துபாயின் பாம் ஜுமரியா செயற்கை தீவுகள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. கடற்கரையிலிருந்து 5 கி.மீ. நீளத்திற்கு செயற்கை மணற் திட்டு உருவாக்கப் பட்டு தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்டது. அதன் பிறகு பான் ஜுமரியாவில் ஏராளமான குடியிருப்புகள், ஹோட்டல்கள், மால்கள், தீம் பார்க்குகள், கேளிக்கை விடுதிகள் என பலப்பல கட்டுமானங்கள் ஆண்டுதோறும் திறக்கப்பட்டன. நாளொன்றுக்கு பத்தாயிரம் பேர் வந்து போகும் பாம் ஜுமரியாவில் இதுவரை 21 ஹோட்டல்கள் கட்டப் பட்டுள்ளன. அதில் 2005 ஆம் ஆண்டு டிரம்ப் இன்டர்நேrனல் என்னும் ஹோட்டல் திறக்கப்பட்டது.
பூவின் இதழ்கள் போன்ற வெளிப்புற திரைகள்( தங்க நிறத்தால் ஆன நகரும் திரைகள்), பிரம்மாண்டமான பூவின் மொட்டு வடிவில் ஆன கட்டட வடிவமைப்பு போன்றவை உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 2006 இல் அமெரிக்கன் ரெஸார்ட் டெவலப்மெண்ட் அசோசியேrன் (ஏஆர்டிஏ) என்னும் அமைப்பு ஹோட்டல் டிரம்பிற்கு சிறந்த ஹோட்டல் கட்டுமான விருதினை தந்தது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருதினை மறுபடியும் ஹோட்டல் டிரம்ப் 2018 இல் மீண்டும் பெற்றிருக்கிறது. சென்ற மாதம் ஏஆர்டிஏ இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மேலும் அது கட்டட வடிவமைப்பாளர்கள் தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் சென்று நேரில் பார்வையிடக் கூடிய வியத்தகு கட்டுமானம் இது என பரிந்துரை செய்திருக்கிறது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067432
|