முறையான ஜியோடெக்னிக் புலனாய்வு, அதிக லாபத்தைத் தரும்

23 ஜனவரி 2024   05:30 AM 08 ஆகஸ்ட் 2019   04:44 PM


ஒவ்வொரு புராஜெக்ட்களிலும் மண் அல்லது பாறைகளில் கட்டுமானம் (கட்டடங்கள், எம்பேக்மென்டுகள் மற்றும் பாலங்கள் ) செய்வதற்கு முன் மண்ணின் குறைபாடுகளைக் கண்டறிவது அவசியம். இதைத்தான் ஜியோ டெக்னிக் என்கிறோம்.

‘‘முறையான ஜியோ டெக்னிகல் புலனாய்வால் கிளையன்ட்ஸ் & காண்ட்ராக்டர்கள் அதிக லாபத்தை ஈட்ட இயலும்’’ என்கிறார்  ஈரோடு, G & E எஞ்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.வே. கோபிநாத். 

மேலும் அவர் கூறுகையில், ‘‘அனைத்து கட்டுமானங்களுக்கும் வலிமையான பயனுள்ள அடித்தளம் வடிவமைப்பதற்கு கீழ்பரப்பு (Geotechnical) புலனாய்வு   இன்றியமையாத ஒன்றாகும். 

ஜியோடெக்னிக்கல் இன்ஞ்சினியரிங் புலனாய்விற்கு தொன்மையான எடுத்துக்காட்டாக பய்ஸா சாய்வு கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் உண்மையில் நிலையில்லாமல் (non-uniformly) பலவீனமான களிமண் இடை அடுக்குகளில் புதைந்து கொண்டிருக்கிறது. இது முறையற்ற கீழ்பரப்பு புலனாய்வு மற்றும் முறையற்ற அடிதள வடிவமைப்பினால் ஏற்பட்டது ஆகும்.

ட்ரில்லிங்   மூலம் மண் படிமங்களின் அடுக்குகளை கண்டறிவது, மண்ணின் வகை, மண்ணின் தன்மைகள், நிலத்தடி நீரின் ஆழம், மண்ணின் பொறியியல் தன்மை மற்றும் பிற தன்மைகள் புராஜக்ட்களை பொறுத்து ஆய்வு செய்தல் எனப் பல பொறியியல் கூறுகள் இந்தப் புலனாய்வில் உள்ளடங்கியவை

மேலும், எங்கள் ஜியோ டெக்னிக்கல் சேவை மூலம் சேஃப் பேயரிங் கெபாசிட்டி (SBC), அடித்தள வடிவமைப்பு போன்றவற்றிற்கு புராஜெக்ட் பொறுத்து தேவையான பரிந்துரை அளிக்கிறோம். இதனால்,  தளர்வான / மென்மையான மண், மண்ணின் உப்பும் தன்மை, சீரற்ற மண்படிமங் கள், அதிகமான நீர் தேக்கம் (High Water Table), நிலச்சரிவு, மண் புதைவு (Settlement), மண் திரவப்படுதல் (Liquification), குழி /loose pockets in soil, பணி பாதிக்கக்கூடிய மண், soil thixotropy மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றைக் கண்டறியலாம். கட்டுநர்களுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் எங்கள் சேவை மிகவும் அத்தியாவசியமான ஒன்று”. என்றார் திரு .வே.கோபிநாத்.

G & E ENGINEERING CONSULTANTS

வே.கோபிநாத், 157/6, பாளையபாளயம் பிரிவு, 
பெருந்துறை ரோடு, 
ஈரோடு - 638011.
தொலைபேசி : 9443927599, 
இமெயில்: gobime1984@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067340