எந்த மாடுலர் எப்படி? மாடுலர் கிச்சனின் அடிப்படை மூலப்பொருட்கள்

23 ஜனவரி 2024   05:30 AM 19 ஜூலை 2019   11:09 AM


மாடுலர் கிச்சனுக்கு ஒரு லட்சம் முதல் 20 லட்சம் வரை... ஏன் 50 லட்சம் ரூபாய் செலவு செய்பவர்கள் உண்டு. எனவே, நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டமிடுவது மிக அவசியம். மாடுலர் கிச்சனை மரத்தில் செய்த காலம் மலையேறி விட்டது. சொற்பமாக சிலர் செய்தாலும், பெரும்பாலும் MDF, HDF, மெம்பரைன், பிளைவுட், பார்ட்டிகிள் போர்டு என்று பல வகைகளில் இதன் மூலப்பொருட்கள் கிடைக்கின்றன. 

 

இதில் இரு வகை உண்டு. உள்ளே அலமாரி செய்யும் பெட்டி. அடுத்து ஷட்டர்ஸ் எனப்படும் கதவுகள். கதவுகளுக்கு அலங்கார அமைப்பு தேவைப்படும். உள்ளே உறுதியான மூலப்பொருளில் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மரங்களில் மட்டுமே நாம் தயாரித்துக் கொண்டு இருந்த போது, அதற்கு மாற்றாக இது உள்ளே வந்தது. மரங்களை ஷா மில்லில் கொடுத்து மிகச் சிறியதாக - அதாவது, உருளைக்கிழங்கை சிப்ஸுக்கு சீவுவது போல சீவி படிவம் படிவமாக எடுப்பார்கள். அவை வெநீர் (Veneer) தகடுகள் எனப்படும். இவற்றை நாம் ஒட்டி மேலே பாலீஷ் போட்டால் மரத்தில் செய்த மரச் சாமான்கள் போலவே இருக்கும். கடைகளில் veneer தகடுகள் பல தரங்களில் விற்கப்படுகின்றன. 

 

இதில் மரைன் பிளைவுட் பூஞ்சை அதிகம் பிடிக்காது. அதே நேரம் ஈரத்தன்மையை அதிகம் தாங்கும் சக்தி உண்டு. விலையும் சற்று அதிகம். அடுத்து. ஒவ்வொரு பிளைவுட்டிலும் தர வேறுபாடு உண்டு. A கிரேடு என்றால் இரு பக்கமும் எந்தப் பொக்கும் குறையும் இல்லாத வெநீர் தகடுகளால் ஆனது. 

 

A / BB கிரேடு என்பது பின் பக்கத்தில் முடிச்சுகள், சிறிது பொக்குகள் உள்ள வெநீர் தகடுகளால் ஆனது டீ கிரேடு... இரு பக்கமும் சிறிது முடிச்சுகளும், சிறிது நிறம் வெளிறியும் இருக்கக் கூடும். B/BB.B.C / D ஆகிய குறியீடுகளில் தரம் குறைந்து கொண்டே இருக்கும். WG என்றால் ஓட்டைகள் சரி பார்க்கப்பட்டு இருக்கும்.

 

X என்றால் எல்லா பிரச்னைகளும் (நாம் எதுவும் கேள்வி கேட்க முடியாது!) அனுமதிக்கப்பட்டு இருக்கும். WBP குறியீடு எனில் மரைன் பிளை. தட்பவெப்பம் மற்றும் நீராவிக்கு எதிராக பதப்படுத்தியது. பொதுவாக 40 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை பல்வேறு தரத்தில், விலையில், பிராண்டுகளில் கிடைக்கும். 

 

ப்ரீஷலேமினேட்டட் பிளைவுட் வகை என்றால், அழுத்தத்தில் சன்மைக்கா எனப்படும் லேமினேஷன் ஒட்டப்பட்டு இருக்கும். நாமே ஒட்டும்போது சில நேரம் பிய்ந்து வரும் வாய்ப்புகள் அதிகம்.

 

பார்ட்டிகிள் போர்டு (Particle Board) இவை சிப் போர்டு எனவும் அழைக்கப்படுகின்றன. டிம்பர் டிப்போ எனப்படும் மரப்பட்டறைகளில் மிச்சம் இருக்கும் மரத் துகள்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்த போது பிறந்ததே பார்ட்டிகள் பலகை. விலை குறைவாகவும், மிகச் சீராகவும் இருக்கும். இதற்கான சிப்பிங் இயந்திரத்தில் மரக் கழிவுகள் மற்றும் மரச் சீவல்கள், பட்டைகள் போடும் போது சீரான தூள்கள் கிடைக்கும். இவற்றைப் பலகையாக மாற்றும் போது வாட்டர் ப்ரூஃப், ஃபயர் ப்ரூஃப் போன்ற விஷயங்களுக்கு சில வேதிப்பொருட்கள் சேர்ப்பார்கள். 

