தரை அமைப்பதில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் போன்று, கான்கிரீட் தளத்துக்கு கீழே செயற்கையான அலங்காரம் குறித்த முக்கியத்துவம் அதிகரிக்காத சூழலில், வீட்டின் மேற்பகுதியின் கான்கிரீட் தளம் மட்டுமே கூரையாக இருக்கும். ஒரு கட்டத்துக்கு பின், அதில் பூச்சு வேலை செய்யும் போது சில டிசைன்கள் செய்யப்படும். பழங்காலத்தில் வீடுகள் உயரமான சுவர்களை கொண்டிருக்கும்; அதன் காரணமாக வீட்டின் மேற்கூரைக்கும், தரை தளத்திற்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது, 10 அடி உயரத்துக்குள் சுவர் எழுப்பப்பட்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டு விடுகின்றன. ஒருசில இடங்களில் அதற்கும் குறைவான அளவுகளில் சுவர்கள் அமைக்கப் படுகின்றன.
இந்த டிசைன்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக, பிரத்யேக வண்ணங்கள் பயன்படுத்தப்படும். சில வீடுகளில் உட்புற கூரையில் ஓவியங்கள் வரைவது, பிரதிபலிக்கும் தன்மை கொண்ட வண்ணங்கள் பூசுவது என பல்வேறு விதமான அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.
இதில், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், வர்த்தக மையங்களில் மேற்கூரைக்கு கீழே செயற்கையாக அலங்கார கூரை அமைக்கும் வழக்கம் இருந்து வந்தது. இந்த பழக்கம் தற்போது வீடுகளுக்கும் வந்துவிட்டது.பெரும்பாலான வீடுகளில் தரை, சுவர் அலங்காரம் போன்று, மேற்கூரையிலும் அலங்காரம் வேண்டும். என்ற ஆர்வத்தில் செயற்கை மேற்கூரைகளை மக்கள் நாடுகின்றனர். தெர்மாகோல் அல்லது ஜிப்சம் அட்டைகள் மற்றும் சிலிகான் பாலிகார்பனேட் கொண்டு பல்வேறு வடிவமைப்புகளில் மேற்கூரைகள் விற்பனைக்கு வந்துவிட்டன. இதன் எடை குறைவாக இருப்பதால் உறுதி குறையாது; ஸ்டீல் கூரைக்கட்டுமானத்தை விடவும் அதிகமாக இருக்கும். ஸ்டீல் மாதிரி துரு பிடிக்காமல், தேய்மானமும் இல்லாமல் நீடித்து உழைப்பதாக நம்புகின்றனர்.
உங்கள் வீட்டின் மேற்கூரைக்கு மேல் மொட்டை மாடி எனில், அதில் விழும் சூரிய கதிர்களால் வெப்பம் வீட்டுக்குள் வராமல் தடுக்கவும், வீட்டிற்குள், ஏசி பயன்படுத்தும் போது குளுமை தன்மை பாதிக்கப்படாமல் இருக்கவும் செயற்கை கூரைகள் பயன்படுகின்றன. உள் அலங்கார அடிப்படையில் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், மேல்தளத்தில் வீடு இருக்கும் நிலையில், தளத்தில் நீர்க்கசிவு ஏற்படுவது, உடைப்பு, விரிசல்கள் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை செயற்கை கூரை மறைத்துவிடும். இவற்றின் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியாமல் போவதற்கு செயற்கை மேற்கூரை ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.
கவனத்திற்கு:
பரப்பளவைப் போல் கட்டடத்தின் உயரம் குறைந்து விட்டதால், மேற்கூரையின் மீது அதிகம் கவனம் எடுக்க வேண்டியிருக்கிறது.ஆனாலும் மேற்கூரை போதுமான அளவு உயரம் கொண்டதாக இருப்பது அவசியம். இல்லையயனில், உள்ளே வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும்.
. சில ஆயிரம் செலவை குறைக்க மேற்கூரையின் உயரத்தை குறைப்பது, காற்றோட்டத்துக்கு தடையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
. செயற்கை மேற்கூரைகள் எடை அதிகம் தாங்கும் திறன் கொண்டவை. எளிதாகக் கையாளக் கூடியவை. பிரிப்பதும், மாற்றுவதும் மிக எளிது.. வரும், 10 ஆண்டுகளுக்குள் இந்த செயற்கை மேற்கூரை, பெரும்பாலான கட்டுமானங்களில் ஆதிக்கம் செலுத்தும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067449
|