தமிழகம் முழுக்க 60 சதவிகிதத்துக்கும் மேலாக கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் துறைக்கு அடுக்கடுக்கடுக்காய் வரும் சோதனைகளுள் இப்போது தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துவிட்டது. 3 ஆண்டுகளாக மழை பொய்த்துப் போக, கூடவே மழைநீர் சேகரிப்பு திட்டமும் நாளடைவில் பிசுபிசுத்து போக பெரும்பான்மையான மாவட்டங்களில் 300 அடிக்கு கீழே நிலத்தடி நீர் மட்டம் சென்றுவிட்டது.
விவசாயம் செய்வதற்கு தண்ணீரை லாரிகளில் கொண்டு வரும் அவலமான காட்சிகள் போலவே கட்டுமானப்பணிக்கும் பரவலாக தண்ணீர் லாரிகளில் சப்ளை ஆகும் காட்சிகள் கட்டுநர்களையும் பொதுமக்களையும் திகைக்க வைத்திருக்கிறது.
சென்ற 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சென்னையில் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த சமயம் பார்த்து தமிழகமெங்கும் நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. வீடுகளுக்கே தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில் கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதை வெகுவாக குறைத்து விட்டனர் தண்ணீர் லாரி நிறுவனங்கள்.
சென்னை ஓ எம் ஆர் சாலையில் இப்போது கட்டுமானப் பணிகளுக்கு முன்பு இருந்ததை விட 50% குறைவாகத்தான் தண்ணீர் கிடைத்துவருகிறது. குடிக்கவே பற்றாக்குறை உள்ள இந்த காலத்தில் கட்டுமானப்பணிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள் பொது மக்கள் & கட்டுநர்கள்.
துரைப்பாக்கத்தில் 100 வீடுகள் கொண்ட குடியிருப்பை கட்டிவரும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்திரன் என்பவர், 45% விழுக்காடு கட்டிடப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக மீதி வேலைகள் அப்படியே முடங்கிப்போயிருப்பதாக தனது கவலையை வெளியிடுகிறார்.
“”நாங்கள் எங்களது கட்டுமான வேலைகளின் வேகத்தை குறைத்துள்ளோம். நாள்தோறும் 50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 24,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது ‘’என்கிறார் சந்திரன்.
தரமான தண்ணீர் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. எங்களது கட்டுமானத்தின் நிறைவுக்காலத்தை தண்ணீர் பற்றாக் குறையின் காரணமாக அடுத்த 4 மாத காலத்திற்கு தள்ளிப் போட்டிருக்கிறோம் . இதனால் வீட்டு ஒப்படைப்பு தேதியைத் தள்ளிப்போகிறது’’ என்கிறார் சந்திரன்.
பொதுவாக ஓ எம் ஆர் பகுதியில் நடந்துவரும் கட்டுமான பணிகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 1.20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மத்திய மற்றும் தென்சென்னை பகுதிகளில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளுக்கு தனியார் தண்ணீர் விநியோக நிறுவனங்கள்தான் தண்ணீர் தருகின்றன.
திருப்போரூர், கேளம்பாக்கம், பொன்மார் மற்றும் வண்டலூர், கேளம்பாக்கம் சாலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளில் இருந்துதான் இவைகள் தண்ணீர் எடுக்கின்றன. இந்தக் கிணறுகளிலும் தண்ணீர் ஆழத்திற்கு சென்றுவிட்டதால் இவைகள் தண்ணீருக்கான மற்ற இடங்களை தேடுகின்றன. இதனால் ட்ரிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
தமிழ்நாட்டு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணன் அவர்கள் கூறும்போது “ ”கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள நல்லம்பாக்கம் மற்றும் கீரம்பாக்கம் ஆகிய பகுதிகள் தண்ணீருக்கான புதியஆதாரங்கள். முன்பு விவசாய பூமியாக இருந்த பல இடங்கள் இப்போது நகர்ப் புறங்களாக மாறிவிட்டன.
ஆகவே, தண்ணீருக்காக இப்போது நாங்கள் தொலைதூர இடங்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறத்து. தூரம் அதிகமாகிவிட்டதால் ஓட்டுனர்களுக்கு ஒரு நாளைக்கு 3 டிரிப்புகளுக்கு மேல் செல்ல முடியவில்லை. ஐதனால் செலவு கூடிப்போக கட்டுநர்களோ லாரி உரிமையாளர்கள அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என புகார் கூறுகிறார்கள்.
24,000 லிட்டர் கொள்ளளவுள்ள டேங்கர்கள் 1600 ரூபாய் முதல் 2000 ரூபாய் வர சம்பாதிக்கின்றன. இப்போது சென்னை முழுவதிலும் வீடுகளில் தண்ணீர் தேவை அதிகமாகிவிட்டதால் இந்த டேங்கர்கள் 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றன.