 

இவை மிக தக்கையாக எடை இல்லாமல் இருக்கும். இதன் மேல் தகடுகளை ஒட்டி தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தலாம். பூச்சி எளிதில் பிடிக்காது. விலை மிக மிகக் குறைவு. விலைக் குறைவான மரச் சாமான்கள் இப்போது நிறைய கடைகளில் கிடைக்கிறது. அவை பெரும்பாலும் பார்ட்டிகிள் பலகைக் கொண்டே தயாரிக்கப் பட்டு இருக்கும்.

 

MDF எனப்படும் Medium Density Board இதுவும் ரெடிமேட் பலகை வகையை சேர்ந்ததுதான்.  திடம் மற்றும் மென்மையான மரத்தின் மர நார்கள் அதிக வெப்பத்திலும் அழுத்தத்திலும் சில வேதியியல் பொருட்கள் சேர்ப்பதின் மூலம் கடின பலகையாக மாற்றப்படுகிறது. இவற்றிலும் சில வகைகள் உள்ளன. ஒன்று ஈரப்பதம் பாதிக்காமல் இருக்கும் வகை. அடுத்து ஃபயர் ரெசிஸ்டன்ட் எனப்படும் சூடு தாங்கும் பலகை. இதன் அடர்த்தி 500 kg / m3 (31 1b / ft3) - 1000 kg / m3 (62  1b / ft3 ) என இருக்கும். 

 

இது பார்ட்டிகிள் போர்டு போல வெறும் துகள்களில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை. ஆஸ்திரேலியா, தெற்கு அமெரிக்க பகுதிகளில் வளரும். பின், மரங்கள் கட்டையாக நறுக்கப்பட்டு, தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. அவை சிறியதாக சீவப்படுகின்றன. இதில் பொக்கு, முடிச்சுகள், வளையங்கள் இருக்காது. மேலே வெகு நேர்த்தியாக இருக்கும். 

 

இதனால் மரச் சாமான்கள் செய்வது எளிது. பிளைவுட், வெநீர் தகடுகளை விட இன்னும் நன்றாக இருக்கும். விலை குறைந்த வகைகளும் உண்டு. ஈரத்துணியில் துடைக்கக் கூடாது. ஈரப்பதம் அல்லது நீர் புழங்கும் அறைக்கு நல்லதல்ல. மரத்தை விட விலை குறைந்தது. ஆனால், மரம் போல இஷ்டத்துக்கு ஆணி அடிக்க முடியாது. மரம் அளவுக்கு உறுதி இல்லாததே காரணம்.

 

HDF எனப்படும் High Density Fibre Board கிட்டத்தட்ட MDF பலகைகள் போலவேதான் இதன் தயாரிப்பும். இவை இன்னும் அதிக அழுத்தத்தில், வெப்பத்தில், அதிக உறுதியாக மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. MDF, பார்ட்டிகிள் பலகைகளை விட தரம் வாய்ந்தது. இன்னும் நேர்த்தியாக இருப்பதுடன், தச்சு வேலைகளுக்கு இன்னும் உறுதியாக நிற்கும். நவீன மாடுலர் சமையல் அறைகளுக்கு மிகப் பொருத்தமானது. இதையும் ஈரப்பகுதியில் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. ஈரத்துணியில் துடைப்பதும் அத்தனை நல்லதில்லை. நாம் மேலே ஒட்டும் லேமினேஷன் தரத்தை பொறுத்தே, அதன் பராமரிப்பு தேவைகள் இருக்கும். மரம் அளவுக்கு ஆணிகள் அடிக்க முடியாது. 

 

பிளாக் போர்டு        
                            
இது மரத்துண்டுகளால் ஆனது. மரத்துண்டுகளை வெப்பத்திலும் அழுத்தத்திலும், வேதியியல் பொருட்கள் சேர்த்து இணைக்கப்படுகிறது. மரம் போல் கோடுகள் அமைப்பு இருக்காது. மரத்தின் வடிவு தேவை என்றால், மேலே வெநீர் தகடுகள் ஒட்டி பாலீஷ், செய்யலாம். இதன் மேல் நேரடியாக மேட் ஃபினிஷ், பெயின்ட் அடிக்கலாம். இதையும் நீரின் அருகில் அதிக நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தச்சு வேலைகளுக்கு மிக எளிது. இந்த முறையில் கதவுகள் மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றன.

