இடத்தை மிச்சப்படுத்தும் இன்டீரியர் உத்திகள்

23 ஜனவரி 2024   05:30 AM 22 ஜூலை 2019   10:31 AM


சோபாக்கள், ஃபர்னிச்சர்கள், கட்டில்களின் உப யோகம் ஒரு நாளைக்கு சுமார் எத்தனை மணி நேரம் இருக்கும்? நாம் வீட்டில் இருக்கும் வரைதானே. அவை பயன்படுத்தாத போது இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது வீண்தானே. அதாவது, உங்கள் வீட்டில் இருந்தால் இடத்தை அடைத்துக் கொள்வது மட்டுமன்றி, அம்மிக்கல் போன்று உங்கள் ஃபர்னிச்சர்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக உட்கார்திருக்கும். அதற்கு பயன்பாடு இருந்தாலும், இல்லையயன்றாலும் அதற்கான இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். 

இது போன்ற அசையா, நிரந்தர, ஒரே ஒரு உபயோகமுடைய ஃபர்னிச்சர்களுக்கு பதில் பல்நோக்கு உபயோக ஃபர்னிச்சர்களையோ அல்லது  உபயோகப்படாத போது எளிதில் அப்புறப்படுத்தப்படக் கூடிய அல்லது சுருட்டி வைக்கக் கூடியவைதான் நம் இடத்தை மிச்சமாக்கும்.

மல்டி பர்போஸ் ஃபர்னிச்சர்கள் புத்தகம் வைப்பதற்கு, ஷு வைப்பதற்கு, படுப்பதற்கு, உட்காருவதற்கு, அலங்காரப் பொருட்கள் வைப்பதற்கு என ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு விதமான ஃபர்னிச்சர்களை வாங்கிக் குவிக்க நமக்கு ஆசைதான். ஆனால், இடத்திற்கு எங்கே போவது?

நமது பயன்பாடுகளை மாற்றிக் கொள்eவும் முடியாது, குறைத்துக் கொள்ளவும் முடியாது என்றால் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு பல்வகை உபயோகங்களுக்கு பயன்படும் ஃபர்னிச்சர்களை பயன்படுத்துவதுதான். மேஜை, நாற்காலி, அலமாரி, ஷோகேஸ், பீரோ, போன்றவை அனைத்தும் ஒருங்கே இடம் பெற்றிருந்தால், ஒரே ஃபர்னிச்சராக இருந்தால், அதற்கு மேலேயே படுக்கை இருந்தால் 200 ச.அடி வீடு கூட 800 ச.அடி வீட்டின் பயன்பாட்டைத் தரும் அல்லவா? 

கொரியன் ஃபர்னிச்சர்கள் இந்த ஐடியாவைப் பின்பற்றித்தான் உருவாக்கப்படுகின்றன. கொரியன் ஃபர்னிச்சர் என்று அழைக்கப்படும் இவை குறைந்தது 3, 4 உபயோகங்களுக்குப் பயன்படுகிறது. உதாரணம், ஹாலில் போடப்படும் பெரிய சைஸ் சோபா ஒன்றை எடுத்துக் கொள்வோம். இது இருந்தால் தனியாக டீப்பாய் தேவையில்லை.

 இதிலேயே டீப்பாய் உபயோகத்திற்கான அனைத்து வசதிகளையும் இணைத்திருக்கிறார்கள். மேஜை தேவைப்படும்போது ஹேன்ட் ரெஸ்ட் பகுதிகளை நீடித்து மேஜை ஆக்கலாம். அதே போன்று, அடிபாகத்தை நீட்டித்தால் லேப்டாப் வைத்துக் கொள்ளலாம், அல்லது புத்தகத்தை விரித்துப் படிக்கலாம். எல்லாம் செய்து போரடித்து விட்டதா? இதையே படுக்கையாக்கிக் கொள்ளலாம். 

இதே போன்றுதான் படிக்கட்டுகளின் இடைவெளியில் ஷு கப்போர்டுகளைப் பொருத்துவது, நாற்காலியின் அடிப்பாகத்தில் அலமாரிகளைப் பொருத்துவது என முடிந்த அளவு ஒரே ஒரு ஃபர்னிச்சரில் ஏராeமான உபயோகங்கள் கிடைக்கும் வகையில் நாம் ஃபர்னிச்சர்களை உருவாக்க வேண்டும். 

