ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன், முதலில் நம் கண்களில் படுவது சுவர்கள் தான். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும், அதன் பரப்பளவை விட, சுவரின் பரப்பளவு, நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். அறையில் பெரும்பங்காக இருக்கும் சுவரை அலங்கரிப்பதில், பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவரை, எப்படியயல்லாம் அலங்கரிக்கலாம்? இதற்காக உள் அலங்கார வல்லுனர்கள் கூறும் ஆலோசனைகள்:
பொதுவாக, சுவர்களை அலங்கரிப்பதில் பெயின்டிங், வால் பேப்பர், பானலிங் என, மூன்று வகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உங்கள் வீட்டு அறைகளின் தன்மை, நிதி நிலை, தேவை போன்றவற்றின் அடிப்படையில், எது ஏற்றது என்பதை முடிவு செய்யலாம்.
பெயின்டிங் இன்றைய சூழலில் சுவர்களை அலங்கரிப்பதில், மிகவும் மலிவானதாகவும், எளிதானதாகவும், பெயின்டிங் தான் உள்ளது. இதில், ஆயில், பவுண்ட், டிஸ்டம்பர், அக்ரிலிக், எனாமல் என, பல வகைகள் உள்ளன.உங்கள் வீட்டு சுவர்களை பெயின்டிங் செய்து அலங்கரிக்க வேண்டும் என, முடிவெடுத்து விட்டால், அதற்கு எது சரியானதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அழகு அடிப்படையிலும், செலவின் அடிப்படையிலும் இது வேறுபடும்.
பெரும்பாலான வீடுகளில், டிஸ்டம்பர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முன், பிரைமர் அடிப்பது பெயின்டிங் வேலையை தெளிவானதாக்கும். இதில், அந்தந்த அறையின் பயன்பாடு அடிப்படையில், அவற்றுக்கான வண்ணங்களை தேர்வு செய்வது, மிகவும் முக்கியம்.
வால் பேப்பர்கள்
வீட்டை அலங்கரிப்பதில், பெயின்ட்களை விட, வால் பேப்பர்கள் எண்ணற்ற தீர்வுகளை அளிக்கின்றன. சீரான அமைப்பு இல்லாத அறைகளை கூட, அழகாக காட்டுவதில், வால்பேப்பர்களை மிஞ்சிய பொருள் வேறு இல்லை.
சுவர்கள் வண்ணமாக இருப்பதை விட, அதில் சில வகையான வடிவமைப்புகள், ஓவியங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களின், முதல் தேர்வாக வால்பேப்பர்கள் அமைந்துள்ளன.
தயாரிப்பு நிறுவனம், பரப்பளவு அடிப்படையிலும், பயன்பாடு அடிப்படையிலும், இதற்கான விலைகள் வேறுபடும். இன்றைய சூழலில் ஏராளமான உள்நாட்டு நிறுவனங்கள் வந்துள்ளதால், குறைந்த விலையில் வால்பேப்பர்கள் கிடைக்கின்றன.
பானலிங்
பெயின்டிங், வால்பேப்பர்களை விட விலை அதிகமானது என்று, பலரும் நினைக்கும் பொருளாக பானலிங் அமைந்துள்ளது. இன்றைய சூழலில், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில், சுவர்கள் மரத்தால் பானலிங் செய்யப்பட்டிருக்கும்.
சில ஆண்டுகள் முன்வரை, பானலில் அதிக செலவு பிடிக்கும் ஒன்றாக இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை மாஷீவிட்டது. பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டதால், குறைந்த விலை பானல்கள் கிடைக்க துவங்கியுள்ளன.
செல்ல விலங்குகளுக்காக ஓர் அலங்காரம்
மனிதர்களுக்கும், நாய்களுக்குமான அன்பின் ஆழத்தை அவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாது, அந்த அன்பால்தான் நாய்களைப் பொம்மைகளை வைத்து அலங்கரிக்கும் வழக்கும் உருவானது. குகையில் காணப்படும் ஓவியங்கள், சிற்பங்கள் என நம் செல்லப் பிராணியின் தாக்கம் காலம்காலமாகத் தொடர்ந்துவருகிறது. நாய்களைக் கலைப்பொருளாக வைத்து அலங்கரிக்கும் வழக்கம் விக்டோரியா காலகட்டத்தில்தான் பரவலாகத் தொடங்கியது.
எட்வின் லாண்ட்சீர் (1802-1873) போன்ற ஓவியர்கள் நாயைப் பிரதானமாக வைத்து வரைந்த ஓவியங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய காலகட்டத்தில்தான் மிருகவதை தடைச்சட்டம் ஐரோப்பிய நாடுகளில் அமலுக்கு வந்தது. ராணி விக்டோரியா லாண்ட்சீர் வரைந்த 39 ஓவியங்களை வாங்கிப் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நாய்களை வீட்டில் வளர்ப்பது எவ்வளவு அழகான அனுபவமோ, அதே அளவுக்கு நாயை கருப் பொருளாக வைத்து வீட்டை அலங்கரிப்பதும் அழகான அனுபவமாக இருக்கும். நாய்களைக் கருப்பொருளாக வைத்து அலங்கரிப்பதற்கான சில வழிகள்...
உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியின் உருவப் படத்தை ஓவியமாகத் தீட்டி வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அந்த உருவப் படத்தை வைத்து உங்கள் செல்ல நாய்க்குட்டியை ஏமாற்றலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் உங்களுடைய இந்த வித்தியாசமான நாய் வளர்க்கும் முறை பிடிக்கும்.
நாய்களின் ஓவியங்களைப் போலவே நாய்களின் சிற்பங்களும் பிரபலமான அலங்காரப் பொருள்தான். இந்தச் சிற்பங்களை உங்களுக்குப் பிடித்த எந்த உலோகத்திலும் வாங்கலாம். வெண்கலம், பித்தளை, மரம், கல் என எல்லா வகையான நாய் சிற்பங்களும் கிடைக்கின்றன.
நம்முடன் நிஜவாழ்க்கையில் எப்படி எல்லாத் தருணங்களிலும் துணையாக இருக்கிறதோ, அதேமாதிரி வீட்டு அலங்காரத்திலும் எந்த இடத்தில் வைத்தாலும் நாய்ப் பொம்மைகள் வீட்டுக்கு அழகு சேர்க்கும். உட்புற அலங்காரம், வீட்டின் வெளியே தோட்ட அலங்காரம் என எங்கு வேண்டுமானாலும் நாய் அலங்காரத்தைப் பயன்படுத்தலாம்.
நாய்களின் ஓவியங்கள் மட்டுமல்லாமல் நாய்களை முன்னிலைப் படுத்தும் கலைப் பொருள்களை வைத்து வீட்டை அலங்கரிக்கலாம்.
இந்த அலங்காரத்தில் எந்த மீடியத்தில் வேண்டுமானாலும் நாய்களைப் பயன்படுத்தலாம். நாய்களின் வடிவங்கள் இருக்கும் சுவரொட்டிகள், நாய்களைப் பிரதிபலிக்கும் தரைவிரிப்புகள், நாய்களின் முகங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும் தலையணைகள், நாயின் முகம் வைத்த சுவர் கொக்கிகள், நாய் விளக்குகள் எனப் பலவகையாக நாய் அலங்காரத்தை வீட்டில் செய்யலாம்.
இந்த அலங்காரத்தைப் பார்த்தால் உங்கள் வீட்டின் செல்ல நாய்க்குட்டி நிச்சயமாக ஆச்சரியப்படும். இப்படி நாய்கள் மட்டுமல்லாமல் பூனைகள், பறவைகள் என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தும் உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067395
|