து சுவரை மார்பிள் கொண்டு அலங்கரிக்க முடியுமா? இதற்கான கேள்வி தான் இந்தக் கட்டுரை.
கட்டடச் சுவர்களுக்கு கிரானைட், டைல்கள், மார்பிள் கொண்டு அலங்கரிக்க அதிக பணம் கொண்டு செலவழிக்காமல், குறைந்த விலையிலேயே மாற்றுப் பொருட்களுடன் சுவர்களை அமைக்க இப்போது சந்தையில் ஏராளமான உள்நாட்டு , அயல்நாட்டுப் பொருட்கள் வந்துள்ளன. இவை அச்சு அசலாக கிரானைட், டைல்கள், மார்பிள் தோற்றத்தினை உங்கள் வீடுகளுக்கு வழங்குகின்றன.
சாதாரண வீடுகளுக்கு மட்டுமன்றி, ஹோட்டல்கள், உணவகங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஆடிட்டோரியம், பங்களாக்கள் என அனைத்து வகைப் பயன்பாடுகள் நிறைந்த கட்டடங்களின் உட்புற சுவர்களை, படிக்கட்டுக்களை ஏன் சீலிங்குகளைக் கூட, இந்த மாற்றுப்பொருட்கள் கொண்டு மார்பிள், கிரானைட் சுவர்களாக அமைக்கலாம். மாற்றுப்பொருட்களில் மிக முக்கியமானவை கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.
1. ஸ்டிக்கர் டைல்ஸ் ( யகூரா ஃபோம் டைல்ஸ்) :
கண்கவர் சுவரினை கிரானைட், மார்பிள் மற்றும் வழக்கமான டைல்கள் இல்லாமல் உங்கள் கண்முன்னே நிறுத்தும் “யகூரா ஃபோம் ஸ்டிக்கர் டைல்ஸ்’ தான் இப்போது இன்டஸ்ட்ரியின் “ஹாட் டாக்’ . சொந்த வீடு கட்டுவோருக்கு கட்டுமானச் செலவை பெருமளவில் குறைக்கவல்ல, யகூரா டைல்கள் சுவரில் ஒட்டும் ஸ்டிக்கர் டைல்கள் வகை ஆகும். 1 அங்குல வெர்டிகல் டைல் அளவிலிருந்து ஒரு சதுர அடி பரப்பிலான ஸ்டிக்கர் டைல்களை சுவரில் வால் பேப்பர் போல மிக எளிதாக ஒட்டலாம். இதை ஒட்டுவதற்கு விசேஷ பசை எதுவும் தேவையில்லை. இந்த டைல்களின் பின்புறத்திலேயே இதற்கான செல்ஃப் அதெஸிவ் பசை இருக்கிறது.
இது ஒரு முழுக்க முழுக்க இந்தியா-சர்வதேச கூட்டுத் தயாரிப்புப் பொருளாகும். கொரியாவில் தயாரிக்கப்படும் யகூரா டைல்ஸின் உரிமையாளர் ஒரு இந்தியர். ஆம். திருச்சியைச் சேர்ந்த திரு. பிரபு இதை கொரியாவில் தயாரித்து இந்தியா முழுக்க 800 டீலர்கள் வாயிலாக அனைத்து நகரங்களிலும் சந்தைப்படுத்துகிறார்.
இந்த ஸ்டிக்கர் டைல்கள் வேகமாக மும்பை, பெங்களூர், கோவைச் சந்தையில் நுழைந்து இப்போது தென்மாவட்டங்களிலும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.
சரி இது எப்படி தயாராகிறது? என்ன பொருளினால் தயாரானது? திரு. பிரபுமணியிடம் பேசினோம்.
“”இது முழுக்க முழுக்க பாலி எத்திலின் ஃபோம் என்னும் வேதியியல் பொருளினால் தயாராகிறது. 25 மிமீ தடிமன் உடைய பாலி எத்திலின் ஃபோம் ஷீட்டை இயந்திரங்கள் மூலம் 10 மிமீ யாக அழுத்தப்பட்டு, உறுதி கூட்டப்பட்டு பல வண்ணங்கள், டிசைன், அளவுகளில் தொழிற் கூடங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது. இந்தியா மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனே´யா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு யகூரா டைல்ஸ் விற்பனையாகிறது.
வரவேற்பறை, படுக்கையறைகள் போன்ற அறைகளுக்கு இது மிகவும் ஏற்றது. வெப்பத் தடுப்பு மற்றும் ஒலித்தடுப்பு ஆகிய இரு வேலைகளை ஒரே சமயத்தில் செய்யக்கூடிய ஸ்டிக்கர் டைல்களின் விலை சாதாரண டைல்களை விட குறைவு என்பதாலும்., அச்சு அசலாக டைல்கள் தரும் எழில்மிகு தோற்றத்தினைத் தருவதாலும் சந்தையில் ஸ்டிக்கர் டைல்களின் விற்பனை அமோகமாக இருக்கிறது.இந்தியஅளவில் 800 டீலர்களும், தமிழகத்தில் மட்டும் 240 டீலர்களும் யகூரா ஃபோம் டைல்ஸுக்கு விற்பனையாளர்களாக உள்ளனர்’’என்றார்.
பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியதில்லை, பட்டி, பெயிண்ட் செலவு இல்லவே இல்லை. எளிதாக நீருற்றி சுத்தம் செய்யலாம் போன்ற சிறப்பம்சங்களை விட கீழே குறிப்பிட்ட மாறுபட்ட அம்சங்கள் நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டியவை.
1. வழக்கமான டைல்கள் ஒட்டுவதற்கு லே-மேன்கள், விசேஷமான பசை, கருவிகள் நமக்கு தேவை. ஆனால், ஸ்டிக்கர் டைல்களை யாரும் எவ்வித,முன் தயாரிப்புகள் இன்றி வெறும் கையினாலேயே கருவிகள் இன்றி நேர்த்தியாக ஒட்டலாம்.
2. எதிர்பாராவிதமாக நாமோ., குழந்தைகளோ சுவரில் மோதினால் உடலில் அடிபடாது. இதன் மூலப்பொருள் பாலி எத்திலின் ஃபோம் பொருளினால் தயாரானது என்பதால் சுவர் முழுக்கவே மெத்தை விரித்தது போல இருக்கும்.
3. இந்த ஸ்டிக்கர் டைல்களே வீட்டின் இன்சுலேrன் வேலையை பார்த்துக் கொள்வதால், நீங்கள் ஏஸி சாதனங்கள் ஓடும் அறைகளை தனியாக இன்ஸ்லேசன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.பிறகென்ன., பழைய வீடோ புது வீடோ சுவர் களுக்கு பெயின்டை தவிர்த்து ஸ்டிக்கர் டைல்களைத் தேர்ந்தெடுங்கள்.
யகூரா டைல்ஸைப் பெற :
எண்: 397, சந்திரன் நகர், 1,
டோல்கேட்,
திருச்சி - 621216
பேசி : 7708915545 / 908769 8888 / 908754 2222
E: yakuraindia@gmail.com , yakuratile@gmail.com
W: www.yakuratiles.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067382
|