சென்னை பெருநகரத்தின் மொத்த பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் புறநகர் பகுதிகளிலும் சேர்ந்து தற்போது சுமார் 300 பெரிய வீடு மற்றும் அலுவலகக் கட்டுமானத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தவிர இரண்டு வீதிகளுக்கு ஒரு வீதியில் ஏதாவது ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகிறது.
ஒரு 10,000 சதுர அடி கொண்ட கட்டுமானத்திற்கு 25,000 கிலோ லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறத்து. சாந்து குலைப்பது, கான்கிரீட் பணிகள், கியூரிங், ஸ்திரப்படுத்துதல் போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
அதுமட்டுமல்ல சமீபத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணி செய்யும் வேலையாட்களுக்கு தண்ணீர் தருவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது’’ என்கிறார் கிரடாய் அமைப்பின் துணைத் தலைவர் எஸ் ஸ்ரீதரன் அவர்கள்.
தமிழகமெங்கும் தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகம் எப்படி உள்ளது? தண்ணிரை கட்டுமனாப்பணிகளில் எவ்வாறு சிக்கனாமாய் செலவழிப்பது என்றறிய சில பொறியாளர்களை அணுகினோம்.கோவை சிவில் இன்ஜினீயர் அசோசியேrன் தலைவர் பொறி. எஸ்.பி. சரவணன் அவர்கள் கட்டுமானப்பணிகளில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து நம்மிடையே கூறியபோது,
“”கட்டுமானத்துறையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சில முக்கிய வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
கட்டுமானப் பணிகளுக்கு போர்வெல் இருந்து நேரடியாக நீரை எடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக பெரிய பேரல்கள், தொட்டிகளில் நீரைப்பிடித்து பயன்படுத்த வேண்டும். மின் மோட்டாருக்கு பதிலாக மேனுவலாக நீரை எடுத்து கியூரிங் பணியை மேற்கொண்டால் நீர் மிச்சமாகும். மோட்டார் தண்ணீர் பைப் மூலம் தண்ணீரை பீச்சி அடித்துகியூரிங் செய்வது அதிக தண்ணீர் விரையத்திற்கு வழிவகுக்கும்.
சுவர் கட்டுமானம்,மேற்பூச்சு போன்ற பணிகளுக்கு சிறிய ஜார், மக்குகள் மூலம் நீரை கையாள வேண்டும். காலம், பில்லர்களை கியூரிங் செய்வதற்கு சொட்டு நீர் பாசான முறையை கடைபிடிக்கலாம். அதாவது, பில்லர் போன்ற கான்கிரீட் உறுப்புகளை சுற்றி கனமான சாக்குபைகளை கட்டிவிட்டு பில்லர் மேலே உச்சியில் பெரிய பிளாஸ்டிக் உபகரணத்தை பொருத்தி அடியில் சிறு துளையிட்டு நீரை நிரப்பினால் அது நீரை சாக்குபையில் தொடர்ந்து சொட்டிக் கொண்டிருக்கும் குறைவான தண்ணீர் செலவில் தரமான கியூரிங் பணிமுறையாகும்.
கியூரிங் செய்வதற்கு தான் கட்டுமானப் பணியில் அதிக தண்ணீர் செலவாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கான்கிரீட் கலவை கலப்பதற்கு நீரை உபயோகிக்கும் போது ஐ.எஸ். முறையை பின்பற்றி அது வழிகாட்டும் நீரை மட்டும் அளந்து பயன்படுத்தினால் நீர் மிச்சமாகும். அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தண்ணீரை மிச்சபடுத்துவதின் அவசியத்தைப் பற்றி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
கோவை பொறியாளர் திரு.ஏ.ஜி.மாரிமுத்து ராஜ் அவர்கள் தண்ணீர்பற்றாகுறையின் விளைகள் பற்றி நம்மிடம் கூறும்போது, தற்சமயம் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் கட்டடங்களில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவுகள் குறைந்துள்ளது.
கட்டடம் கட்ட எந்த ஒரு பணியாக இருப்பினும் தண்ணீரின் பங்கு இல்லாது இருக்க வாய்ப்பு குறைவு. மிக மிக முக்கிய காரணியாக தண்ணீர் இருக்கிறது. கடந்த காலங்கள் வரை தண்ணீர் ஒரு பொருட்டாக கட்டடங்கள் கட்டுபவர்களுக்கு தெரியாமல் இருந்தது. இன்று நிலை வேறு. கட்டடங்களுக்கு பயன்படுத்தும் நீரின் தரமே. கட்டடங்களின் ஆயுள் காலத்தை தீர்மானிக்க கூடிய வகையில் காலம் இயற்கை மாற்றி விட்டது.
