வீண் எனக் கருதப்படும் பொருட்கள் கொண்டே இன்டீரியர் செய்தால் நமக்கு பைசா செலவில்லை,
உதாரணத்திற்கு, பழைய ஏணி ஏதேனும் இருந்தால் அதை சுத்தம் செய்து, தகுந்த வர்ணம் அடித்து, பரணில் கிடக்கும் பழைய புகைப்படங்களை எடுத்து, படத்தில் உள்eது போன்று மாட்டி பயன்படுத்துங்கள். மாட்டிய பிறகு அங்கும் இங்கும் படங்கள் ஆடாமல் இருப்பதற்கு அதன் பின்புறம் ஒயிட் டேப் வைத்து ஒட்டலாம்.
நமது வீட்டின் வாசலில் இதை சாய்த்து வைத்தால் வீட்டிற்கு வருபவர்கள் ஒரு நிமிடம் நின்று இதைப் பார்த்து விட்டுத்தான் உள்ளே வருவார்கள். நிச்சயம் இது யாருடைய ஐடியா? என கேட்டுப் பாராட்டுவார்கள்.
உடைந்த பழைய ஏணி இல்லையே என வருத்தப்படுபவர்கள் தங்கள் வீடுகளில் எப்போதாவது நடைபெறும் கார்பெண்டர் பணிகளின்போது வீணாகும் மரத்துண்டுகள் மூலம் இதைச் செய்யலாமே? துணி காயவைக்கும் ஹேங்கர் கம்பிகள் பழையதாகிவிட்டால் தூக்கிப் போட்டுவிடாதீர்கள். குறடா கொண்டு படத்தில் உள்ளது போல வளைத்துக் கொள்ளுங்கள். பிறகென்ன? உங்கeது காலணிகளை கடைகளில் உள்ளது போல ஸ்டைலாக மாட்டலாம்.
படத்தில் உள்ளது சில ஐடியாக்கள்தான். யோசித்தால், உங்களுக்கும் இதுபோன்று ரீசைக்கிள் இன்டீரியர் ஐடியாக்கள் நிறைய வரும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067433
|