கட்டடங்களில் மேற்கூரை அமைக்கும் போது, முதலில் ஷட்டர்கள் அமைக்கப்படும், அதன் மேல், கம்பி கட்டும் வேலை செய்யப்படும். அதன் பின், கான்கிரீட் கலவை கொட்டப்படும்.இவ்வாறு கான்கிரீட் கொட்டி, சில வாரங்களுக்கு பின், ஷட்டர்கள் பிரிக்கப்படும். இதில் ஷட்டர்கள் அமைத்த பின், அதன் மேல் கம்பி கட்டும் வேலையை துவங்கும் முன், ஷட்டர்களின் மேல், தார் பூசுவது, தார் பாய் போடுவது வழக்கமாக உள்ளன.
இப்படித்தான், நாம் கான்கிரீட்டைப் பக்குவப் படுத்துகிறோம். ஆனால் இது போதுமானதாக இல்லை என தான் சொல்ல வேண்டும். கான்கிரீட் தயாரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சிமென்ட், மணல், கம்பி எல்லாமே தரமானவையாக இருக்கலாம்.
ஆனால், ஆர்.சி.சி., வேலை நடந்து முடிந்து போதிய கால அவகாசம் ஆகியுள்ளதா என்பதை உறுதி செய்தால், பூச்சு வேலையில் எதிர்பார்க்கப்படும் தரம் கிடைக்கும். அத்துடன், ஆர்.சி.சி.,யில் ஏற்படக்கூடிய விரிசல்களும் தவிர்க்கப்படும்.கான்கிரீட்டை தாங்கி பிடிப்பதற்கான தளமாக, ஷட்டர்கள் கலவையை தொட கூடாது. அப்படி தொடும் நிலையில், கான்கிரீட் உறுதியாவதில், சில சிக்கல்கள் ஏற்படும்.
மேலும், கான்கிரீட்டின் மேற்பகுதி உலந்து இருக்கும் நிலையில், அடிப்பகுதியில் ஈரத்தன்மை மிச்சம் இருக்கலாம்.இந்த விrயத்தை கவனிக்காமல்,ஷட்டர்களை பிரிக்கும் போது, அடிப்பகுதி கான்கிரீட் பெயர்ந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், கட்டடத்தின் ஆயுள் குறையத்தான் செய்யும். எனவே ஷட்டர்களின் மேல், கான்கிரீட் நேரடியாக படாமல் இருப்பதற்காக, தார் பாய்களை விரிக்கலாம். இதில், சிலர் ஓலை பாய்களை கூட பயன்படுத்துகின்றனர்.
இதில் நீங்கள் தரைவிரிப்பாக ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்த வேண்டும். அந்த பொருள், கான்கிரீட்டின் ஈரப்பதத்துடன் வினைபுரியாததாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அடிப்பகுதி கான்கிரீட் உறுதியாவதில் சிக்கல் ஏற்படும்.
கட்டுமான பணியின் போது, சில சமயங்களில் மட்டுமே இதன் பாதிப்பு தெரியவரும். பெரும்பாலான கட்டடங்களில், கட்டுமான பணி முடிந்த சில ஆண்டுகளுக்கு பின், இப்பிரச்னை வெளிச்சத்துக்கு வரும். அப்போது, அதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும், சீரமைப்பு செலவும் அதிகரிக்கும் என்கின்றனர்.
கவனத்திற்கு
. வழக்கமாக கான்கிரீட்டை பக்குவப்படுத்த, பழைய பலகை முட்டுக் கொடுக்கும் பழக்கத்தை தான் பின்பற்றி வருகிறோம்.
. நீராற்றும் வேலையை, முறையாக செய்தால் தான், கட்டடம் வலுவுள்ளதாக இருக்கும். தண்ணீர் தேங்கி நிற்பதால், கான்கிரீட்டின் மேல் தூசி படிவதும் தடுக்கப்படுகிறது.
. தண்ணீரைத் தேக்குவது, தண்ணீரை தெளிப்பது, ஈரக் கோணிகளை கொண்டு மூடி வைப்பது, பாலிதீன் தாள்களை பரப்புவது என, பல வழிகளில் நீராற்றும் பணி நடக்கும்.
. இதற்கு பதிலாக, அக்ரிலின் எமல்rன் வகையிலான பூச்சுக்களை கான்கிரீட் பரப்பின் மேல் பூசலாம்.
. கான்கிரீட் ஆனாலும், கலவை ஆனாலும், இவ்வாறு ஒரே ஒரு முறை செய்தால், வெடிப்புகள் வராமல் தடுத்து, இறுகும் வேலை ஆரம்பித்துவிடும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067521
|