அஸ்திவார தோண்டும் பணியில் இருந்து கிரக பிரவேஷப் பணி வரை கட்டடத்திற்கு தண்ணீர் மிக மிக முக்கியம் ஆகிறது.
மனிதனுக்கு எப்படி தண்ணீர் அவசியமோ அதே போல் கட்டடத்திற்கும் தண்ணீர் அவசியம், கட்டடத்திற்குப் உயிர் உள்ளது. ஆம் நீர் பருகுகின்றது.
குறிபிட்ட காலத்தில் கட்டடங்களை முடிக்க பெறாமல் கட்டடதுறைக்கும், பெரிய பொருள் இழப்பு, பண இழப்பு உண்டாகும்.
தண்ணீர் தட்டுபாட்டால் நல்ல தண்ணீர், என எதையும் யோசிக்காமல் பயன்படுத்துவதால் கட்டடம் பளு இழக்கும். தண்ணீர் கிடைப்பதே அரிது இதில் நல்ல நீர் என எப்படி பார்ப்பது என கருதினால், பிற்காலத்தில் பராமரிப்பு பணி வரும்.
இந்த காலகட்டத்தில் தண்ணீர் பங்கை முழுமையான முறையில் சிக்கனமான பயன்படுத்திடவும் முன் வர வேண்டும். Estimation கூடுதல் ஆகும் வாய்ப்பு உண்டு.
என்ன மாதிரி வரைபடம். கணக்கீடு (டிசைன்) அதற்குண்டான கம்பிகள், கான்கிரீட்கள், பயன்படுத்தும் பொருட்கள் தரம், “ISI” ஆக இருப்பினும் தண்ணீரின் தரமும் மிக மிக முக்கியம் என்கிறது இந்திய தர நிர்ணய கோட்பாடு. (NRC code book).
கட்டடங்களுக்கு பயன்படுத்தும் நீரின் தரம் குடிக்கும் தண்ணீர் போல் இருக்க வேண்டும் எனவு.“PORTABLE WATER” PH அளவு சரியாக 6-7 க்குள் இருக்க வேண்டும் என கூறுகிறது.
மிக முக்கியமாக குடிக்கும் நீரை விட தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுத்தபடுகிறது. அப்படி இருப்பின் தான் செய்யபடும் பணியானது உறுதி தன்மையுடன் இருக்கும். டிசைன் ரிசல்ட் கிடைக்கும். வலிமை கிடைக்க பெறும். ஆக இப்படிப் பட்ட சூழலில். தரமில்லாத தண்ணீரை பயன்படுத்துவதால் பிற்காலத்தில் நிறைய பராமரிப்பு வரும். பிற்காலத்தில் ஏன் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் பராமரிப்பு வரும், பணச் செலவு உண்டாகும்.
தரமில்லாத தண்ணீரால் தேசிய பேரிழப்புஎன கூட சொல்லலாம். சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் நீராற்று முறை தள்ளி போகிறது (Curing) ஏன் நீராற்றுவது தடைபடுகிறது?. அதனால் உறுதித் தன்மை குறை பதமாகிறது.
தேவைக்கு ஏற்ப நீர் கிடக்க பெறாததால் அஸ்திவாரத்திலும் பேஸ்மெண்ட் பணியாலும் மிக பாதிக்கப்படுகிறது.
கட்டடங்களில் (பில்லர்) காலம் போஸ்ட் குழியிலும், அஸ்திவார உள் பேஸ்மெண்ட் உள் மண் நிரப்பி பின்பு நீர் விட்டு “Consolidation” மண் இறுக்கம் செய்யும் பணி தண்ணீரால் தடைபடுகிறது.
எனவே தான் கட்டுமானப் பணியிடத்தில் நீர் இல்லை எனில் பணி இல்லை என்கிறோம்..
மேற்கண்ட பணிக்கு தாராளமாக நீர் கிடைக்க பெறாமல் பணியை முடிக்க எண்ணி பணி செய்து முடிந்தால் பிற்காலத்தில் பெரிய பாதிப்பு உண்டாகும்’’ என விரிவாக எடுத்துரைக்கிறார் தேனியைச் சேர்ந்த பொறியாளர் Er.S.மெல்வின், தன் அனுபவ ஆலோசனைகளைக் கூறும்போது,
தரமான தன்ணீர் என்பது ஒரு கட்டுமானப் பொருளே ஆகையால் நாம் கீழ்கண்ட தண்ணீர் சிக்கன நடவடிக்கைகளிலும், தரமான தண்ணீரைக் கண்டறியும் வழிகளையும் ஆராய வேண்டும்.
கட்டிட வேலைகளில் நல்ல தண்ணீரை பயன்படுத்துவது மிக நல்லது. போர் தண்ணீரை பயன்படுத்தும் போது முதலில் Test செய்து கட்டிட வேலைக்கு உகந்ததா என ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். கட்டிடங்களுக்கு பயன்படுத்தும் சிமெண்ட் Quick setting cement யாக 53 grade cement use பண்ணலாம்.