 

ரப்பர் வுட்

இப்போது கடைகளில் ரப்பர் வுட் எனப்படும் மரத்தில் பல மரச்சாமான்கள் வருவதை பார்க்கலாம். வேதியியல் பொருட்களில் ஈரப்பத பாதுகாப்பு, பூச்சித் தடுப்பு எல்லாம் செய்து பாலீஷ், போட்டு விற்கப்படுகிறது. இவற்றிலும் மாடுலர் கிச்சன் செய்யலாம். 

 

வெநீர் தகடுகள் (veneer)


மரத்தை மெல்லிய தகடுகளாக மாற்றிப் பயன்படுத்துவதை வெநீர் தகடுகள் என்கிறோம். இவற்றில் பட்டைகளும் உண்டு. இவற்றை ஒட்டி மேலே பாலீஷ் செய்தால் நிஜ மரத்தில் செய்தது போலவே தோற்றம் வரும். 

 

அலங்கார தகடுகள் (lamination Sheets) 

பிளைவுட், பார்ட்டிகிள் போர்டு மேலே ஒட்டும் தகடுகள். வேதியியல் பொருட்கள். சிறு எச்சரிக்கை. மரத்தை விட இவை எத்தனையோ சிறப்புகள் பெற்று இருந்தாலும், ஒரு பிரச்னை உண்டு. பெரும்பாலான பிளைவுட் அல்லது போர்டுகள் தயாரிக்கும் போது உபயோகிக்கும் வேதிப்பொருள் Formaldehyde . இது பெரும்பாலும் ஈரப்பதம் தாங்க உபயோகப்படுத்தப்படுகிறது. 

 

ஃபார்மல்டிஹைட் வேதிப் பொருளானது, வெளியே அதிக அளவில் கலக்கும்போது புற்று நோயை உருவாக்கும் (Carcinogenic) தன்மையை கொண்டிருக்கிறது. இதனால் இந்தப் பலகைகளை உபயோகிக்கும் போது மிகக்கவனமாக எல்லா இடங்களும் சரியாக லேமினேட் செய்து ஒட்டப்பட்டு இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். நீண்ட கால உபயோகத்தில் இந்த வேதியியல் பொருள் காற்றில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. சரியாக அனைத்துப் பக்கங்களிலும் மூடப்பட்டு இருந்தால் கவலை இல்லை.

 

 ப்ரீ-லேமினேட்டட் போர்டு (Pre-laminated Board)

அடுத்து அறிமுகம் செய்யப்பட்டதே ப்ரீ-லேமினேஷன் எனப்படும் தொழிற்சாலையில் ஒட்டப்படும் விஷயம். மிக மெல்லியதாக இருக்கும். ஒரு பக்கம் வெள்ளையாக ஒட்டுவார்கள். வெளியே கதவுப் பக்கம் எப்படி வேண்டுமோ, அந்த நிறத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படி லேமினேட் செய்யும்போது உள்ளே சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். ஏற்கனவே வாட்டர் ப்ரூஃப், ஃபயர் ப்ரூஃப் போன்ற விஷயங்களுக்கு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, மெல்லிய லேமினேஷன் தகடு அதிக வெப்பத்திலும் அழுத்தத்திலும் வைக்கப்படும்போது, பிரிக்க முடியாமல் போய் விடும். 

 

பார்ட்டிகிள் போர்டு, HDF, MDF  பிளாக் போர்டு ஆகிய எல்லாவற்றிலும் ப்ரீ-லேமினேஷன் உபயோகிக்கலாம். இந்தியா முழுக்க இதுபோன்ற ப்ரீ-லேமினேட்டட் வகைகளே உபயோகம் ஆகின்றன. இவற்றையே பெரும்பாலும் உள் அலங்காரம் மற்றும் வெளியிலும் பயன்படுத்துகிறார்கள். மாடுலர் கிச்சன் உள் கட்டமைப்பில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலில் பாக்ஸ் அமைப்பு செய்து கொள்வார்கள். பிறகு கதவு பொருத்துவார்கள்.

 

மாடுலரில் முக்கியமான அம்சம் குறைந்தபட்ச இடத்தில் அதிக பொருட்கள் வைக்கும் வசதி. அதற்கேற்ப டிராயர்களை வடிவமைக்க தேவை இருக்கிறது. நம் விருப்பம் அல்லது வசதிக்கு ஏற்ப ‘எல்’இ ‘பேரலல்’, ‘ப’ அல்லது ‘அடுப்பு நடுவில் வரும் தீவு வடிவம்’ என்று முடிவு செய்து இருப்போம்தானே? 

 

இவற்றில் SS 304 கிரேடு ஸ்டீல் நல்லது. ஸ்லீக் உள்பட நூற்றுக்கணக்கான பிராண்டு களில் கிடைக்கிறது. தரம் உறுதி செய்து கொள்ளல் மிக அவசியம். கீல்களில் பிராண்ட் பார்த்து வாங்குவது நல்லது.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067455