‘ஆல் இன் ஒன் கிச்சன்’ 

தற்போது மும்பை இன்டீரியர் பொருட்களுக்கான சந்தையில் வந்திருக்கும் ஆல் இன் ஒன் கிச்சன் என்கிற மாடுலர் கிச்சன் கேபினேட்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. நகரவும், சுழலவும் எளிதாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் என பல சிறப்பம்சங்களை உள்ளடங்கிய இந்த நவீன சமைய லறைக்குத் தேவையான இடம் மொத்தமே 5.8 சதுர அடிகளாகும்.

 ‘செல்ஃப் கண்டெய்ன் கிச்சன்’, ‘ஆல் இன் ஒன் கிச்சன்’, ‘ரொட்டேட்டிங் கிச்சன்’, ‘மொபைல் கிச்சன்’ என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த வகை கிச்சன்களை வேலை முடிந்த பிறகு பீரோவைப் போல மூடியும் வைத்துக் கொள்ளலாம். இந்தக் கிச்சனில் லைட்டிங், எலெக்ட்ரிகல் சர்க்கியூட்டிவ்கள் போன்ற மின் இணைப்புகள் பொருத்தப்பட்டு, எலெக்ட்ரிக் ஓவன், மிக்சி, ஸ்டவ் போன்ற மின் சாதனங்களை உபயோகித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது. 

முழுக்க, முழுக்க உட்புறம் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் தகடுகளினால் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கும் இந்த சமையல் கூண்டிற்கு வெளிப்புறம்  ஸ்டீல் அல்லது மர வேலைப்பாடுகளுடன் கூடியதாக ஃபினிஷிங் செய்யப்பட்டிருக்கிறது. பென்ச் டாப், ஃபிட்டிங்ஸ், ஃபினிஷிங் மற்றும் வண்ணங்கள் அடிப்படையில் இந்த சமையல் கூண்டுகள் 650 டாலர் களிலிருந்து விற்கப்படுகின்றன. அதுவே உள்ளூரில் நாம் தயாரித்தால் இன்னமும் செலவு கணிசமாக குறையும். 

பட்ஜெட்டிற்குள் படுக்கை அறைகள்

இடத்தை பொறுத்தவரை Effective Utility என்பது இக்காலக்கட்டத்தில் அவசியமான தேவையாகும். இந்த கான்செப்டில்தான் ‘அப்பர்லேயர் பெட் ஃபெசிலிட்டி’ (Upper Layer Bed Facility) கொண்ட படுக்கைகள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. இதனால் தரைதளத்தில் சோஃபா, டீபாய், மேசை, நாற்காலிகள் போன்றவற்றை வைத்துக்கொள்வதோடு மேல்தளத்தில் நமக்கு சௌகரியமான படுக்கையை அமைத்துக் கொள்ளலாம். இதனால் கட்டில் செலவும் மிச்சம்.

இவ்வாறு படுக்கைக்கு என்று தனியே ஒரு அடுக்கினை அமைக்கும் போது நூறு சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் 150 சதுர அடி பரப்பளவிற்கான பயன்பாட்டினை நாம் அனுபவிக்க முடியும். இது போன்ற அடுக்கு படுக்கையறைகளில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், தேவை எனும்போ து படுக்கையை கீழிறக்கிக் கொள்ளவும், தேவையற்ற போது மேலே நகர்த்தி குறிப்பிட்ட உயரத்தில் நிறுத்தி வைத்து விடவும் முடியும்.

இதனால் தரை தளத்தில் பெரிய இடம் நமக்கு தாராeமாக கிடைக்கிறது. இவ்வாறு அவ்வப்போது மேலேயும், கீழேயும் நகரும் அமைப்பு கொண்ட படுக்கைகளை ‘கிளிம்பிங் பெட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இப்படுக்கை அறைகளைஅமைப்பதும் மிக எளிதானதாகும். முழுக்க முழுக்க வினைல், ஸ்டீல், மரத்தினால் இவற்றை அமைக்கின்றனர். இந்த கிளிம்பிங் டைப் பெட்ரூம்களை அமைப்பதன் மூலமாக இடப்பற்றாக் குறையிலிருந்து நமக்கு தீர்வு கிடைக்கிறது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067451