சென்ற இதழில், ரூ.13 லட்சம் கட்டுமானச் செலவை, ரூ.9 லட்சமாக குறைத்தவரின் கதையை கேட்டீர்கள். ரூ.6 லட்சத்தில் கிட்டத்தட்ட 1800 ச.அடி பரப்புடைய இரண்டடுக்கு மாடிவீடு இரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இது அனைத்து நாளிதழ் களிலும் செய்தியாக வந்துள்ளது.குறைந்த செலவில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத இந்த வீட்டை புதிய தொழிற்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர் சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.
அப்படி இந்த கட்டிடத்தில் என்னதான் சிறப்பும், வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள்தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்....
ஜிஎஃப்ஆர்ஜி என்கிற தொழிற்நுட்பம்தான் செலவை பெரிய அளவில் குறைத்திருக்கிறது.உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் ஃபைபர் ரீ- இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎஃப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அeவு சிமெண்ட் மற்றும் மிகக் குறைந்த அeவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள 1800 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம்தான். பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்e மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் டாக்டர் தேவதாஸ் மேனன் மற்றும் டாக்டர் மெஹர் பிரசாத் ஆகியோர்கள்தான் தற்போது நடுத்தர மக்களின் கனவை நினைவாக்க வந்திருக்கும் ஹீரோக்கள். 1,800 ச.அடி கட்டிடம் என்றால் சென்னையில் 20 லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் செலவு செய்ய வேண்டும். ஆனால் ரூ.6 லட்சத்தில் எப்படி?
தற்போதையை சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த ஜிப்சம் பலகை கொண்டு வீடு கட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம். தவிர, இந்த மாதிரியான கட்டிடங்களுக்கு பிளாஸ்டரிங் தேவைப்படுவதில்லை. குறைந்த நாட்களில், குறைந்த அeவிலான பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டிடங்களைக் கட்டிவிடலாம். 8 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பை மரபு சார் கட்டிடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் எடை குறைவானதாகவே அமைக்க முடியும். இதனால் அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக அeவில் பணம் சேமிக்க இயலும்.
கிளாஸ் ஃபைபர் ரீdஇன்போர்ஸ்டு ஜிப்சம், இவை எங்கு கிடைக்கின்றன?
இந்தியாவில் கேரe மாநில கொச்சியிலும், மும்பையிலும் கிளாஸ் ஃபைபர் ரீ- இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை இவற்றை தயாரிக்கின்றன.
எதிர்காலத்தில் தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் ஃபைபர் ரீ- இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேனல்களின் விலை ஒரு சதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஜி.எஃப்.ஆர்.ஜி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலைத் தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எஃப்.ஆர்.ஜி. பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம், 124 மி.மீ. கனம் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.
உலகில் ஐ.ஐ.டி.dயில்தான் முதன் முறையாக இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது என நினைக்க வேண்டாம்.ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளிலும் கிளாஸ் ஃபைபர் ரீ- இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
ரூ.6 லட்சத்திற்கு ஃபிளாட் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து உங்களுக்கு ஐயம் இருக்கும் ஆனால், இந்த வகை கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை மரபு சார் கட்டிடங்களுக்கு நிகரானதாக இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கும்போது பராமரிப்புச் செலவு கனிசமாக குறைவு.
ஜி.எஃப்.ஆர்.ஜி பயன்படுத்தி சராசரியாக எத்தனை மாடிகள் எழுப்பலாம்?
கட்டிடம் அமைக்கப்படும் பகுதி, நிலநடுக்க அபாய வளைவில் (Seismic Zone) எந்த பட்டியலில் அமைந்திருக்கிறது என்பது முக்கியம். மிதமான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஸோன் 3 (Moderate Seismic risk) பகுதியில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடியை அமைக்கலாம். ஜி.எஃப்.ஆர்.ஜி. (GFRG) பேனல்களுடன் ஆர்.சி.ஷியர் வால்ஸ் (RC Shear Walls) எனும் மற்றுமொரு தொழிற்நுட்பத்தை புகுத்தி 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டிடத்தையும் எழுப்ப முடியும்.
குறைந்த செலவில் கட்டப்படும் இந்த மாதிரியான வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி வாரியங்களும் பின்பற்ற உகந்தது. தொகுப்பு வீடுகள் கட்ட ஜி.எஃப்.ஆர்.பி. (GFRB) மிகவும் ஏற்புடையது. இருப்பினும் இவற்றை அமைப்பதில் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். இதற்கான பிரத்யேக பணியாளர்களைக் கொண்டு நல்ல முறையில் திட்டத்தை செயல்படுத்துதல் அவசியம்.
ஆடம்பரமின்றி வீடு கட்ட நினைக்கும் நடுத்தர மக்களுக்கும், அனைத்து மாநிலங்களிலுள்ள வீட்டு வசதி வாரியங்களுக்கும் இந்த தொழிற்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்.கிளாஸ் ஃபைபர் ரீ- இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டு மாயா ஜாலத்தில் கட்டுமானச் செலவு பெருமளவு குறைக்கப் பட்டிருக்கிறது. என்றாலும் இந்த தொழிற்நுட்பம் கான்ட்ரக்டர்கள், கட்டுநர்கள், பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்படவில்லை.
இந்த தொழிற்நுட்பத்திற்கு உடனடியாக அரசு அங்கீகாரமும், ஊக்கமும் அளிக்க வேண்டும். மேலும், ஜி.எஃப்.ஆர்.பி. (GFRB) பலகைகள் வெகு தாராளமாக தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தயாரிக்கப்பட வேண்டும். தேவையற்ற அஸ்திவாரச்செலவு, சுவர் கட்டுமானச் செலவு, பூச்சு வேலைக்கான செலவு இவற்றைக் குறைத்துவிட்டாலே போதும். எல்லா கட்டிடங்களுமே சிக்கனச் செலவில் கட்டப்பட்ட பசுமை வீடுகள் ஆகும்.ரூ.6 லட்சத்தில் 1,800 ச.அடியில் இரண்டு மாடி வீடு என்றதும் உங்கள் எல்லோருக்குமே ஆசை வரும். இதை எப்படி அமைப்பது? யாரை தொடர்பு கொள்வது? நமது பொறியாளர்களுக்கும், கான்ட்ராக்டர் களுக்கும் இது தெரியுமா? என பல கேள்விகள் உங்களைத் துளைத்தெடுக்கும்.
இந்த தொழிற்நுட்பத்திற்கு இன்னும் முறையான அங்கீகாரம் கிடைக்காததும், இது போன்ற வீடுகளை உருவாக்கும் திறமையான பயிற்சி பெற்ற கட்டுமானப் பணியாளர்கள் இல்லாததும் ஒரு மிகப்பெரிய குறையாகும். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இந்த தொழிற்நுட்பம் எல்லா நடுத்தர மக்களின் கனவையும் நிஜமாக்கும்.
சொந்த வீடு மாத இதழின் பயனுள்ள பழைய கட்டுரைகளைப் படிக்கவும்.., ஆன் லைனில் புதிய சொந்த வீடு மாத இதழ்களைப் படிக்கவும் சந்தா செலுத்துங்கள்....
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067493
|