மார்வெலஸ் மாடுலர் கிச்சன்

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஜூலை 2019   10:48 AM


மளிகைப் பொருட்களையும், அடுப்படி பாத்திரங்களையும் மறைவாக வைத்து ‘கிளீன் கிச்சன்’ என்று சொல்ல வைப்பதே... மாடுலர் கிச்சன். மாடுலர் கிச்சன் பராமரிப்புக்கான வழிமுறைகள்கட்டுமான பணியின்போதே!

 

மாடுலர் கிச்சன் வைக்க முடிவு செய்து விட்டால், அனுபவம் கொண்ட டிசைனரை நாட வேண்டும். 

 

மாடுலர் கிச்சன் அமைக்கும் முன்னரே கிச்சன் மேடையை அமைக்கக் கூடாது. கப்போர்டுகள் மற்றும் கேபின்கள் அமைத்த பிறகே கிச்சன் மேடையை உருவாக்க வேண்டும் என்பதால், வீடு கட்டுமான பணியில் இருக்கும்போதே டிசைனரை அழைத்தால், மாடுலர் கிச்சனில் வைக்கவேண்டிய சில கன்சீல்டு பகுதிகள் குறித்த விவரங்களை நாம் முன்கூட்டியே பெற முடியும்.

 

ஸ்டோரேஜ்கள் வைப்பதற்காக வைக்கப்படும் பிளைவுட் கேபின்களுக்கு ஒன்றரை இன்ச் அளவுக்கு வெளிப்புறமாக இருக்குமாறு கிரானைட் மேடையை அமைத்தால், மேடையை சுத்தம் செய்யும்போது கசியும் நீர், கேபின்களை நனைத்து அழுக்கு மற்றும் பிசுபிசுப்பை உருவாக்காது.

 

'கேஸ் ஹப்'புக்கு வரும் கேஸ் இணைப்புக் குழாய் அடிக்கடி செக் செய்யும் வகையில் அமைய வேண்டும். 'ஹப்'புக்கு கீழ்ப்புறத்தில் கூடுமானவரை கேபின்களை வைக்காமல் இருப்பது நல்லது. சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது கிச்சன் பாதுகாப்பை உறுதி செய்யும்.

 

சிங்க் ஹோஸுக்கு வலை

மாடுலர் கிச்சனைப் பொறுத்தவரை பூச்சிகள் மற்றும் எலிகள் வருவதற்கான வாய்ப்பு சிங்க்கில் இருந்தே ஆரம்பிக்கிறது. எனவே, சமையலறை சிங்க் வைக்கும் இடத்தில் இருந்து வெளிப்புறம் செல்லும் அவுட்லெட் பைப்புகளை கொசுவலையால் மூடிவிடுவது நல்லது. சிங்க் குழாயின் வாயிலாகவே சாக்கடையில் இருந்து வரும் பூச்சிகளும் எலிகளும் உள்ளே நுழையும். அதனால் நல்ல அனுபவமிக்க பிளம்பரிடம் சொல்லி சிங்க் ஹோஸ்களில் லீக்கேஜ் ஏற்படாமலும் வெளிப்புற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கும் வகையிலும் உறுதிபடுத்தவேண்டும்.

 

'சிங்க்'குக்கு கீழ்ப்புறத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியை அன்றாடம் அகற்றுவது மிக மிக முக்கியம். இல்லாவிட்டால் மூடிய டஸ்ட்பின் கேபினில் இருந்து நுண்கிருமிகள் உருவாகும். குடும்ப ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

 

ஸ்மார்ட் சிம்னி க்ளீனிங்!

இப்போது பலரது மாடுலர் கிச்சன்களையும் டிஷ்வாஷர்கள் அலங்கரிக்கின்றன. இன் பில்ட் (in built) வகை டிஷ் வாஷர்களைப் பொருத்தும் போது கிச்சனின் அழகு மற்றும் பராமரிப்பு நன்றாக இருக்கும். தண்ணீர் கசிவையும் தவிர்க்கலாம்.

 

'கேஸ் ஹப்'புக்கு மேற்புறமாக இருக்கக் கூடிய சிம்னியை சுத்தம் செய்வது சவாலான விஷயம். காரணம், சமைக்கும்போது பலரும் சிம்னியை 'ஆன் செய்வதே இல்லை. சிம்னியை 'ஆன்' செய்யாமல் சமைப்பதால் சமைக்கும்போது ஏற்படும் பிசுபிசுப்பு சிம்னியில் படிகிறது. இதனால் சிம்னி அழுக்காகிறது. இப்படி ஞாபக மறதியுடன் சிம்னியை 'ஆன்' செய்யாமல் சமைப்பவர்களுக்காகவே தற்போது மார்க்கெட்டில் ஆட்டோமேட்டிக் சிம்னி கிடைக்கிறது.

 

சிம்னியில் இருக்கும் ஃபில்டர்களை வாரம் ஒரு முறை வெந்நீரில் கழுவ வேண்டும். இரவு படுப்பதற்கு முன்பாக இந்த ஃபில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலை எழுந்து சோப்பினால் கழுவினால் ''பளிச்' என்று ஆகிவிடும். ஒருவேளை அளவுக்கதிகமான பிசுபிசுப்பு இருந்தால், திரவ கிளீனர்களால் சுத்தம் செய்துகொள்ளலாம்.

 

கிச்சன் கேபின்கள் பெரும்பாலும் எஸ்எஸ் ஸ்டீல்களால் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) ஆனதாக இருக்கும். பாத்திரங்களைக் கழுவி, காயவைக்காமல் அடுக்குவதால் உப்புநீர் காரணமாக இந்த ஸ்டீலில் துரு பிடித்து, கேபின் வீணாகலாம். எனவே, பராமரிக்க நேரம் இல்லாதவர்கள் குறைந்த அளவிலான அக்ஸசரீஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்வது முக்கியம். அதேபோல, கூடுமானவரை ஸ்டீல்களை தவிர்த்து (பிளைவுட்) கப்போர்டுகளாக டிசைன் செய்துகொள்ளலாம்.

 

கிச்சன் டைல்ஸ் மற்றும் மைக்கா

கேபின் கதவுகளுக்குப் பொருத்தப்படும் கைப்பிடிகளை கழன்று போகாத அளவுக்கு சரியான முறையில் பொருத்த வேண்டும். கைப்பிடியின் மீது கனமான பொருட்களை வைப்பது, குழந்தைகள் ஆட்டிப் பார்ப்பது போன்ற செயல்கள் கைப்பிடி கழன்றுவிட வழி செய்யும். அதனால், ஆரம்பத்திலேயே கைப்படிகளின் தரத்தையும் பொருத்திய விதத்தையும் உறுதிசெய்து கொள்வது அவசியம். கடின நீரின் காரணமாக கைப்பிடி துரு பிடிக்காமல் இருக்க, வாரம் ஒருமுறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவி பராமரிப்பது நல்லது. கிச்சனை டிசைன் செய்யும்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர் நிறத்திலும் மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067388