அஸ்திவார தூண்களை தாங்கும் மண் அடுக்குகள்

24 ஜனவரி 2024   05:30 AM 21 ஜூன் 2019   02:44 PM


சொந்தமாக வீடு கட்டுவோர் இரண்டு, மூன்று தளங்கள் உள்ள கட்டடங்களை கட்டும்போது, அதிக ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அஸ்திவாரம் அமைப்பதில்லை. பொருளாதார ரீதியாக இதை கவனிக்கும் உரிமையாளர்கள், மேலோட்டமாக பள்ளம் எடுத்து, அதில் அஸ்திவாரம் அமைத்துவிடுகின்றனர். 

இவ்வாறு அமைக்கப்படும் அஸ்திவாரங்களை நம்பி கட்டப்படும் கட்டடம், நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டும் எனில், அதற்கு சில அடிப்படை விஷயங்களை கட்டாயமாக கவனிக்க வேண்டும்.குறிப்பாக, அஸ்திவார தூண் நிறுத்தப்படும் இடம் எத்தகையது, அது காலநிலைக்கு ஏற்ப எத்தகைய மாற்றங்களை அடையும் என்பதையும் கவனிக்க வேண்டும். 

மண்ணின் தன்மை, மனையின் நீர் மட்டம், கட்டடத்தின் வகை, ஒட்டுமொத்த சுமை ஆகியவற்றை பொறுத்து, கடைக்கால் குழியின் நீளம், அகலம், ஆழம், கட்டடத்திற்கு கட்டடம் மாறுபடும்.இதில், மேல் அடுக்கு மண் குறித்த சில விrயத்தில் நடைமுறை ரீதியாக எழும் பிரச்னைகளை யாரும் கவனிப்பதில்லை. 
நீங்கள் கட்டடம் கட்ட தேர்வு செய்த நிலம், இதற்கு முன் விவசாய நிலமாகவோ, நீர் நிலையை ஒட்டிய பகுதியாகவோ, நீர் நிலையை ஒட்டிய பகுதியாகவோ இருந்தால், அதில் மண் அடுக்குகள் உறுதியாக இருக்கும் என்று கூற முடியாது.

அந்தப் பகுதியின் மண்ணின் தன்மையை பற்றி ஆராய வேண்டும். ஒவ்வொரு மண்ணின் தன்மையும், ஒவ்வொரு விதமாக கட்டடத்தை தாங்கும் தன்மை கொண்டவை. எனவே, மண்ணின் தாங்கு திறனை பொறுத்தே கட்டடத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மண்ணின் தாங்கு திறனில் குறைபாடு இருந்தால், கட்டடத்தில் சிக்கல் வந்துவிடும்.

விவசாய நிலம் எனில், அதில் ஆண்டில் சில மாதங்கள் தண்ணீர் தேங்கி இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தேங்கும் நீர், மெல்ல நிலத்தில் இறங்கி மண் அடுக்குகளுக்குள் ஊடுருவி இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, இத்தகைய சூழலில், ஈர தன்மை உள்ள மண் அடுக்கை நம்பி எந்த சூழலிலும், புதிய கட்டடத்துக்கான அஸ்திவார தூண்களை அமைக்காதீர். இது போன்ற மண்ணில் தாங்கு திறனை விட, மிக வலுவான அஸ்திவாரம் அமைப்பதே நல்லது.

கட்டுமானப் பணியை துவங்கும் போது, விவசாய நிலத்தின் மேல் மட்ட மண் பரப்பை மறைக்கும் வகையில், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் கொட்டப்பட்டு இருக்கும். நீங்களும், அதை பார்த்து அப்படியே நம்பி பணிகளை மேற்கொண்டால், பிற்காலத்தில் கட்டடம் விபத்துகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். எனவே, சிஷீய கட்டடங்களுக்கான அஸ்திவாரம் அமைக்கும் போது, அதற்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் தரை மட்டத்தில் இருந்து, 15 அடி ஆழத்துக்கு உள்ள மண் அடுக்குகள் குரித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

இப்பகுதியின் உறுதி தன்மை, ஈர தன்மை குறித்து முறையாக பரி சோதனை செய்யாமல், வீடு கட்டும் பணிகளை எந்த சூழலிலும் கட்டட வேலைகளை துவங்கக்கூடாது.
 மழை, வெள்ளம், நிலநடுக்கம் என, எந்த இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும், அதை தாங்கும் வகையில் அஸ்திவாரம் இருக்க வேண்டும். அதற்கு மண்ணின் தன்மையை ஆராய வேண்டும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067542