கட்டிடங்களுக்கு water curing பன்னும் போது ஸ்ப்ரே முறையில் (spray) பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 10% தண்ணீரை மிச்ச படுத்தலாம்.
கட்டிடத் தொழிளாலர்களுக்கு தண்ணீர் தேவை சேமிப்பு குஷீத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தண்ணீரை சேமிக்கலாம். ‘’ என்றவர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது
கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என மழைநீர் சேகரிப்பு திட்டம் என மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் செயல்படுத்தினார். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் அப்பொழுது சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு பல வகைகளில் சேகரிக்கப்படுகிறது . அவற்றில் நாம் கடைபிடிக்க வேண்டியவை :
1. போர்வெல் போடும் போது போர்வெல்க்கு 10 முதல் 15 அடி தள்ளி ஒரு போர்வெல் 50 அடி வரை போட்டு மழை நீரை சேமிக்கலாம். உபயோகப்படுத்தாத போர்களிலும் மழை நீரை சேமிக்கலாம் .
2. கட்டிடங்களில் இருந்து வரும் மழை நீரை 6 அடிக்கு 4 அடி உயரம் குறைந்தது 6 அடி வரை தோண்டி அதில் மழை நீரை செலுத்தி நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தலாம்.
3. குளம், கம்மாய்களை துர்வாரி அதில் நீர் சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
4. கட்டிடம் கட்டும் போது ஒரு பாதாள அறை அமைத்து மழை நீரை சேகரிக்கலாம். கட்டிடங்களில் சேகரிக்கப்படும் நீரை குழாய் மூலம் கொண்டு வந்து மூன்று தொட்டிகள் வழியாக முறையே மணல், ஜல்லி கற்கள், கரி போன்றவற்ஷீன் வழியாக நீரை பாதாள அறைக்கு கொண்டு வந்து சேமிக்கலாம். பாதாள அறை காற்று, வெளிச்சம் புகா வண்ணம் அமைக்க வேண்டும்.
8. நிலமேற்பரப்பு நீர் நம்முடைய தேவைகளுக்கு போதுமானவையாக இல்லை ஆகவே நிலத்தடி நீரை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. நகரமயமாவதால், நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்த வேண்டியுள்ளது. எனவே மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் கருதி அனைவரும் மழைநீர் சேகரிப்பை பயன்படுத்தி, மழை
நீரை சேமித்து மகிழுடன் வாழ வேண்டும்’’ என்றார்.
ஆனால், வேலூரைச் சேர்ந்த பொறியாளரின் கருத்து வேறாக உள்ளது. வேலூர் சிவில் பொஷீயாளர் சங்கத்தின் தலைவர் திரு. என்.சக்திவேல் அவர்கள் கூறும்போது,
பொதுவாக வடமாவட்ட பகுதிகளான வேலூர், காட்பாடி பகுதிகளில் தண்ணீர் பற்றாகுறை இருக்கும் என நினைப்பார்கள். ஆனால், எங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை என்பது தான் ஆச்சரியமான விrயம். பாலாறு ஓடும் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் உபகரணியாகவே கிடைக்கிறது.
ஆற்று படுகைக்கு அருகே புரோஜக்டுகளை செய்யும் போது தண்ணீர் பற்றாகுறை இருப்பதில்லை. நான் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை பகுதிகளில் பலரும் புரோஜக்டுகளை செய்து வருகிறார்கள். அங்கெல்லாம் தண்ணீர் பிரச்சனை அச்சுறுத்தும் அளவிற்கு இல்லை. ரங்காபுரம் என்னும் பகுதியில் ஒரு புராஜக்ட்டை செய்து வருகிறேன், அங்கு வெறும் 8 அடி ஆழத்தில் சுத்தமான நிலத்தடி நீர் எங்களுக்கு கிடைக்கிறது. இதுவே இரு மாதங்களுக்கு முன்பு 2 அடியிலேயே நிலத்தடி நீர் மட்டம் இருந்தது.
ஆனால் அதே சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் மாவட்டங்களில் புராஜெக்ட்டை செய்யும் பொறியாளர்கள், வீடு கட்டும் பொது மக்கள் கடும் கோடைக் காலத்தில் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது போதுமான தண்ணீரை முன்னேற்பாடுடன் தயார் செய்து கொள்ள வேண்டும். கியூரிங் போன்ற பணிகளை மேனுவலாக செய்ய வேண்டும்’’ என்றார்.
நீரற்ற நிலை என்னும் இந்த சவாலை கட்டுமானத்துறையினர் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வதைத் தவிர வேறுவழில்லை.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067438
|