சாதாரண வீடுகள் கட்டும் பணியில்,கம்பிகளையும், கான்கிரீட்டையும் பயன்படுத்தி அதிக ஆழத்துக்கு அஸ்திவாரம்அமைப்பதில் பணரீதியாக பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, பெரும்பாலான சாதாரண கட்டடங்கள் கட்டும் பணியில் சில அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி கடைக்கால் அமைப்பது வழக்கத்தில் உள்ளது. இதில், பாரம்பரியமாக, கடைக்கால் அமைப்பதில், பயன்படுத்தும் பொருட்கள் அடிப்பயில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக கருங்கல் கடைக்கால்கள், செங்கல்கடைக்கால்கள் என இரண்டு வகை உள்ளது.
இதில் கருங்கல்லில் கடைக்கால், சீரானது, சீரற்றது என இரு வகை உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல் கடைக்கால்கள் பல இடங்களில் வழக்கத்தில் உள்ளன.
இதன்படி, சில அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டிவிட்டு, உடைத்த செங்கற்களை கலவையுடன் சேர்த்துக் கொட்டி அடித்தளத்தை ஏற்படுத்துவர். இதன் மேல், முழு செங்கற்களை வைத்து தரைமட்டம் முடிவு செய்யப்படும். இதன் பின், சுவர் எழுப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அண்மைக்காலமாக, கட்டுமானப் பணியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தில், செங்கல் ஜல்லிகள் அமைக்கப்படும் கடைக்கால்களை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, நிலத்தடி மண் அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மேல் மட்டத்தில் உருவாகும் நீர்க்கசிவுகள் காரணமாக, செங்கல் ஜல்லிகள் ஈரத்தை உள்வாங்கிக் கொள்ளும். இந்த ஈரம் காலப்போக்கில் கட்டடத்தின் உறுதிக்கு எதிரியாகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே, கட்டடங்களுக்கு கடைக்கால் அமைக்கும் பணியில், செங்கல் ஜல்லிகளை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.கருங்கல் ஜல்லியால் ஆன, கடைக்கால் அமைக்கும் இடத்தின் மண் கெடுதல் விளைவிக்கும் தன்மையோடு இருந்தாலும், கட்டட சுமையின் அழுத்ததை தாங்கும் வலைமையற்று இருந்தாலும்,தடுத்து, சமபடுத்தி அரண் போல கடைக்காலை காக்கும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067397
|