படிக்கட்டுகள் என்பது வீட்டின் அலங்காரப் பொருட்கள் அல்ல, அதுதான் மேல்தளத்திற்கும், கீழ் தளத்திற்கும் இடையேயான பாதுகாப்பான வழி. அவை சீராகவும், உறுதியாகவும் அமைக்கப் பட வேண்டும்...
படிகட்டுகள்: ஒரு படியின் அதிகப்பட்ச படிக்கட்டுகள் உயர்ச்சி (Rise) 175 மி.மீ (7”) குறைந்தபட்ச படிக்கட்டுகள் உயர்ச்சி 150 மி.மீ (6”) ஆகும்.
கூம்பற்ற (without nose) படியின் மிதிகட்டையின் (Tread) குறைந்தபட்ச அளவு 250 மி.மீ (10”) ஆகும்.
படியின் விளிம்பு கூராக இல்லாமல் குறைந்தது 12 மி.மீ. (1/2”) ஆரத்திற்கு உருட்டினாற் போன்று அமைக்க வேண்டும்.
படியின் விளிம்பிலிருந்து 25 மி.மீ (1”) இடைவெளி விட்டு 20 மி.மீ க்கு (3/4”) க்கு ஒன்றாக மிதி கட்டையில் கோடிழுத்தாற் போன்று அமைத்தால் வழுக்காமல் இருக்கும்.
படிகள், பல கணிகள் போன்றவற்றில் பாதுகாப்பாக அமையும் ஏற்பாட்டில் மேற்புரம் அமைவது கம்பிக் கைப்பிடியாகும். இக்கைப்பிடியினை தாங்கிட அமைவது கம்பங்களாகும்.
பொதுவாக படிகளில் அமைக்கும் கைப்பிடிகளை தேக்கு மரத்தால் செய்வார்கள். பலகணியின் துத்தநாகப் பூச்சு கொண்ட இரும்பு குழாய்களைப் பொருத்துவார்கள். தற்போது உலோகப்பூச்சுக்காப்பிடு கொண்ட அலுமினிய (Anodised aluminimum) அல்லது சிறு பருமனுடைய R.C.C..கைப்பிடிகளும் பயன்படுத்துகின்றனர்.
மாறாக செங்கல் பயன்படுத்தியும் 150 மி.மீ அகலத்திற்கு அரை வட்ட வடிவில் செய்து பூச்சுவார்கள்.M.S.சதுர வடிவ கம்பிகள் கம்பங்களாகவும் (Balusters) பயன்படுத்துவண்டு. அவைகளின் மீது கைப்பிடி அமைத்தும் வைப்பர் கம்பங்கள் தரையில் நன்கு ஊன்றியிருக்க வேண்டும். இவைகள் ஊன்று கால்களில் மீன்வால் போல் பிரிந்து கைப்பிடி கோணத்திற்கு குறுக்காக அமைய வேண்டும். இவ்வாறு செய்வதால் நல்ல பிடிமானமாகிறது.
கைப்பிடிகள் (Hand Rails)
மர கைப்பிடிகள் 150 மி.மீ. மு 50 மி.மீ/அளவு கொண்டதாக அமைய வேண்டும். அதில் மேற்புறமிருந்து 50 மி.மீ இடை வெளிவிட்டு இருபுறங்களிலும் வரிப்பள்ளம் (Groove) செய்ய வேண்டும். இவ்வரிப்பள்ளம் கருப்பு வண்ணம் பூசப்பட்டும் கைப்பிடியினை ப்ரென்ச் பாலிஷ் (French polish) கொண்டும் பூச வேண்டும்.
கம்பங்களின் (Baluster) இடைவெளி 150 மி.மீ க்கு அதிகமாகக் கூடாது. கைப்பிடி கொண்ட கம்பங்களின் உயரம் படிக்கட்டியின் மீது அமைக்கும் போது 775 மி.மீ (2’7’) ஆகவும் தாழ்வார பலகணி மற்றும் படிக்கட்டு அறைகளுக்கு அமைக்கும் போது 900 மி.மீ (3’0’) ஆகவும் இருக்க வேண்டும்.
சாய்தளத்தின் நிலை
சாய்தளங்கள் நில மட்டத்திற்கு 20 செ.மீ. உயரத்தில் நிறுத்து அதிலிருந்து சரியான 1 அல்லது 10 க்கு 1 என்ற அணுகு (gradient) கொண்டு அமைக்க வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067389
|